Friday, June 10, 2016

10-06-2016 “News Letter ” from Avvai Tamil Sangam



 

10-06-2016 "News Letter " from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

 

 

 

 

 

அவ்வை தமிழ்ச் சங்கம்,

வைகாசி -28(வெள்ளி), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Blogs: http://naalorukalavalinarpathu.blogspot.in/

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

நாளை -----   

எஃப்.எம். வானொலி ஒலித்த நாள் (F.M. Radio Transmission Day)

பல நிகழ்ச்சிகளை பண்பலை வானொலி நிலையங்கள் காலை தொடங்கி நள்ளிரவு வரை ஒலிபரப்புகின்றன. வானொலியின் இரைச்சலைக் குறைத்து எஃப்.எம். ஒலிபரப்பு அறிமுகம் ஆனது. இதனை எட்வின் ஆர்ம்ஸ்ட்ராங் என்கிற அமெரிக்கர் கண்டுபிடித்தார். 1933ஆம் ஆண்டில் எஃப்.எம். ரேடியோவுக்கான காப்புரிமை பெற்று 1935, ஜூன் – 11 அன்று பொதுமக்களுக்காக ஒலிபரப்பப்பட்டது.

ஐந்திணை ஐம்பது- 1 -  முல்லை _7

 முல்லை

_பருவம் கண்டு அழிந்த கிழத்திக்குத் தோழி சொல்லியது

தேரோன் மலை மறைந்த செக்கர் கொள் புன் மாலை
ஊர் ஆன்பின் ஆயன் உவந்து ஊதும், சீர்சால்,
சிறு குழல் ஓசை, - செறிதொடி! - வேல் கொண்டு
எறிவது போலும் எனக்கு

பதவுரை  :-

செறிதொடி - கைகளில் நிறைந்த வளைகளைக் கொண்ட பெண்ணே ? தேரோன் - ஒற்றையாழித் தேரவனாகிய சூரியன், மலை - மேற்கு மலைத்தொடரில், மறைந்த - மறைதலாலுண்டாகிய, செக்கர் கொள் - செவ்வானத்தைக் கொண்டுள்ள, புன்மாலை - சிறுபொழுதாகிய மாலைக்காலத்தே, ஆர் ஆன் பின் - அருமையான பசுக்கூட்டங்களின் பின்னாக வரும், ஆயன் - இடையன், உவந்து - மகிழ்ச்சிமிக்கவனாய், ஊதும் - ஊதும்படியான, சீர்சால் - சிறப்புமிக்க, சிறுகுழல் - புல்லாங் குழலினது, ஓசை - இனிய ஓசையானது, எனக்கு -, வேல் கொண்டு - படைகொண்டு, எறிவது போலும் - தாக்குவதுபோல வருத்தத்தைத் தாராநின்றது.

விளக்கம்.

கைகளில் நிறைந்த வளையல்களைக் கொண்டுள்ள தோழியே, ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் வந்த கதிரவன் மாலையில் மேற்குத் திசையில் மறைந்த காலத்து சிவந்ததாய்க் காணப்படும் மாலைப்பொழுதில் அருமையான பசுக்கூட்டங்களின் பின்னால் வரும் இடையன் மகிழ்ச்சியோடு ஊதுகின்ற சிறு குழலின் இனிய ஓசையானது எனக்கு வேல் கொண்டு தாக்குவதுபோல் மிகுந்த துன்பத்தைத் தருகின்றது..

தெரியுமா உங்களுக்கு- தமிழ்த் தொண்டு

திரு. இராமசாமி நினைவுப்(SRM) பல்கலைக்கழகம், தமிழ்ப்பேராயம் - Thamizh Academy என்னும் ஓர் அமைப்பினை நிறுவித் தமிழ் மொழி, இலக்கியம், கலை, பண்பாடு, ஆய்வு ஆகியவற்றின் வளர்ச்சிக்கான பல திட்டங்களைச் செயல்படுத்திவருகிறது. இணையவழியிலான தமிழ்க்கல்வி, தமிழ்ச்சமயக்கல்வி, கணினித்தமிழ்க் கல்வி ஆகிய துறைகளின்வழி பட்டயப் படிப்புகள், சான்றிதழ்ப் படிப்புகளை வழங்குவதோடு அரிய நூல்களைப் பதிப்பு செய்யும் பணியையும் செய்துவருகிறது. இவற்றோடு தமிழ்ப் படைப்பாளிகள், திறனாய்வாளர்கள், சாதனைகள்புரிந்த பேரறிஞர்கள் ஆகியோர்க்கு ரூ.20,50,000 பெறுமான 11 வகை விருதுகளை 2012, 2013, 2014, 2015 ஆகிய 4  நான்கு ஆண்டுகளாக வழங்கிவந்துள்ளது. இவ்வாண்டு முதல் முதல் இவ்விருதுகளின் விதிகளில் சில மாற்றங்களும் புதிய விருதுச் சேர்க்கையும் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறாகத் தமிழ்ப்பேராய விருதுகள் 2016 முதல் 14பேருக்கு 22 இலட்சம் ரூபாய் தொகையுடைய விருதுகள் வழங்கப்படவுள்ளன. இவ்வாறு வழங்கப்படவிருக்கும் விருதுகளும் தொகையும் விதிமுறைகளும் விளம்பரக் குறிப்பாக இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

பரிந்துரைகளும் நூல்களும் வந்து சேரவேண்டிய இறுதி நாள் 30.06.2016.

   பரிந்துரைகளையும் நூல்களையும் அனுப்பவேண்டிய முகவரி:

துறைத்தலைவர், தமிழ்ப்பேராயம்,

மைய நூலகக் கட்டடம், நான்காம் தளம்,

SRM பல்கலைக்கழகம், காட்டாங்குளத்தூர் - 603 203.

தொலைபேசி: 044 27417375. மின்னஞ்சல்: tamilperayam@srmuniv.ac.in 

செய்திகள்   

தொடர் மழை: கடல்சீற்றம் காரணமாக கன்னியாகுமரியில் படகு ...    

: பீனிக்ஸ் பறவையைப் போல மீண்டு வருவேன்    

தேர் சக்கரத்தில் சிக்கி வலது காலை இழந்த பெண்ணுக்கு 5 தையல் ...  

ரூ.570 கோடி பறிமுதல் விவகாரம்: 2 வாரத்தில் பதிலளிக்க சிபிஐ-க்கு ...  

அணுசக்தி விநியோக நாடுகள் குழுவில் இந்தியா இடம்பெற ...  

"திட்டமிட்டப்படி கர்நாடக மாநிலங்களவைத் தேர்தல்'

ஜூலை 2ஆம் தேதி பொதுத் தேர்தல் இந்திய வம்சாவளியினர் 5 பேர்

நூற்றாண்டில் சிறந்தவர்கள் பட்டியலில் சென்னை தொழிலதிபர்

கோழி வளர்ப்பில் ஆர்வம் காட்டும் கோடீஸ்வரர் பில் கேட்ஸ்--- பிபிசி

வாடகைக்கு

Flat in Udaigiri-II block B-10 Sector 34, NOIDA is readily available for Rent Vegetarian preferred. தொடர்புக்கு திரு ஜெய்சங்கர்- 9790924825

 

 

அருள்மிகு சக்தி வினாயகர் திருக்கோயில், கேந்திரிய விஹார், செக்டார் 51- . நொய்டா  - வில் வரும் 2016- ஜூலை 10ந்  தேதி  மஹா கும்பாபிஷேகம்  மிக பிரமாண்டளவில் நடக்கவுள்ளது.

ஜூலை 6ந் தேதி  முதல்  விதிமுறைப்படி பூஜைகள் ஆரம்பித்து 10ந் தேதி காலை 10.15 – 11.15  மஹா கும்பாபிஷேகம் நடைபெரும்.

தாங்கள் எப்பொழுதும் போல் ஆதரவு தந்து மஹா கும்பாபிஷேத்தில் பங்கேற்று அருள்மிகு சக்தி வினாயகரின்  ஆசிகளை பெறவேண்டி கேட்டுக்கொள்கிறோம்.

பக்தகோடிகள்  மஹா கும்பாபிஷேகத்திற்க்கு  நிதி வழங்க  கீழ்கண்ட வங்கி கணக்கில் பணம் செலுத்தலாம்

Kendriya Aasthiga Samajam, A/C No.21054324426, Allahabad Bank, Sector 51, NOIDA Branch, IFSC CODE: ALLA0212345.

( Please send SMS to 8826655855  if you have donated for information.)

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 


 

No comments:

Post a Comment