Wednesday, June 15, 2016

15-06-2016 “News Letter ” from Avvai Tamil Sangam



 

15-06-2016 "News Letter " from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

 

 

 

 

 

அவ்வை தமிழ்ச் சங்கம்,

ஆனி -01 (புதன்), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Blogs: http://naalorukalavalinarpathu.blogspot.in/

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

ஐந்திணை ஐம்பது- 1 -  முல்லை _8

 முல்லை

_பருவம் கண்டு அழிந்த கிழத்திக்குத் தோழி சொல்லியது

பிரிந்தவர் மேனிபோல் புல்லென்ற வள்ளி,
பொருந்தினர் மேனிபோல், பொற்ப,-திருந்திழாய்!-
வானம் பொழியவும் வாரார்கொல், இன்னாத
கானம் கடந்து சென்றார்?

பதவுரை  :-

திருந்து இழாய் - செப்பமான அணிகலன்களை யணிந்துள்ள பெண்ணே !, பிரிந்தவர் - தலைவரைப் பிரிந்த தலைமகளிரின், மேனி போல் - வடிவம் போல, புல் என்ற - பொலிவின்றிக் காணப்பட்ட, வள்ளி - கொடிகள், பொருந்தினர் - தலைவரோடு கூடி வாழும் தலைமகளிரின், மேனிபோல் - வடிவம்போல, பொற்ப - பொலிவு பெறும்படி, வானம் பொழியவும் - மழை பெய்தலைச் செய்தும், இன்னாத - கொடிய, கானம் - காடுகளை, கடந்து - தாண்டி, சென்றார் - பிரிந்து சென்ற தலைவர், வாரார் கொல் - வரமாட்டாரா ? (என்று தோழி தலைவியை வினவினள்.)

விளக்கம்.
     "அழகிய அணிகலன்களை அணிந்துள்ள தலைவியே! காதலரைப் பிரிந்த காதலியரின் வடிவம் போலப் பொலிவின்றிக் காணப்பட்ட கொடிகள் மீண்டும் காதலரோடு கூடிவாழும் காதலியரின் வடிவம் போலப் பொலிவு பெறும்படி மழை பொழிதலைக் கண்டும் துன்பத்தைத் தருகின்ற காடுகளையெல்லாம் கடந்து பிரிந்து சென்ற நம் காதலர் வரமாட்டாரா? விரைவில் வருவார் வருந்தாதே" என்று தோழி தலைவியைத் தேற்றினாள்.

இரத்த தான தினக் கவிதை

 நதிநீர் ஓட்டத்தால் நாடெலாம் செழித்திட
      நாளத்தின் குருதியால் நன்னுடல் தழைத்திடும்!
அதிகாலை பயிற்சியால் ஆரோக்கியம் கண்டிட
      அழற்சியிலா உடலே அன்றாடம் உழைத்திடும்!
விதியினை மாற்றியே வீழ்வதை தடுத்திட
      வெள்ளையோடு சிவப்பணு வேரெனக் காத்திடும்!
நிதிபடைத்து நானிலத்தில் நிம்மதி காண்போரும்
      நிச்சயமாய் குருதியால் நலவாழ்வு வந்திடும்!
உடல்முழுக்க பிராணத்தை உந்தும்நிலை செய்திட
      உதவுகிற பெரும்பணியே ஓடுகின்ற ரத்தமே!
முடக்கிடும் கிருமிகளை முற்றிலும் அகற்றிட
      முதன்மை சேவகனாய் முயன்றிடும் ரத்தமே!
திடமென இருதய தெளிவான ஓட்டத்தை
      தினந்தோறும் தருவதும் தேகத்தில் ரத்தமே!
மடமை செய்கையாய் மாபெரும் தீமைகள்
      மானுடர் செய்வதால் மாசாகும் ரத்தமே!
கொடுத்திட குறையாது குருதியே உடலிலே
      கொடூர போதையை குடியாமல் இருந்திடு!
மிடுக்கென மேனியை மிளிர்த்திடும் குருதியை
      மெய்த்தூய்மை செய்துநீ மேலாக வைத்திடு!
அடுத்தவர் தேவைக்கு ஆரோக்கிய ரத்தமதை
      அன்பினைக் காட்டிட அறமென கொடுத்திடு!
கொடுத்திடும் தானத்தில் குருதியே சிறப்பென
      குவலயம் வாழ்த்திடும் குதுகலம் கண்டிடு!

                                       நன்றி- திரு.  சேகர்

செய்திகள்   

தொடர் மழை: கடல்சீற்றம் காரணமாக கன்னியாகுமரியில் படகு ...தினமணி   

கேரளம்: கொல்லம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குண்டுவெடிப்பு  

கவர்னர் உரையுடன் தமிழக சட்டசபை நாளை கூடுகிறது- கூகூள்

போலியோ வைரஸ் விவகாரம்: மோடி அரசு மீது காங்கிரஸ் ...

டெல்லி மாநில மந்திரி திடீர் ராஜினாமா

நொறுங்கியது விமானம்: உயிர் தப்பிய விமானி—தினமலர்

தீ மிதி சடங்கில் தந்தையின் கையில் இருந்து தவறி விழுந்த 6 வயது ...

 

விற்பனைக்கு

FOR  IMMEDIATE SALE - 2 BHK, BUILDER FLOOR IN HINDON VIHAR, SECTOR-49 NOIDA

Property Description : Newly constructed  beautifully maintained builder floor apartment with area 1010 sqm & Camera Installed at all floors for Security... Just 4 km from City Center Metro Station.Semi Modular Fitting in Kitchen. Good quality wood work....Ownership will be free hold. தொடர்புக்கு- Mr Sri ram- 8826567774

 கும்பாபிஷேகம்

அருள்மிகு சக்தி வினாயகர் திருக்கோயில், கேந்திரிய விஹார், செக்டார் 51- . நொய்டா  - வில் வரும் 2016- ஜூலை 10ந்  தேதி  மஹா கும்பாபிஷேகம்  மிக பிரமாண்டளவில் நடக்கவுள்ளது.

ஜூலை 6ந் தேதி  முதல்  விதிமுறைப்படி பூஜைகள் ஆரம்பித்து 10ந் தேதி காலை 10.15 – 11.15  மஹா கும்பாபிஷேகம் நடைபெரும்.

தாங்கள் எப்பொழுதும் போல் ஆதரவு தந்து மஹா கும்பாபிஷேத்தில் பங்கேற்று அருள்மிகு சக்தி வினாயகரின்  ஆசிகளை பெறவேண்டி கேட்டுக்கொள்கிறோம்.

பக்தகோடிகள்  மஹா கும்பாபிஷேகத்திற்க்கு  நிதி வழங்க  கீழ்கண்ட வங்கி கணக்கில் பணம் செலுத்தலாம்

Kendriya Aasthiga Samajam, A/C No.21054324426, Allahabad Bank, Sector 51, NOIDA Branch, IFSC CODE: ALLA0212345.

( Please send SMS to 8826655855  if you have donated for information.)

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 


 

No comments:

Post a Comment