Tuesday, May 3, 2016

04-5-2016 “Naaloru Kalavazhi Narpathu” from Avvai Tamil Sangam


04-5-2016 "Naaloru Kalavazhi Narpathu" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

 

 

 

 

 

அவ்வை தமிழ்ச் சங்கம்,

சித்திரை–21(புதன்), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Blogs: http://naalorukalavalinarpathu.blogspot.in/

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

களவழி நாற்பது – 31

ஓடா மறவர் எறிய, நுதல் பிளந்த
கோடு ஏந்து கொல் களிற்றின் கும்பத்து எழில் ஓடை
மின்னுக் கொடியின் மிளிரும்-புனல் நாடன்
ஒன்னாரை அட்ட களத்து.
.

விளக்கம்

சோழன், அடங்காத வீரர்களைச் சிவந்த கண்களை உடைய திருமால் போன்று போரிட்ட போர்க்களத்தில் பொங்கி ஓடும் இரத்த வெள்ளமானது கொல்லப்பட்ட யானைகளின் உடல்களை இழுத்துக்கொண்டு செல்வது, மலைகளோடு மலைகள் மோதுமாறு மலைகளைத் தூக்கி எறிந்தும் உருட்டியும் இழுத்துக் கொண்டு ஓடும் வெள்ளம் போல் இருந்தது.

பொருள்

புனல் நாடன் - நீர் நாட்டையுடைய செங்கட் சோழன், ஒன்னாரை - பகைவரை, அட்ட களத்து - கொன்ற போர்க்களத்தில், ஓடா, மறவர் - புறங்கொடாத வீரர்கள், எறிய - வேலினை யெறிதலால், நுதல் பிளந்த - நெற்றி பிளந்த, கோடு ஏந்து - கொம்பினை யேந்திய, கொல் களிறு - கொல்லும் யானையின், கும்பத்து - மத்தகத்தில் (கட்டிய), எழில் ஓடை - அழகிய பட்டம், மின்னுகொடி இல் - (முகிலின்கண்) மின்னற்கொடி போல, மிளிரும் - விளங்கா நிற்கும் எ-று.

பிளந்தகளிறு ஏந்துகளிறு எனத் தனித்தனி முடிக்க, பிளந்த - பிளக்கப்பட்ட மின்னுக்கொடி - 'தொழிற் பெயரியல' என்பதனான் உகரம் பெற்றது.

தெரியுமா உங்களுக்கு !   

சர்வதேச தீயணைக்கும் படையினர் நாள்(International Fire Fighter's  Day)

·         ஐரோப்பிய நாடுகளில் மட்டுமே தீயணைப்புப் படையினர் தினம் கொண்டாடி வந்தனர்.

·         1999ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட பெரும் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும்போது 5 வீரர்கள் உயிரிழந்தனர்.

·         இவர்களை நினைவுகூருவதற்காக உலகம் முழுவதும் மின்னஞ்சல் மூலம் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.

·         இதனைத் தொடர்ந்து உலகம் முழுவதும் மே 4 ஆம் நாள் இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

"வேட்பாளருக்கு ஒரு வேண்டுகோள்" கவிதை.


ஆளுக்கொரு தலைவரென அரசியலில் காணலாம்
                       ஆனாலும் முதல்வரென ஒருவரே ஆகலாம்
நாளுமொரு கட்சியென நாட்டினிலே உதிக்குது
                       நடப்பதென்ன வணிகமா நல்லமனம் பதைக்குது
மூளுகின்ற பிரச்சாரம்  மூட்டுவது கலகமே
                      முறையாக பேசினால் முரண்படாது உலகமே
வாளும்கையும் போலவே வார்த்தைகளை வீசினர்
                        வாக்குறுதி இலவசங்கள் வகைவகையாய் பேசினர்!
நேற்றுவரை எதிரியும் இன்றுமுதல் நண்பனே
                       நெருக்கடியின் கூட்டணியால் நொஞ்சானும் கொம்பனே
தூற்றலும் தோழமையும் தொடர்வதா ஆரோக்கியம்
                      தோற்றாலும் வைத்திடு தொலைந்திடாத வைராக்கியம்
போற்றலுக்கு உரியது பொன்னான மக்களாட்சி
                     பொதுமக்கள் நலனையே பேசவேண்டும் மனசாட்சி!
ஏற்றதொரு பதவிக்கு இரவுபகல் பாடுபடு
                     எளியோரின் உயர்வுக்கு என்றுமே தோளைக்கொடு!
பேரறிஞர் பெருந்தலைவர் பேச்சியினைக் கற்றிடு
                      பிறர்போற்றும் கக்கனையும் பின்பற்றி நடந்திடு
பாராட்டு புகழென்று பதவியில் மயங்காதே
                       பணிவான சேவகனாய் பணியாற்ற தயங்காதே
வேராக வளர்ந்திடும் உன்வாக்கு நிலவரம்
                        வேண்டும்போது வருவதால் விளைவதோ கலவரம்!
சீரான சேவைக்கு சிறப்பான வெற்றிதான்
                       செல்வாக்கு கூடிவரும்  உன்னையே சுற்றிதான்!

-       ப.கண்ணன்சேகர்

செய்திகள்   

மருத்துவ பொது நுழைவுத் தேர்வுக்கு எதிரான மனுக்களுக்கு மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு – தினமணி

தமிழக சட்டப்பேரவை தேர்தல் களத்தில் 3,785 வேட்பாளர்கள்- தி இந்து

அம்மா உணவகம் பாணியில் உ.பி.யில் ரூ.10-க்கு மதிய உணவு  - தி இந்து

தமிழக தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 12700 துணை ராணுவ வீரர்கள் ...தினத்தந்தி

ஸ்டார்ட் அப் நிறுவனத்தை கூகுள் நிறுவனம் வாங்கியது – தினமல

  

மணமகன் /மணமகள் தேவை    

Karthick Nivas Ramdoss, DOB: 07/04/1990. Height 5"4', Chettiar/BTech IIT(Kanpur), MBA IIM(Lucknow), Consultant in Mumbai/brought up in Jaipur. Bharat matrimony/tamilmatrimony ID:  M4245385. For further details contact: 9828156027.

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

20/05/2016

to

22/05/2016

 

Sri Devi Kamakshi Mandir, Aruna Asaf Ali Marg, New Delhi

Sri Maha Rudra Yagnam

Sri Devi Kamakshi Mandir, New Delhi

011-26867240

011-26520202

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

 


 

No comments:

Post a Comment