Tuesday, May 2, 2017

03-05--2017 “News Letter” from Avvai Tamil Sangam

 

3-5--2017 "News Letter" from Avvai Tamil Sangam

Is this 1mail not displaying correctly? View it in your browser

  

 

அவ்வை தமிழ்ச் சங்கம்,

சித்திரை –20 (புதன்), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

திரிகடுகம் பாடல் -61

ஐஅறிவும் தம்மை அடைய ஒழுகுதல்,

எய்துவது எய்தாமை முன் காத்தல், வைகலும்

மாறு ஏற்கும் மன்னர் நிலை அறிதல், - இம் மூன்றும்

வீறு சால் பேர் அமைச்சர் கோள்.

விளக்கம்

ஐம்புலன்களை அடக்கவும், அரசனுக்கு வரக்கூடிய தீமையைக் காத்தலும், பகை அரசருடைய நிலையை அறிந்து கொள்வதும் அமைச்சர்களின் கடமைகளாகும்.

பொருள்

ஐஅறிவும் - ஐம்பொறிகளின் அறிவும், தம்மை அடைய - (தீயவழியில் செல்லாது) தம்மிடத்து அடங்கி நிற்கும்படி, ஒழுகுதல் - நடத்தலும்; எய்துவது அரசனுக்கு வருவதாகிய தீங்கை, எய்தாமை - வராதபடி, முன்காத்தல் - முன் அறிந்து தடுத்தலும்; வைகலும் - நாடோறும், மாறு - (தம்முடைய) பகைமையை, ஏற்கும் - ஏற்றுக்கொள்ளுதற்குரிய, மன்னர் நிலை - அரசருடைய இருப்பை, அறிதல் - ஒற்றர்களால் அறிந்து அதற்குத் தக்கபடி செய்தல்; இ மூன்றும் - ஆகிய இந்த மூன்றும், சீர் ஏற்ற - புகழை மேற்கொண்ட, பேர் அமைச்சர் - பெருமையாகிய அமைச்சர்களின், கோள் துணிவுகளாம்;

தெரியமா உங்களுக்கு  !....

உலக பத்திரிகை சுதந்திர நாள் (World Press Freedom Day)

·         உலக பத்திரிகை சுதந்திர நாள் (World Press Freedom Day) இன்று மே 3 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இது பத்திரிகை சுதந்திரத்தைப் பரப்பும் நோக்கிலும் "மனித உரிமைகள் சாசனம்" பகுதி 19 இல் இடம்பெற்றுள்ள பேச்சுரிமைக்கான சுதந்திரத்தை உலக நாடுகளின் அரசுகளுக்கு நினைவூட்டவும் ஐக்கிய நாடுகள் அவையினால் சிறப்பு நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.

·         1993 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி ஒவ்வோர் ஆண்டும் மே 3 ஆம் நாளன்று பத்திரிகை சுதந்திர நாளாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆபிரிக்கப் பத்திரிகைகளால் கூட்டாக 1991 ஆம் ஆண்டு இந்நாளிலேயே "பத்திரிகை சுதந்திர சாசனம்" (Declaration of Windhoek) முன்வைக்கப்பட்டது. இது 1991 ஆம் ஆண்டு யுனெஸ்கோ (UNESCO) அமைப்பினால் நடாத்தப்பட்ட பொதுக் கூட்டத்தின் 26 ஆம் அமர்வில் சிபாரிசு செய்யப்பட்ட ,'உலகின் சகல பிராந்தியங்களிற்குமான பேச்சு மற்றும் கருத்து வெளியீட்டுச் சுதந்திரத்திற்கானதும், ஊடகச் சுதந்திரத்தினதும் பாதுகாப்பிற்கும் மேம்படுத்தலிற்குமான ஆணை' என்ற தொனிப் பொருளில் பரிந்துரைக்கப்பட்ட கட்டளையின் நிமித்தமாக உருவானது.

·         இந்நாளில் ஊடக சுதந்திரத்துக்காகப் பங்களிப்பு செய்யும் ஒருவருக்கு ஆண்டுதோறும் யுனெஸ்கோ நிறுவனத்தினர் யுனெஸ்கோ/கிலெர்மோ கானோ உலக பத்திரிகை சுதந்திர விருது வழங்கிக் கௌரவிக்கின்றனர். இவ்விருது கொலம்பியப் பத்திரிகையாளர் கிலெர்மோ கானோ இசாசா என்பவரின் நினவாக வழங்கப்பட்டு வருகிறது. இவர் 1986 ஆம் ஆண்டு டிசம்பர் 17 இல் அவரது அலுவலகம் முன்பாக வைத்துப் படுகொலை செய்யப்பட்டிருந்தார். அவரின் கொலையின் பின்னரே பத்திரிகை சுதந்திரம் தொடர்பான பேச்சு வலுப்பெற்றது.

·         இந்நாள் அன்று, உலக அமைதிக்காகவும், பேச்சுச் சுதந்திரத்திற்காகவும் மற்றும் பத்திரிக்கை தர்மத்தினூடாகவும் பல இன்னல்களைத் தாண்டிப் போராடிய பத்திரிகை எழுத்தாளர் ஒருவருக்கு 25,000 டொலர் பெறுமதியான பரிசு வழங்கப்படுகின்றது. சுமார் 14 நபர்களைக் கொண்ட குழுவால் குறிப்பிட்ட இத்தெரிவு நடைபெறுகிறது.மேலும் படிக்க

செய்திகள் 

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதலை முறியடிக்க நடவடிக்கை: ராணுவ தளபதி தகவல் - மாலை மலர்

ஜெ. மாஜி டிரைவர் கனகராஜ் இங்கதான் பலியா… சாலை விபத்து நடத்த இடத்தில் எஸ்பி தீவிர ஆய்வு -  ஒன்இந்தியா 

சென்னை மாஜி போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உள்பட 19 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம் -  ஒன்இந்தியா  

ஆதார் எண்ணை கட்டாயம் ஆக்குவதால் போலி பான் கார்டுகளை ஒழிக்க முடியும்: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பதில் -  மாலை மலர்

மதுரையில் மே 5-இல் இளைஞர் விழா: 25 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவி: முதல்வர் வழங்குகிறார் -  தினமணி

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும்: மத்திய அரசுக்கு ஓபிஎஸ் கோரிக்கை -  தினமணி

விஜய் மல்லையாவை இந்தியா கொண்டுவர தீவிரம் சி.பி.ஐ., அமலாக்கத்துறை அதிகாரிகள் லண்டன் விரைந்தனர் -  தினத்தந்தி

 ராணுவம் நடத்திய பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி  -  மாலை மலர்

வடகொரியாவை சுற்றிவளைக்கும் உலகநாடுகளின் போர்க்கப்பல்கள்! -  விகடன்

தமிழ் பேராய விருதுகள் - 2017

SRM பல்கலைக்கழகம்  ஆண்டுதோறும் தமிழ் பேராய விருதுகள் வழங்குகிறது. 22 லட்சம் மதிப்புள்ள விருதுகள் பல்வேறு துறைகளில் வழங்கப்படுகின்றன. 2017 இவ்வாண்டு விருதுகளுக்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது. விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி நாள் 15.05.2017.

மேலும் விவரங்களுக்கு:

http://www.srmuniv.ac.in/tamilperayam/index.html

 

நம்மை சுற்றி

 

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

 

3.5.2017

7.00 PM onwards

Sri Venkateswara Mandir, Sector 3, R.K. Puram, New Delhi

250th Birth Anniversary of Saint Thyagaraja by singing Ghana Pancharatna kritis.

 

All those interested and associated with music including gurus, students of music and representatives of cultural associations are invited to join in this unique initiative.

Dwarkalaya

 

 

Violin Sridhar @ 9968302176

 

 

5.5.2017 to 7.5.2017

 

5th & 6th May – 6.30pm

 

7th May – 4pm

Delhi Tamil Sangam

வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் அவர்களின் பக்தி சொற்பொழிவு.

தில்லி முத்தமிழ் பேரவை

9811937936, 9810271676, 9313006908

 

Sunday, 7th May, 2017

@ 4pm to 5:30pm

Delhi Tamil Sangam

Production of Sri Godaagraja (Sri Andal Nachhiyar) - Affinity of Ramanujacharya towards Sri Gadha Devi and which became the Quintessence of Sri Vaishnavism to reach out to the masses with ease and warmth.  Music for the production is based on the Azhwar's Divya Prabandhams.

HAMSINI - Center for Bharatanatyam & Karnatak Music

Dr Vasudevan Iyengar

+91 9999441867

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

 

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment