Thursday, May 5, 2016

06-5-2016 “Naaloru Kalavazhi Narpathu” from Avvai Tamil Sangam

06-5-2016 "Naaloru Kalavazhi Narpathu" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

 

 

 

 

 

அவ்வை தமிழ்ச் சங்கம்,

சித்திரை–23(வெள்ளி), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Blogs: http://naalorukalavalinarpathu.blogspot.in/

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

களவழி நாற்பது – 33

பொய்கை யுடைந்து புனல்பாய்ந்த வாயெல்லாம்
நெய்த லிடையிடை வாளை பிறழ்வனபோல்
ஐதிலங் கெஃகி னவிரொளிவா டாயினவே
கொய்சுவன் மாவிற் கொடித்திண்டேர்ச் செம்பியன்
தெவ்வரை யட்ட களத்து

விளக்கம்

வலிமையான குதிரை பூட்டிய கொடி பொருந்திய திண்மையான தேரினை உடைய சோழன் போரிட்ட களத்தில், கரையை உடைத்துக் கொண்டு வெளியேறும் பொய்கை நீர் வெள்ளத்தில் நெய்தல் பூக்களுக்கு நடுவே வாளைமீன் அசைந்து புரள்வது போல், போர்க்களத்தில் வழிந்தோடும் இரத்த வெள்ளத்தில் மிதக்கும் வேலின் தலைப்பகுதிகளுக்கு நடுவே வாள்கள் மிதந்து சென்றன.

பொருள்

கொய் - கத்திரித்த, சுவல் - புறமயிரையுடைய, மா இன் -குதிரையினையும், கொடி - கொடிகட்டிய, திண் தேர் - வலிய தேரினையுமுடைய, செம்பியன் - செங்கட்சோழன், தெவ்வரை - பகைவரை, அட்ட களத்து - கொன்ற போர்க்களத்தில், பொய்கை உடைந்து - பொய்கைக் கரையுடைதலால், புனல் பாய்ந்த - (அதன்கண்ணுள்ள) நீர்பரந்த, வாய் எல்லாம் - இடமெல்லாம், நெய்தல் - (மலர்ந்த) நெய்தல் பூக்களின், இடை இடை - நடுவே நடுவே, வாளை பிறழ்வனபோல் - வாளை மீன்கள் பிறழ்தல்போல, ஐது இலங்கு - அழகியதாய் விளங்கா நின்ற, எஃகுஇன் - வேலோடு, அலர் ஒளி - விளங்கும் ஒளியையுடைய, வாள் தாயின வாள் பறந்தன எ-று.

ஐது: அஃறிணை யொன்றன்பாற் படர்க்கைக் குறிப்பு வினைமுற்று எச்சமாய் இலங்கு என்னும் காலங்கரந்த பெயரெச்சங்கொண்டது. ஐ: பகுதி, து:ஒன்றன்பால் விகுதி. தாயின: அஃறிணைப் பலவின்பாற் படர்க்கை இறந்தகால வினைமுற்று; தாவு:பகுதி, இன்:இடைநிலை, வகரம் யகரமாய்த் திரிந்தது

தெரியுமா உங்களுக்கு !   

·         அவ்வை தமிழ்ச்சங்கம் ஒரு நாள் சுற்றுலா ஏற்பாடு செய்யவுள்ளது.

·         நீங்கள் சுற்றுலா மற்றும் இயற்க்கையை ரசிக்கும் ஆர்வம் கொண்டவரா?

·         உங்களின் எதிபார்ப்புக்கு ஏற்ற சுற்றுலா இடம்/தலம் எது?

·         உங்களுடன் எத்தனை நபர்கள் கலந்து கொள்வார்கள்?

·         லாபம் இல்லா கட்டணம் வசூலிக்கப்படும் உங்களின் நன்மைக்காக..

·         ஏழு நாட்களுக்குள் உங்கள் விருப்பத்தை எங்களுக்கு மின்னஞ்சல் வழியாக தெரியபடுத்தவும்.

வேட்பாளருக்கு ஒரு வேண்டுகோள்" கவிதை.


ஆளுக்கொரு தலைவரென அரசியலில் காணலாம்
                       ஆனாலும் முதல்வரென ஒருவரே ஆகலாம்
நாளுமொரு கட்சியென நாட்டினிலே உதிக்குது
                       நடப்பதென்ன வணிகமா நல்லமனம் பதைக்குது
மூளுகின்ற பிரச்சாரம்  மூட்டுவது கலகமே
                      முறையாக பேசினால் முரண்படாது உலகமே
வாளும்கையும் போலவே வார்த்தைகளை வீசினர்
                        வாக்குறுதி இலவசங்கள் வகைவகையாய் பேசினர்!
நேற்றுவரை எதிரியும் இன்றுமுதல் நண்பனே
                       நெருக்கடியின் கூட்டணியால் நொஞ்சானும் கொம்பனே
தூற்றலும் தோழமையும் தொடர்வதா ஆரோக்கியம்
                      தோற்றாலும் வைத்திடு தொலைந்திடாத வைராக்கியம்
போற்றலுக்கு உரியது பொன்னான மக்களாட்சி
                     பொதுமக்கள் நலனையே பேசவேண்டும் மனசாட்சி!
ஏற்றதொரு பதவிக்கு இரவுபகல் பாடுபடு
                     எளியோரின் உயர்வுக்கு என்றுமே தோளைக்கொடு!
பேரறிஞர் பெருந்தலைவர் பேச்சியினைக் கற்றிடு
                      பிறர்போற்றும் கக்கனையும் பின்பற்றி நடந்திடு
பாராட்டு புகழென்று பதவியில் மயங்காதே
                       பணிவான சேவகனாய் பணியாற்ற தயங்காதே
வேராக வளர்ந்திடும் உன்வாக்கு நிலவரம்
                        வேண்டும்போது வருவதால் விளைவதோ கலவரம்!
சீரான சேவைக்கு சிறப்பான வெற்றிதான்
                       செல்வாக்கு கூடிவரும்  உன்னையே சுற்றிதான்!

-       ப.கண்ணன்சேகர்

செய்திகள்   

பாக். பயிற்சியாளர் பதவி: நிராகரித்தார் ஸ்டூவர்ட் லா – தினமணி

வீரப்பன் வாழ்க்கையை சித்திரிக்கும் ஹிந்தி திரைப்படம்: திரையரங்குகளில் 27-இல் வெளியீடு – தினமணி

தனியார் மருத்துவக் கல்லூரிகள் தனியாக நுழைவுத் தேர்வு நடத்த அனுமதி இல்லை: உச்ச நீதிமன்றம் மீண்டும் திட்டவட்டம் – தினமணி

இறுதிக்கட்ட சட்டப்பேரவைத் தேர்தல்: மேற்குவங்கத்தில் 84% வாக்குப்பதிவு தி இந்து

டீசல் கார்களுக்கு தடை விதித்தால் பிபிஓ- நிறுவனங்கள் வெளியேறும்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்- தி இந்து

மணமகன் /மணமகள் தேவை     

Karthick Nivas Ramdoss, DOB: 07/04/1990. Height 5"4', Chettiar/BTech IIT(Kanpur), MBA IIM(Lucknow), Consultant in Mumbai/brought up in Jaipur. Bharat matrimony/tamilmatrimony ID:  M4245385. For further details contact: 9828156027.

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

20/05/2016

to

22/05/2016

 

Sri Devi Kamakshi Mandir, Aruna Asaf Ali Marg, New Delhi

Sri Maha Rudra Yagnam

Sri Devi Kamakshi Mandir, New Delhi

011-26867240

011-26520202

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

 

No comments:

Post a Comment