Wednesday, June 8, 2016

09-06-2016 “News Letter ” from Avvai Tamil Sangam

 

09-06-2016 "News Letter " from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

 

 

 

 

 

அவ்வை தமிழ்ச் சங்கம்,

வைகாசி -27(வியாழன்), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Blogs: http://naalorukalavalinarpathu.blogspot.in/

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

ஐந்திணை ஐம்பது- 1 -  முல்லை _6

 முல்லை

_பருவம் கண்டு அழிந்த கிழத்திக்குத் தோழி சொல்லியது

முல்லை நறு மலர் ஊதி, இருந் தும்பி

செல்சார்வு உடையார்க்கு இனியவாய், - நல்லாய்! - மற்று

யாரும் இல் நெஞ்சினேம் ஆகி உறைவேமை

ஈரும், இருள் மாலை வந்து

பதவுரை  :-

நல்லாய் - நல்ல தலைவியே, இருள் மாலை - இருளோடு கூடிய மாலைக்காலமானது, வந்து - தோன்றி, இரும் தும்பி - பெரிய வண்டுகள், முல்லை நறுமலர் - முல்லைக் கொடியில் மலர்ந்து காணும் நல்ல மலர்களில், ஊதி - ரீங்காரஞ் செய்து, செல்சார்வு - செல்வாக்குக் காரணமான தலைவரை, உடையார்க்கு - உடைய பெண்டிர்க்கு, இனியவாய் - இன்பத்தைச் செய்வனவாக, யாரும் இல் - எவரையும் துணை கொண்டிராத, நெஞ்சினேம்ஆகி - கவலைமிக்க மனத்தை உடையேமாகி, உறைவேமை - தங்கியிருக்கின்ற நம்மை, ஈரும் – வருத்தாநின்றது

விளக்கம்.

மாலைக் காலமாகிய வாள் தோன்றி, கரியவண்டுகள் முல்லை மலர்களில் படிந்து ரீங்காரம் செய்து, தலைவரைச் சார்ந்திருக்கின்ற மகளிர்க்கு இன்பத்தைச் செய்கின்றது. ஆனால் பிரிவினால் தனித்துத் துணையில்லாது தவிக்கின்ற உள்ளத்தோடு வாழ்கின்ற எம்முயிரைப் பிளக்கின்றது. யான் எவ்வாறு பொறுத்துக்கொள்வேன்.

தெரியுமா உங்களுக்கு- தமிழ்த் தொண்டு

திரு. இராமசாமி நினைவுப்(SRM) பல்கலைக்கழகம், தமிழ்ப்பேராயம் - Thamizh Academy என்னும் ஓர் அமைப்பினை நிறுவித் தமிழ் மொழி, இலக்கியம், கலை, பண்பாடு, ஆய்வு ஆகியவற்றின் வளர்ச்சிக்கான பல திட்டங்களைச் செயல்படுத்திவருகிறது. இணையவழியிலான தமிழ்க்கல்வி, தமிழ்ச்சமயக்கல்வி, கணினித்தமிழ்க் கல்வி ஆகிய துறைகளின்வழி பட்டயப் படிப்புகள், சான்றிதழ்ப் படிப்புகளை வழங்குவதோடு அரிய நூல்களைப் பதிப்பு செய்யும் பணியையும் செய்துவருகிறது. இவற்றோடு தமிழ்ப் படைப்பாளிகள், திறனாய்வாளர்கள், சாதனைகள்புரிந்த பேரறிஞர்கள் ஆகியோர்க்கு ரூ.20,50,000 பெறுமான 11 வகை விருதுகளை 2012, 2013, 2014, 2015 ஆகிய 4  நான்கு ஆண்டுகளாக வழங்கிவந்துள்ளது. இவ்வாண்டு முதல் முதல் இவ்விருதுகளின் விதிகளில் சில மாற்றங்களும் புதிய விருதுச் சேர்க்கையும் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறாகத் தமிழ்ப்பேராய விருதுகள் 2016 முதல் 14பேருக்கு 22 இலட்சம் ரூபாய் தொகையுடைய விருதுகள் வழங்கப்படவுள்ளன. இவ்வாறு வழங்கப்படவிருக்கும் விருதுகளும் தொகையும் விதிமுறைகளும் விளம்பரக் குறிப்பாக இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

பரிந்துரைகளும் நூல்களும் வந்து சேரவேண்டிய இறுதி நாள் 30.06.2016.

   பரிந்துரைகளையும் நூல்களையும் அனுப்பவேண்டிய முகவரி:

துறைத்தலைவர், தமிழ்ப்பேராயம்,

மைய நூலகக் கட்டடம், நான்காம் தளம்,

SRM பல்கலைக்கழகம், காட்டாங்குளத்தூர் - 603 203.

தொலைபேசி: 044 27417375. மின்னஞ்சல்: tamilperayam@srmuniv.ac.in 

செய்திகள்   

மக்களவை, சட்டசபை தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த முடியும்

ஞானதேசிகன் டிட்கோ தலைவராக மாற்றம் தமிழக அரசின் தலைமை ...

ஜுன் 22-ல் தரவரிசைப் பட்டியல் வெளியீடு: பொறியியல் ...

அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான ... தி இந்து

சக்தி வாய்ந்த பெண்களில் அருந்ததி பட்டாச்சார்யா  

அமைதி நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 141-வது இடம்

குற்றால அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கம்

ர்பிஐ ஆளுநர் பதவி நீட்டிப்பு கிடைக்குமா? ஊடகங்களின்--- தினமணி

 

 உலக சுற்றுச்சூழல்

நீரின்றி அமையாது நித்தில வாழ்வெலாம்
       நீலக்கடல் கருணையால் நித்தமே பொழிந்திடும்!
வாரிதி, வெண்டிரை, வளைநீர், தொண்டிரை,
       வலயம் கடலுக்கு வண்ணப்பேராய் விளங்கிடும்!
பாரினில் வளமென பல்லுயிர் பெருகிட
       படர்ந்திடும் முகிலாய் பருவமழை தந்திடும்!
மாரிவளம் கண்டு மகிழ்ந்திடும் உயிரெலாம்
       மாசினை செய்திட மாகடல் பொங்கிடும்!

அலைகடல் தந்திடும் அத்தனை வளமும்
        அகிலத்தில் அனைவரின் அடிப்படை உரிமை!
வலைவீசி வாழ்வோர் வடிக்கின்ற கண்ணீர்
         வாடிக்கை யென்பது வலியோர் மடமை!
கொலைகார கூட்டம் கோடிட்டு கடலில்
         குற்றம் சொல்லும் கொடுமையிலும் கொடுமை!
தலைபோகும் நிலையென தமிழனம் கண்டிட
         தத்துவம் பேசினால் தாங்காது பொறுமை!

மானிடர் தவறால் மாசென கடல்வளம்
         மாறாது ஒலிப்பது மரணத்தின் அலங்கோலம்!
கூனிடும் சூழலென கொட்டிடும் கழிவால்
         குவியுது குப்பை கொலையென தினந்தோறும்!
மேனியில் ரணமாய் மேலுமே தொடர்ந்தால்
         மழையினை பொழிந்திட மேகங்கள் தோன்றுமா!
ஏனிந்த சூழலென எல்லோரின் விழிப்பு
         இல்லாமல் போயின் இந்நாடு தாங்குமா!!

                                 நன்றி- திரு. சேகர்

 

 

அருள்மிகு சக்தி வினாயகர் திருக்கோயில், கேந்திரிய விஹார், செக்டார் 51- . நொய்டா  - வில் வரும் 2016- ஜூலை 10ந்  தேதி  மஹா கும்பாபிஷேகம்  மிக பிரமாண்டளவில் நடக்கவுள்ளது.

ஜூலை 6ந் தேதி  முதல்  விதிமுறைப்படி பூஜைகள் ஆரம்பித்து 10ந் தேதி காலை 10.15 – 11.15  மஹா கும்பாபிஷேகம் நடைபெரும்.

தாங்கள் எப்பொழுதும் போல் ஆதரவு தந்து மஹா கும்பாபிஷேத்தில் பங்கேற்று அருள்மிகு சக்தி வினாயகரின்  ஆசிகளை பெறவேண்டி கேட்டுக்கொள்கிறோம்.

பக்தகோடிகள்  மஹா கும்பாபிஷேகத்திற்க்கு  நிதி வழங்க  கீழ்கண்ட வங்கி கணக்கில் பணம் செலுத்தலாம்

Kendriya Aasthiga Samajam, A/C No.21054324426, Allahabad Bank, Sector 51, NOIDA Branch, IFSC CODE: ALLA0212345.

( Please send SMS to 8826655855  if you have donated for information.)

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 


 

No comments:

Post a Comment