Monday, July 11, 2016

12-07-2016 “News Letter ” from Avvai Tamil Sangam

 

12-07-2016 "News Letter " from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

 

அவ்வை தமிழ்ச் சங்கம்,

ஆனி -28(செவ்வாய்), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Blogs: http://naalorukalavalinarpathu.blogspot.in/

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

ஐந்திணை ஐம்பது- 1 -  மருதம்_02

 

பாணற்குத் தலைமகள் வாயில் மறுத்தது

போது ஆர் வண்டு ஊதும் புனல் வயல் ஊரற்குத்
தூதாய்த் திரிதரும் பாண் மகனே! நீ தான்
அறிவு அயர்ந்து, எம் இல்லுள் என் செய்ய வந்தாய்?
நெறி அதுகாண், எங்கையர் இற்கு.

. பதவுரை  :-

போது - மலர்களில், ஆர் :- மொய்க்கின்ற, வண்டு - வண்டுகள், ஊதும் - ரீங்காரஞ் செய்கின்ற, புனல் வயல் - நீர்வளமிக்க நன்செய் நிலங்களையுடைய, ஊரற்கு - மருதநிலத்தூர்த் தலைவனுக்கு, தூது ஆய் - தூதுவனாக, திரிதரும் - அலைகின்ற, பாண்மகனே - பாணனே ! நீதான் - நீ, அறிவு - அறிவானது, அயர்ந்து - கெட்டுப்போய், எம் இல்லுள் - எங்களுடைய மனைக்கு, என் செய்ய வந்தாய் - எதற்காக வந்தாய், எங்கையர் - எமது தங்கைமாராகிய (தலைவனால் விரும்பப்பட்ட) மங்கைமாரினது, இற்கு - மனைக்கு, நெறி - வழி, அது காண் - அது என்று தெரிந்து அங்குச் செல்வாயாக (என்று தலைவி பாணனிடங் கூறினாள்.)

விளக்கம்:-

 மலர்களில் மொய்க்கும் வண்டுகள் ஒலிக்கும் நீர் வளம் மிக்க நன்செய் நிலங்களையுடைய மருத நிலத்து ஊர்த் தலைவனுக்குத் தூதனாய்த் திரியும் பாணனே! நீ அறிவு கெட்டுப்போய் எங்களுடைய மனைக்கு என்ன நன்மை செய்ய வந்தாய்? எம் தலைவனால் விரும்பப்பட்ட எம் தங்கையரான மங்கையரின் (பரத்தையர்) மனைக்குச் செல்லும் வழி அதோ இருக்கிறது. அதைக்கண்டு அங்குச் செல்வாயாக" என்று தலைவி பாணனது அறியாமையை எடுத்துக்காட்டி வாயில் மறுத்தாள். (வண்டுகள் போல் தலைவன் பலரிடம் செல்கிறான் என்று அர்த்தம்.)

செய்திகள்   

முதல்வர் ஜெயலலிதா வீட்டுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் ...தினமணி

"டெங்கு பரிசோதனை மையங்கள் 75-ஆக அதிகரிப்பு' -- தினமணி  

சுவாதி கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்' தினமணி  

குடும்பநல அறுவை சிகிச்சையில் சிறப்பிடம்: தமிழகத்துக்கு மத்திய ...தி இந்து

 தூத்துக்குடியில் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர்கள் ... தினத் தந்தி

சென்னை : சீர்த்திருத்தப் பள்ளியில் களேபரம்  

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம்: அரசியல் சாசன ...  

எய்ம்சில் படித்து வந்த தமிழகத்தின் ஜூனியர் டாக்டர் மர்ம மரணம்- தினகரன்

2வது பெண் பிரதமர்:  இங்கிலாந்தின் புதிய பிரதமர் தெரசா மே நாளை ...  

ஈகுவடாரில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவு---- தினத் தந்தி   

ஒலிம்பிக் வாய்ப்பை இழந்தார் பூனியா--- தி இந்து

பயிற்சி ஆட்டம் டிரா: மிஸ்ராவுக்கு டெஸ்ட் வாய்ப்பு ...

ஒலிம்பிக் போட்டியில் ஷரபோவா பங்கேற்க முடியாது- தினத் தந்தி  

வாடகைக்கு/விற்பனைக்கு

வாடகைக்கு ---- 2 BHK with a big drawing room (for living & dining)...2 bathrooms, well ventilated & airy- well maintained portion onGround floor. Open verandah in front & back. Ample water supply. East facing.

Location- Near Sec 19 Post office, Opp. Shani bazaar. Close to both Metro stns- sec 18 & sec 16.

 only vegetarian  preferred. May contact ---- Shri  Sundararaman- 9818504858

விற்பனைக்கு
    3 BHK+2 BATHROOMS+3 BALCONYS(ONE BIG) DDA FLAT OF1350 SQ FT IN KONDLI GHAROLI, MAYUR VIHAR PHASE III IS FOR SALE.. PL CONTACT RAMALINGAM, 09445001387

தெரியுமா உங்களுக்கு

உலகக் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தினம்

(World Day Against Child Labour)

உலகக் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தினம் 2002ஆம் ஆண்டுமுதல் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் குழந்தைத் தொழிலாளர்கள் இருந்துகொண்டுதான் இருக்கின்றனர். சட்டங்கள் இருந்தாலும் இதனை முற்றிலும் ஒழிக்க முடியவில்லை. உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான குழந்தைகள் மிகவும் ஆபத்தான வேலைகளை செய்து வருகின்றனர்.குழந்தைத் தொழிலாளர்களை அதிகம் கொண்ட நாடாக இந்தியா உள்ளது.

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 


 

No comments:

Post a Comment