Sunday, May 1, 2016

Fwd: 02-5-2016 “Naaloru Kalavazhi Narpathu” from Avvai Tamil Sangam



02-5-2016 "Naaloru Kalavazhi Narpathu" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

 

 

 

அவ்வை தமிழ்ச் சங்கம்,

சித்திரை–19(திங்கள்), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Blogs: http://naalorukalavalinarpathu.blogspot.in/

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

களவழி நாற்பது – 29

கடி காவில் காற்று உற்று எறிய, வெடி பட்டு,

வீற்று வீற்று ஓடும் மயில் இனம்போல், நால் திசையும்

கேளிர் இழந்தார் அலமருப-செங் கண்

சின மால் பொருத களத்து.

விளக்கம்

சோழன் சினம் கொண்ட திருமால் போன்று போரிட்ட களத்தில், காற்று கடுமையாக வீசியதால் சோலையில் இருந்த மயில் கூட்டம் பயந்து ஒவ்வொரு திசை நோக்கி ஓடுவது போல, போரில் இறந்துபட்ட வீரர்களின் மனைவிமார்கள் தம் கணவரின் உடல்களைத் தேடி நான்கு திசைகளிலும் ஓடி அலைந்தனர்.

பொருள்

கேளீர் – உறவினர், செங்கண்- சிவந்த கண்களையும், சினம்-வெகுளியையுமுடைய, மால்-செங்கட்சோழன், பொருத களத்து போர் செய்த களத்தில், கடிகாஇல்-மரங்கள் செறிந்த சோலையில், காற்று உற்று எறிய-காற்று மிக்கு எறிதலால், வெடிபட்டு-அஞ்சி, வீற்று வீற்று ஓடும்- வேறு வேறாக ஓடும், மயில் இனம் போல் -மயிலின் கூட்டம்போல், நால்திசைஉம் நான்கு திசையிலும், கேளிர் இழந்தார்- கொழுநரையிழந்த மகளிர், அலறுப: அலறாநிற்பர்.

தெரியுமா உங்களுக்கு !   

லியோனார்டோ டா வின்சி (  Leonardo da Vinci, ஏப்ரல் 15, 1452 - மே 2, 1519 )

·         புகழ் பெற்ற இத்தாலிய மறுமலர்ச்சிக் கட்டிடக்கலைஞரும், கண்டுபிடிப்பாளரும், பொறியியலாளரும், சிற்பியும், ஓவியரும் ஆவார். ஒரு பல்துறை மேதையாகக் கருதப்பட்டவர்.

·         "கடைசி விருந்து" (The Last Supper), "மோனா லிசா" (Mona Lisa) போன்ற ஒவியங்கள் உலகப் புகழ் பெற்றவை.

·         இவருடைய 17 ஓவியங்கள் மட்டுமே இன்று தப்பியுள்ளன. சிற்பங்கள் எதுவும் அறியப்படவில்லை.

·         இவருடைய கலைத்துவ வேலைகளிலும் பார்க்க அதிக கவர்ச்சியுடையனவாக, இவரது, அறிவியல் மற்றும் பொறியியல் ஆய்வுகள் அமைந்தனவெனலாம்.

·         இவ்வாய்வுகள் குறிப்புகளாகவும் படங்களாகவும் சுமார் 13,000 பக்கங்களில், குறிப்புப் புத்தகங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இடதுகையால் எழுதுபவர், வாழ்நாள் முழுதும் கண்ணாடி விம்ப எழுத்துக்களையே பயன்படுத்திவந்தார்.மேலும் படிக்க

மே தினக் கவிதை!

வேர்வையின் துளியது விழுகின்ற மண்ணெல்லாம்

      வெற்றியின் தேவதை வசிக்கின்ற தலமாகும்!

போர்த்திட்ட பசுமையாய் பூத்திடும் பூமியில்

      பொதுமையின் சித்தாந்தம் பொங்கிட நலமாகும்!

கார்முகில் உழைப்பினால் கடும்மழை பொழிவாக

      கருத்தோடு உழைத்திடு காண்பது வளமாகும்!

ஏர்முனை பிடித்திடும் ஏழ்மையின் தோழனும்

      இவ்வுலக அச்சாணி இயக்கத்தின் பலமாகும்!

 

நாள்தோறும் உழைப்பினால் நலிவுற்ற தொழிலாளி

      நலமுடன் வாழ்ந்திட நடத்தினர் போராட்டம்

 தோள்தட்டி துவங்கிய தோழர்கள் கோரிக்கை

      தொடர்ந்திட உலகெலாம் துளிர்த்தன ஆர்ப்பாட்டம்!

கேள்விகள் கேட்டிட கிடைத்தது வெற்றியே

       கேடில்லா வாழ்வாலே கண்டனர் நீரோட்டம்!

நாள்தோறும் எட்டுமணி நலமுடன் பணியாற்றி

       நாட்டுயர்வை கொண்டது தொழிலாளர் தேரோட்டம்!

 

செந்நிற குருதியே செழுமையின் அடையாளம்

        ஜெகமெலாம் செழிக்கட்டும் சிரித்தாடும் கொடியோடு!

சிந்தனை மின்னல்கள் சிறகென அசைந்திட

        சந்தன  வாசமாய் சரித்திர நடைபோடு!

உந்திடும் செய்கையே உழைப்பென நின்றாட

        உன்னாலே உருவாகும் உயர்வாக நம்நாடு!

முந்தைய காலத்து முழுமையின் உழைப்பாலே

        முன்னேற்றம் கண்டிட மேதினம் கொண்டாடு!

                             -ப.கண்ணன்சேகர், திமிரி

                                9894976159

செய்திகள்   

ஆடிட்டர் தாக்கப்பட்ட வழக்கு: காஞ்சி ஜெயேந்திரர் விடுதலை- தினமலர்

தலைநகர் டெல்லியில் இன்று முதல் பெட்ரோல், டீசல் டாக்ஸிகளை இயக்க தடை: உச்ச நீதிமன்றம் உத்தரவு- தி இந்து

தமிழக தேர்தல்:இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு.  -  தினமணி

மணமகன் /மணமகள் தேவை     

Karthick Nivas Ramdoss, DOB: 07/04/1990. Height 5"4', Chettiar/BTech IIT(Kanpur), MBA IIM(Lucknow), Consultant in Mumbai/brought up in Jaipur. Bharat matrimony/tamilmatrimony ID:  M4245385. For further details contact: 9828156027.

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

20/05/2016

to

22/05/2016

 

Sri Devi Kamakshi Mandir, Aruna Asaf Ali Marg, New Delhi

Sri Maha Rudra Yagnam

Sri Devi Kamakshi Mandir, New Delhi

011-26867240

011-26520202

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

 


--

---
You received this message because you are subscribed to the Google Groups "Dinamorukural" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to dinamorukural+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

No comments:

Post a Comment