Sunday, June 12, 2016

13-06-2016 “News Letter ” from Avvai Tamil Sangam

 

13-06-2016 "News Letter " from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

 

 

 

 

 

அவ்வை தமிழ்ச் சங்கம்,

வைகாசி -28(வெள்ளி), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Blogs: http://naalorukalavalinarpathu.blogspot.in/

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

ஐந்திணை ஐம்பது- 1 -  முல்லை _8

 முல்லை

பருவம் கண்டு அழிந்த தலைவிக்குத் தோழி கூறியது

பிரிந்தவர் மேனிபோல் புல்லென்ற வள்ளி,

பொருந்தினர் மேனிபோல், பொற்ப, - திருந்திழாய்! -

வானம் பொழியவும் வாரார்கொல், இன்னாத

கானம் கடந்து சென்றார்?

பதவுரை  :-

திருந்து இழாய் - செப்பமான அணிகலன்களை யணிந்துள்ள பெண்ணே !, பிரிந்தவர் - தலைவரைப் பிரிந்த தலைமகளிரின், மேனி போல் - வடிவம் போல, புல் என்ற - பொலிவின்றிக் காணப்பட்ட, வள்ளி - கொடிகள், பொருந்தினர் - தலைவரோடு கூடி வாழும் தலைமகளிரின், மேனிபோல் - வடிவம்போல, பொற்ப - பொலிவு பெறும்படி, வானம் பொழியவும் - மழை பெய்தலைச் செய்தும், இன்னாத - கொடிய, கானம் - காடுகளை, கடந்து - தாண்டி, சென்றார் - பிரிந்து சென்ற தலைவர், வாரார் கொல் - வரமாட்டாரா ? (என்று தோழி தலைவியை வினவினள்.

விளக்கம்.

அழகிய அணிகலன்களை அணிந்துள்ள தலைவியே! காதலரைப் பிரிந்த காதலியரின் வடிவம் போலப் பொலிவின்றிக் காணப்பட்ட கொடிகள் மீண்டும் காதலரோடு கூடிவாழும் காதலியரின் வடிவம் போலப் பொலிவு பெறும்படி மழை பொழிதலைக் கண்டும் துன்பத்தைத் தருகின்ற காடுகளையெல்லாம் கடந்து பிரிந்து சென்ற நம் காதலர் வரமாட்டாரா? விரைவில் வருவார் வருந்தாதே" என்று தோழி தலைவியைத் தேற்றினாள்..

செய்திகள்   

மீண்டும் முதல்வராக பதவியேற்றபின் முதல்முறையாக நாளை ...  

மு.க.ஸ்டாலினுடன் புதுச்சேரி முதல்வர் சந்திப்பு  

மாலத்தீவில் முன்னாள் துணை அதிபருக்கு 15 ஆண்டு சிறை அதிபரை ...  

ரதமர் மோடி, அதிபர் ஒபாமா நட்பறவு குறித்து சிவசேனா கிண்டல்  

புளோரிடா துப்பாக்கிச்சூடு: அமெரிக்க அதிபர் ஒபாமா கடும் ...  

ஷாங்காய் விமான நிலையத்தில் குண்டு வெடிப்பு  

 ஆளில்லா விமானம் பறந்ததால் துபாய் விமான நிலையம் ஒரு மணி ... தினத் தந்தி

உமேஷ் சச்தேவ் சாதனை:ஸ்டாலின் வேண்டுகோள்   

கல்லணையில் இறங்கி போராட்டம் : விவசாயிகள் மீது போலீஸ் தடிஅடி

வாடகைக்கு

Flat in Udaigiri-II block B-10 Sector 34, NOIDA is readily available for Rent Vegetarian preferred. தொடர்புக்கு திரு ஜெய்சங்கர்- 9790924825

 

கும்பாபிஷேகம்

அருள்மிகு சக்தி வினாயகர் திருக்கோயில், கேந்திரிய விஹார், செக்டார் 51- . நொய்டா  - வில் வரும் 2016- ஜூலை 10ந்  தேதி  மஹா கும்பாபிஷேகம்  மிக பிரமாண்டளவில் நடக்கவுள்ளது.

ஜூலை 6ந் தேதி  முதல்  விதிமுறைப்படி பூஜைகள் ஆரம்பித்து 10ந் தேதி காலை 10.15 – 11.15  மஹா கும்பாபிஷேகம் நடைபெரும்.

தாங்கள் எப்பொழுதும் போல் ஆதரவு தந்து மஹா கும்பாபிஷேத்தில் பங்கேற்று அருள்மிகு சக்தி வினாயகரின்  ஆசிகளை பெறவேண்டி கேட்டுக்கொள்கிறோம்.

பக்தகோடிகள்  மஹா கும்பாபிஷேகத்திற்க்கு  நிதி வழங்க  கீழ்கண்ட வங்கி கணக்கில் பணம் செலுத்தலாம்

Kendriya Aasthiga Samajam, A/C No.21054324426, Allahabad Bank, Sector 51, NOIDA Branch, IFSC CODE: ALLA0212345.

( Please send SMS to 8826655855  if you have donated for information )

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 


 

No comments:

Post a Comment