Sunday, July 17, 2016

18-07-2016 “News Letter ” from Avvai Tamil Sangam


 

 

18-07-2016 "News Letter " from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

 

அவ்வை தமிழ்ச் சங்கம்,

ஆடி -03(திங்கள்), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Blogs: http://naalorukalavalinarpathu.blogspot.in/

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

 

இன்று

சர்வதேச நெல்சன் மண்டேலா தினம்

(Nelson Mandela International Day)

தென்னாப்பிரிக்காவின் நிறவெறி அரசுக்கு எதிராகப் போராடி 25ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த போராட்ட வீரர் நெல்சன் மண்டேலாவின் பிறந்த தினமான ஜூலை 18 ஆம் நாளை ஐ.நாசபை சர்வதேச நெல்சன் மண்டேலா தினமாக 2009ஆம் ஆண்டு அறிவித்தது.அமைதிக்கும்மனித உரிமைக்கும்சுதந்திரத்திற்கும் நெல்சன் மண்டேலா ஆற்றிய பணியைக் கௌரவிக்க இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.

ஐந்திணை ஐம்பது- 1 -  மருதம்_06

புதல்வனை முனிந்து, தலைமகள் மறுத்தாளைப் போல, தோழிக்கு வாயில் நேர்ந்ததுது

பெய் வளைக் கையாய்! பெரு நகை ஆகின்றே-
செய் வயல் ஊரன் வதுவை விழவு இயம்ப,
கை புனை தேர் ஏறிச் செல்வானைச் சென்று இவன்
எய்தி, இடர் உற்றவாறு!

பதவுரை  :-

பெய் - அணியப் பெற்ற, வளைக் கையாய் - வளையல்களைக் கொண்ட கைகளையுடைய தோழியே ! செய் - திருத்தப்பெற்ற, வயல் ஊரன் - மருத நிலத்து நன்செய்கள் சூழ்ந்த ஊர்க்குத் தலைவன், வதுவை விழவு - பரத்தையர் புதுமண விழாக் கொண்டாடும் பொருட்டு, இயம்ப - முழவினை ஒலிக்க, (அதனைக் கேட்டு,) கை புனை - அணி செய்யப்பட்ட, தேர் ஏறி - தேரின்மீது அமர்ந்து, (பரத்தையர்பாற் செல்ல) செல்வானை - அங்ஙனம் செல்கின்ற தலைவனை, இவன் - இந்த என் புதல்வன், சென்று - எதிர் சென்று, எய்தி - காணுதலால், இடர் உற்ற ஆறு - தலைவன் பரத்தையரின் புதுமணம் பொருந்தப் பெறாது துன்புற்ற நிலை, பெருநகையாகின்று - எனக்கு மிகுந்த நகைப்பினை யுண்டாக்குகின்றது (என்று தலைவி தோழிக்குக் கூறித் தலைவனை யேற்றுக் கொள்ளலாயினாள்.)

விளக்கம்:-

 வளையல்கள் அணிந்த கைகளையுடைய தோழியே! திருத்தப் பெற்ற மருத நிலத்து நன்செய் வயல்கள் சூழ்ந்த ஊர்க்குத் தலைவன், பரத்தையர் புதுமண விழாக் கொண்டாடும் பொருட்டுத் தேரின் மீது அமர்ந்து பரத்தையர் பால் செல்லும் போது, என் புதல்வன் எதிரே போய்ப் நின்றதால், தலைவன் பரத்தையரைப் புதுமணம் செய்ய முடியாது துன்பம் அடைந்த நிலையானது எனக்கு மிகுந்த நகைப்பினையுண்டாக்குகின்றது" என்று புதல்வனை முனிந்து தலைமகள் மறுத்தாளைப் போலத் தோழிக்கு வாயில் நேர்ந்தாள்.

செய்திகள்   

எம்பிபிஎஸ் சீட் கிடைத்துள்ள ஏழை மாணவிக்கு ஜெயலலிதா நிதி உதவி

பஞ்சாப், தில்லி, குஜராத்தில் லேசான நிலநடுக்கம்- தினமலர்

சட்டப்பேரவையில் இருந்து திமுக இனி வெளிநடப்பு செய்யாது: மு.க ...தினமணி

மத்திய அரசு அலுவலகங்களில் பாலியல் தொல்லையால் பாதிக்கும் ...தி இந்து

ராஜீவ் கொலை கைதிகள் பற்றிய வழக்கு விசாரணையை ஒருவாரகாலம் ...  

50 வயதுக்கு மேற்பட்ட ஆண் ஆசிரியர்கள் மட்டுமே பெண்கள் ... தினகரன்

 அமெரிக்காவில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 ... – தி இந்து
இனி வி மானம் ரத்தானால் இழப்பீடு
 

விமர்சகர்களுக்கு ரகுராம் ராஜன் சவால்  

விபத்துகள் என் கதையில் விசித்திரமல்ல: கமலஹாசன் அறிக்கை- தினமலர்  

கபாலி படத்தின் கட்-அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் செய்யக் ... தினகரன்

கொன்றது எப்படி… நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நள்ளிரவில் ...

டேவிஸ் கோப்பை: ஒற்றையர் ஆட்டத்தில் ரோகன் போபண்ணா வெற்றி= தினத் தந்தி

குத்துச்சண்டையில் சாம்பியன் பட்டம்: விஜேந்தர் சிங்குக்கு ... தி இந்து 

வாடகைக்கு/விற்பனைக்கு

வாடகைக்கு ---- 2 BHK with a big drawing room (for living & dining)...2 bathrooms, well ventilated & airy- well maintained portion onGround floor. Open verandah in front & back. Ample water supply. East facing.

Location- Near Sec 19 Post office, Opp. Shani bazaar. Close to both Metro stns- sec 18 & sec 16.

 only vegetarian  preferred. May contact ---- Shri  Sundararaman- 9818504858

விற்பனைக்கு
Two BHK flat in 1st floor. (2 BR, 1 Hall, 2 Attached baths, 1balcony), No. C-92-A. (Nirmal Niwas), Gali No. 3, Ground Floor :  Car Parking. Location : Ganesh Nagar-Pandav Nagar, Opp. to Mother Dairy        Plant. Delhi-92.Price : Rs. 48 (lakhs) (negotiable) Contact Person: P.R.Gowri Sankar 9810702450/9953299685

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 


 

No comments:

Post a Comment