Monday, July 11, 2016

11-07-2016 “News Letter ” from Avvai Tamil Sangam


 

11-07-2016 "News Letter " from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

 

 


                 அவ்வை தமிழ்ச் சங்கம்,



ஆனி -27(திங்கள்), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Blogs: http://naalorukalavalinarpathu.blogspot.in/

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

ஐந்திணை ஐம்பது- 1 -  மருதம்_01

 


பாணற்குத் தலைமகள் வாயில் மறுத்தது

 

கொண்டுழிப் பண்டம் விலை ஒரீஇக் கொற்சேரி
நுண் துளைத் துன்னூசி விற்பாரின், ஒன்றானும்
வேறு அல்லை,-பாண!-வியல் ஊரன் வாய்மொழியைத்
தேற, எமக்கு உரைப்பாய், நீ..

. பதவுரை  :-

பாண - பாணனே ! வியல் ஊரன் - பெரிய மருதநிலத்தூர்த் தலைவன், வாய் மொழியை - சொல்லி அனுப்பிய மொழிகளை, தேற - தெளிவாக, எமக்கு - எங்களுக்கு, உரைப்பாய் நீ - உரைக்கின்ற நீ, பண்டம் - பொருளை, கொண்டு உழி - கொள் முதல் செய்தவிடத்து, விலை ஒரீஇ - ஏற்பட்ட விலையை வேறுபடுத்து மிகுத்தி, கொல் சேரி - கொல்லர்கள் தெருவின்கண், நுண் துளை - நுட்பமான துளையினையுடைய, துன் ஊசி - ஆடை தைக்கும் ஊசியினை, விற்பாரின் - விற்கின்ற வணிகரைக் காட்டிலும், ஒன்றானும் - ஒரு விதத்திலும், வேறு அல்லை - வேறுபாடு கொண்டுள்ளாயல்லை (என்று தலைவி பாணனிடத்திற் கூறினாள்

விளக்கம்:-

 ணனே! அகன்ற மருத நிலத்து ஊர்த் தலைவன் சொல்லி விடுத்த மொழிகளைத் தெளிவாக எமக்கு எடுத்துரைப்பாய். பொருளைக் கொள்முதல் செய்தவிடத்துச் சொன்ன விலையை வேறுபடுத்தி மிகுத்துக் கொல்லர் தெருவின்கண் நுண்மையான துளையையுடைய ஊசியினை விற்கின்ற வணிகரை விட ஒருவகையிலும் நீ வேறுபடவில்லை" எனத் தலைவி பாணற்கு வாயில் மறுத்துக் கூறினாள்.

செய்திகள்   

முதல்வர் ஜெயலலிதா வீட்டுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் ...  

தீவிரவாதம் மனித குலத்திற்கு அச்சுறுத்தலாக விளங்குகிறது ... தினத் தந்தி  

பதான்கோட்டில் மீண்டும் தாக்குதல் நடத்தத் திட்டம்: எல்லையில் ...  

ஏர்செல்- மேக்சிஸ் வழக்கில் திடீர் திருப்பம்..! முன் ஜாமீன் கேட்டு ... கூகூள்

 அமெரிக்காவில் சிறையை உடைத்து வெளியேறி காவலரின் உயிரை ...

ஜாகிர் நாயக்குடன் மதவாதிகளுக்குத் தொடர்பு? வங்கதேச அரசு ... தினமணி  

மகாராஷ்டிரா அமைச்சரவை மாற்றம்: முதல்வர் பட்னாவிஸ் - பங்கஜா ... தி இந்து

அமெரிக்காவை பழிவாங்கப் போவதாக பின்லேடன் மகன் மிரட்டல் ... தி இந்து

ஜாகிர் நாயக்கின் போதனைகளை ஒளிபரப்பும் 'பீஸ் டிவி'யை ...  

வங்கி ஊழியர்கள் நாளை முதல் 2 நாள் வேலை நிறுத்தம்--- தி இந்து

யூரோ கோப்பை: போர்ச்சுகல் சாம்பியன்!  

வாடகைக்கு/விற்பனைக்கு

வாடகைக்கு ---- 2 BHK with a big drawing room (for living & dining)...2 bathrooms, well ventilated & airy- well maintained portion onGround floor. Open verandah in front & back. Ample water supply. East facing.

Location- Near Sec 19 Post office, Opp. Shani bazaar. Close to both Metro stns- sec 18 & sec 16.

 only vegetarian  preferred. May contact ---- Shri  Sundararaman- 9818504858

விற்பனைக்கு
    3 BHK+2 BATHROOMS+3 BALCONYS(ONE BIG) DDA FLAT OF1350 SQ FT IN KONDLI GHAROLI, MAYUR VIHAR PHASE III IS FOR SALE.. PL CONTACT RAMALINGAM, 09445001387

தெரியுமா உங்களுக்கு

இன்று உலக மக்கள் தொகை தினம்

(World Population Day)

உலக மக்கள் தொகை 1987ஆம் ஆண்டில் 500 கோடியானதை முன்னிட்டு ஐ.நா. சபை ஜூலை 11 ஐ உலக மக்கள் தொகை தினமாக அறிவித்தது.பெருகிவரும் மக்கள் தொகையால் வனப்பகுதிக்கும், அதில் வாழும் உயிரினங்களுக்கும் ஆபத்து ஏற்படுகிறது. மனிதர்கள் வாழ்வதற்கான இட நெருக்கடியும் ஏற்படுகிறது. இதுபோன்ற பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்கிற நோக்கில் இத்தினம் கொண்டாடப்படுகிறது.

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 


 

No comments:

Post a Comment