Thursday, May 19, 2016

20-5-2016 “Naaloru Kalavazhi Narpathu” from Avvai Tamil Sangam

 

20-5-2016 "Naaloru Kalavazhi Narpathu" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

 

 

 

 

 

 

அவ்வை தமிழ்ச் சங்கம்,

வைகாசி -07(செவ்வாய்), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Blogs: http://naalorukalavalinarpathu.blogspot.in/

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

வாக்களித்து புதிய சட்டசபை உருவாக்கிய அனைவருக்கும் அவ்வை தமிழ்ச் சங்கத்தின் நன்றிகள்.

புதிய சட்டமன்ற உறுப்பினர்கள்

மற்றும்

நமது முதல்வர் புரட்சி தலைவி செல்வி ஜெயலலிதா அவர்களுக்கும்  எங்களின் பாராட்டுக்கள்

களவழி நாற்பது – 40

 

வெள்ளி வெண் நாஞ்சிலால் ஞாலம் உழுவனபோல்,
எல்லாக் களிறும் நிலம் சேர்ந்த-பல் வேல்,
பணை முழங்கு போர்த் தானைச் செங் கண் சின மால்
கணை மாரி பெய்த களத்து.

விளக்கம்

சிவந்த கண்களை உடைய பாண்டியன் மழை போல் அம்புகள் பெய்த போர்க்களத்தில், காயம்பட்ட யானைகள் தந்தங்களோடு கூடிய முகங்களைத் தரைமேல் சாய்த்துக் கிடந்தன. அக்காட்சி உழவர்கள், வெள்ளியால் செய்யப் பெற்ற வெண்மைநிறக் கலப்பைகளைக் கொண்டு நிலத்தை உழுவது போல் தோன்றியது..

பொருள்

பல்வேல்- பல வேலினையும், பணை முழங்கு - முரசு முழங்காநின்ற, போர் தானை - போர்ச்சேனையையும், சினம் கோபத்தையு முடைய, செங்கண்மால் - செங்கட்சோழன், கணைமாரி - அம்பு மழை, பெய்த களத்து - பெய்த போர்க்களத்தில், வெள்ளி-வெள்ளியாற் செய்த, வெள்நாஞ்சிலால் - வெள்ளிய கலப்பையால் ஞாலம் உழுவனபோல் - நிலத்தை யுழுதல்போல, களிறு எல்லாம் - யானைகளெல்லாம், நிலம் சேர்ந்த (முகங்கவிழ்ந்து) நிலத்தைச் சேர்ந்தன எ-று.யானையின் வெண்கோடுகள் வெள்ளிநாஞ்சில் போன்றன மாரி பெய்தவழி நிலம் உழுதலாகிய செயல் நினைப்பிக்கப்பட்டது

 

தெரியுமா உங்களுக்கு !    தமிழ் அன்பர்களுக்கு ஒரு நல்ல செய்தி

 

·         Applications are invited for the following posts in DTEA Sr. Sec. Schools (Govt. Aided Linguistic Minority English Medium Institutions), New Delhi:

·         PGT (Commerce) -02(UR), PGT (Biology) - 02 (UR), PGT (Chemistry) -02(UR), PGT (History) – 02(UR), PGT (Physics) – 01(UR), PGT (Pol. Science) – 02(UR), PGT (Com. Science) – 02(UR).TGT (Mathematics) - 05(UR),TGT(Hindi) – 05(UR) ,Special Education Teacher – 05(UR), Drawing Teacher - 01(UR), Assistant Teacher (Primary) – 25(UR

·         Age relaxation for all categories including differently abled persons and other conditions for eligibility are  applicable as per recruitment rules of Directorate of Education, Govt of NCT of Delhi

·         Completed applications should reach "The Secretary, DTEA (Regd.), C/o DTEA Sr. Sec. School, Lodi Estate, New Delhi – 110003" on or before 28.05.2016 upto 4.00 p.m. along with self attested testimonials by post or to drop in the box kept for the purpose in the DTEA (Regd.), Office at Lodi Estate, New Delhi.

·         மேலும் விபரங்களுக்கு இந்த இதழுடன் உள்ள இணைப்பை பார்க்கவும்( For more information please see attachments- Vacancy details and Application form)

 

 

செய்திகள்   

 

அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், இன்று மாலை எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம்  - தினமணி

புதுச்சேரியில் பேரவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றுளள காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசு வரும் 23-ம் தேதி ..... - தினமணி

முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து  – தி இந்து                    

நடுக்கடலில் விழுந்து எகிப்து விமானம் விபத்துக்குள்ளானது: 66 பேர் பலி ... தி இந்து

5 மாநில தேர்தல் முடிவுகள் எதிரொலி: மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த நடவடிக்கை: மல்லிகார்ஜுனகார்கே  ... தினமணி

 

 மலரும் நல்லாட்சிக்கு மனமுவந்த வாழ்த்துக்கள்- கவிதை

 

நல்லாட்சி மலரட்டும் நன்மைகள் நடக்கட்டும்
       நாநயம் சிறக்கட்டும்  நற்பணி தொடரட்டும்
சொல்லியது கிடைக்கட்டும்  சொல்லாமல் செய்யட்டும்
       சுமையது குறையட்டும்  சுணங்காமல் மலரட்டும்
புல்பூண்டு முளைக்கட்டும்  புவியெலாம் செழிக்கட்டும்
       புனிதங்கள் பொழியட்டும் புறம்பேச்சு ஒழியட்டும்
இல்லாமை மாறட்டும்  இலவசங்கள் மறையட்டும்
       இலக்கியம் வளரட்டும்  இன்தமிழ் புலரட்டும்
சத்தியம் நிலைக்கட்டம்  சமத்துவம் நிலவட்டம்
       சாதனை தொடரட்டும்  சரித்திரம் பேசட்டும்
முத்திரை பதிக்கட்டும்  மும்மாரி பொழியட்டும்
       முடங்காமல் மிளிரட்டும் முழுமையாய் ஒளிரட்டும்
வித்தகம் படைக்கட்டும்  விலைவாசி குறைக்கட்டும்
       வறுமைகள் ஒழிக்கட்டும் வளமெலாம் நிறையட்டும்
சுத்தமே தழைக்கட்டும் சுகவாழ்வு தவழட்டும்
       சுயநலம் ஒழிக்கட்டும்  சொன்னதை செய்யட்டும்
மதுவினை படிபடியாக ஒழிக்கட்டும்  மயக்கமே தெளியட்டும்
       மனைவளம் பெருகட்டும்  மனமெலாம் வாழ்த்தட்டும்
முதுமையும் சிரிக்கட்டும் முன்னேற்றம் காணட்டும்
       முகிலென பொழியட்டும்  முல்லையென மணக்கட்டும்
பொதுமையே பூக்கட்டும்  புகழுரை சேர்க்கட்டும்
       புதுவாழ்வு தெரியட்டும்  பொய்மைகள் மறையட்டும்
குதுகலம் கொழிக்கட்டும்  கொடுமைகள் ஒழியட்டும்
       குடிமக்கள் வாழ்த்தட்டும்  கொற்றவர் வாழட்டும்

                                                            நன்றி -. திமிரி சேகர்

 

நம்மை சுற்றி

 

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

 

20/05/2016

to

22/05/2016

 

Sri Devi Kamakshi Mandir,         Aruna Asaf Ali Marg, New Delhi

Sri Maha Rudra Yagnam

Sri Devi Kamakshi Mandir,

New Delhi

011-26867240

011-26520202

 

22/05/2016

சங்கர மடம். செக்டார்- 49. நொய்டா.

ஸ்ரீ சந்திரசேகர ஜெயந்தி.

ஹோமம் at 7am and தீபராதனை .

சங்கர மடம்

9818504858

 

29/05/2016

Vasuki Auditorium,      Lok kala Manch, Lodhi road .   

New Delhi

Discourse on "Anjaneya Prabhavam" by Mrs Manjula Ramesh( Editor Snegithi and Gyana Aalayam)

Sri Hyagriva and Lok Kala Manch

9811413225 and 011- 24644421

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

 


 

No comments:

Post a Comment