Thursday, December 1, 2016

2-12-2016 “News Letter” from Avvai Tamil Sangam

2-12-2016 "News Letter" from Avvai Tamil Sangam

Is this mail not displaying correctly? View it in your browser

 

 

அவ்வை தமிழ்ச் சங்கம்,

கார்த்திகை  17(வெள்ளி), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

ஐந்திணை எழுபது : 64 நெய்தல் (5)

தெண்ணீர் இருங்கழி வேண்டும் இரை மாந்திப்,

பெண்ணை மேல் சேக்கும் வணர் வாய்ப் புணர் அன்றில்,

தண்ணந் துறைவற்கு உரையாய், மடமொழி

வண்ணம் தா என்று தொடுத்து.

 

O ibis with a curved

beak, who unites with

your mate,

eating all the food you

desire from the vast

brackish ponds with

clear water, and rests

on palmyra trees!

 

Tell the lord of the cool

shores to return the

beauty of the girl who

utters delicate words.

விளக்கம்:

தோழி அன்றில் பறவையிடம், "உப்பங்கழியில் தான் வேண்டிய மீனினை உண்டு அருகில் உள்ள பனைமரத்தின் மீது தங்கும் இணைபிரியா அன்றில் பறவையே! தலைவியின் களவுப் புணர்ச்சியில் கொண்ட அழகைத் திருப்பித் தந்து விடுவாய் என்று வேண்டிய சொற்களை அடக்கத்தோடு தொகுத்துத் தலைவனிடம் கூறுவாயாக" என்று கூறினாள்.

பொருள்:

தெண்ணீர் – clear waters, இருங்கழி – vast backwaters, வேண்டும் இரை மாந்தி – eating all the food they want, பெண்ணை மேல் சேக்கும் – rests in on the palmyra trees, வணர் வாய்ப் புணர் அன்றில் – curved-beak ibis that unites with its mate, தண்ணந் துறைவற்கு உரையாய் – tell the man of the cool shores, மடமொழி வண்ணம் தா என்று தொடுத்து – request to return the beauty of the girl with delicate words. 

source: https://pathinenkeelkanakku.wordpress.com/ஐந்திணை-எழுபது/

தெரியமா உங்களுக்கு  ....

பாண்டித்துரைத் தேவர் (  மார்ச் 21, 1867 - டிசம்பர் 2, 1911)

·         பாண்டித்துரைத் தேவர் (பாலவ நத்தம், தமிழ்நாடு) நான்காம் தமிழ்ச் சங்கம் அமைத்த அமைப்பாளர்களில் ஒருவரும், தமிழறிஞரும் ஆவார். இவரே நான்காம் தமிழ்ச் சங்கத்தின் முதல் தலைவராகப் பணியாற்றினார்.

·          இவர் செந்தமிழ் (இதழ்) என்னும் இதழ் வெளியிடவும், 'கப்பலோட்டிய தமிழர்' வ.உ.சி யின் சுதேசிக் கப்பல் விடும் பணிக்கும் பொருள் உதவி நல்கினவர்.

·         அக்காலத்தில் அரிய தமிழ் நூல்களைக் கண்டெடுத்து, அவை அழியா வண்ணம் அச்சிட்டு வந்த சாமிநாதையருக்கு உதவும் பொருட்டு தேவர் அவர்கள், அவரை இராமநாதபுரம் வரவழைத்துக் கௌரவித்து மணிமேகலை, புறப்பொருள் வெண்பாமாலை போன்றவற்றை அச்சிட பொருளுதவி செய்தார். மேலும் படிக்க

 

வை. பொன்னம்பலம்

·         வை. பொன்னம்பலம் (சனவரி 30, 1904--திசம்பர் 2, 1973) என்பவர் தமிழ் மறவர் என்னும் அடைமொழியால் அறியப்படும் ஒரு தமிழ்ப் புலவர் ஆவார்.

·         தமிழ் ஆசிரியராகவும் பகுத்தறிவுச் சிந்தனையுடையவராகவும் ஒரு போராளியாகவும் வாழ்ந்தவர். மறைமலையடிகள் தேவநேயப் பாவாணர், பெரியார் ஈ. வெ. ராமசாமி போன்ற அறிஞர்களுடன் நெருக்கமாகப் பழகியவர்.

·         ஒரு முறை பாரதிதாசனைச் சந்தித்து உரையாடிய போது பாரதிதாசனின் கவிதைகளில் சில சமற்கிருத சொற்கள் இடம்பெற்றதைச் சுட்டி காட்டினார். அதன் விளைவாக பாரதிதாசன் இனிமேல் வடசொல் கலவாமல் எழுதுவதாக உறுதி கொண்டார். மேலும் படிக்க

 

இரா. வெங்கட்ராமன் (டிசம்பர் 2, 1910 - ஜனவரி 27, 2009)

·         இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப் பதவி வகித்தவர்.

·         இவர் 1987 முதல் 1992 வரை பதவியில் இருந்தார். இந்திய அரசியலில் நெருக்கடியான காலகட்டம். இலங்கைச் சிக்கல், போபர்ஸ் ஊழல், ராஜீவ் காந்தி படுகொலை, பங்குசந்தை ஊழல் என பல்வேறு சிக்கல்களில் நாடு சிக்கியிருந்த ஐந்தாண்டுகளில் 4 பிரதமர்களுடன் பணியாற்றியவர்.

·          பாக்கித்தானுக்கு பயணம் செய்த முதல் இந்தியக் குடியரசுத் தலைவர். அதற்கு முன் நான்கு ஆண்டுகள் துணைக் குடியரசுத் தலைவராக இருந்தார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர். பல அமைச்சர் பதவிகளையும் வகித்து இருக்கின்றார்.மேலும் படிக்க

செய்திகள் 

எல்பிஜி விலை ரூ. 2 உயர்வு- தி இந்து 

நடா புயல்: மெரீனாவில் 4 அடி உயர கடல் அலைகள்- தினமணி

சென்னையில் திறக்கப்படாமல் இருந்த 3 மேம்பாலங்கள் திடீரென ...-  தினத் தந்தி

மார்ச் வரை இலவசம்: ஜியோவின் புத்தாண்டு பரிசுதினமலர்

பெங்களூரில் ரூ.4.7 கோடி புதிய நோட்டுகள் பறிமுதல்தினமணி

மேற்குவங்கத்தில் பரபரப்பு: சுங்கச்சாவடியில் ராணுவம் குவிப்பை ...தினகரன்

பாகிஸ்தானின் பிரச்னைகளை தீர்க்க ஆர்வமாக உள்ளேன்: நவாசிடம் ...- தினகரன்

உலக செஸ் சாம்பியன்ஷிப்: தொடர்ந்து 3-ஆவது முறையாக மேக்னஸ் ...- தினமணி

மக்காவ் ஓபன்: காலிறுதியில் சாய்னா, பிரணீத் காஷ்யப் ... -  தினமணி

ஆசிய கோப்பை கிரிக்கெட்: இறுதிச்சுற்றில் இந்திய மகளிர் -  தினமணி

வீடு வாடகைக்கு  /வாங்க / விற்க

3 BHK Ground Floor Flat at Sadhbhavna Apartments, I.P Extension, Just Behind Mother Dairy Plant,with the following amenities like one reserved car parking slot, fully furnished like, wooden cup-boards, sofas, cot, refrigerator, washing machine, Geysers, A.C, piped gas facility, C.C.Cameras inside the Society for security is available for rent from the second week of December,2016. Rent Rs.25,000 /- P.M and maintenance charges to the Society Rs.1,200 /- p.m. For details please contact, S.Gopalan, Email : gopalanfca@gmail.com, Mob : 9953648312.

1BHK - DDA Flat in 1st floor, sector 14  Dwarka available for Sale. Immediate Possession and Full White Transaction. - No Hassle of cash handling. For further details contact: K.P. Sai, Mobile - 08056039285 , kpsai2311@gmail.com

நம்மை சுற்றி   

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

 

28.11.16

to

10.12.16

 

Sri Devi Kamakshi Mandir, New Dekhi

Annual Laksharchanai to Sri Devi Kamakshi

Delhi Kamakoti kamakshi meditation & cultural centre

Invitation Page 1

Invitation Page 2

 

 

11.12.16

6.30 PM onwards

Ram Mandir, Sector 7, Dwarka

Ayyappa Bhajans by Hamsadhwani Bhajana Group, Vasundhara Enclave, Delhi-96

Ram Mandir Management, Sector 7 Dwarka

8826655855

 

R.K. Vasan

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

No comments:

Post a Comment