Sunday, March 20, 2016

21-3-2016 “Naaloru Kalavazhi Narpathu” from Avvai Tamil Sangam

21-3-2016 "Naaloru Kalavazhi Narpathu" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

 

 

அவ்வை தமிழ்ச் சங்கம்,

பங்குனி –8(திங்கள்), திருவள்ளுவராண்டு 2046,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Blogs: http://naalorukalavalinarpathu.blogspot.in/

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

களவழி நாற்பது – முகவுரை   

கீழ்க்கணக்கு நூல்களுள் புறப்பொருள் நிகழ்ச்சியாகிய போர்ச் செய்தி பற்றியது களவழி நாற்பது ஒன்றே. ஏர்க்களம் பற்றியும் போர்க்களம் பற்றியும் பாடப்பெறும் பாடல்கள் களவழி எனப்படும் என்று தொல்காப்பியர் வாகைத் திணையில் ஒரு துறை அமைத்துள்ளார்.

 

ஏரோர் களவழி அன்றிக் களவழித்

தேரோர் தோற்றிய வென்றியும்

 

என்பது தொல்காப்பியம் (புறத்.21). களவழி நாற்பது போர்க்களம் பற்றிய பாடல் தொகுதி. மேற்குறித்த தொல்காப்பியச் சூத்திர உரையில், நச்சினார்க்கினியர், 'களவழி நாற்பது புலவர் களவழியைத் தோற்றுவித்தது' என்று கூறி, 'ஓஒ உவ மன்' எனத் தொடங்கும் இந் நூற் செய்யுளையும் (36) மேற்கோள் காட்டியுள்ளார். இவர்க்கு முந்திய இளம்பூரணரும் களம் பாடியதற்கு இக் களவழிச் செய்யுளையே எடுத்துக்காட்டியுள்ளார். இந் நூலகத்துள்ள பாடல்கள் எல்லாம் 'களத்து' என்ற சொல்லை இறுதியில் கொண்டு முடிதலும் கவனிக்கத் தக்கது. 'களத்து' என்று முடிவதனாலும், போர்க்கள நிகழ்ச்சிகளைச் சிறப்பித்துள்ளமையினாலும், 'களவழி' என்றும், பாடல் தொகை அளவினால், களவழிநாற்பது' என்றும், இந் நூல் வழங்கப் பெறுவதாயிற்று. பரணி நூல்களில் 'களம் பாடியது' என்னும் ஒரு பகுதி உண்டு. அதுவும் போர்க்களக் காட்சிகளைச் சித்திரிப்பதாகும்.

 

இடம் பற்றித் தொகுத்த நூலுக்குத் தண்டியலங்கார உரையில் (5) இக் களவழி நாற்பது மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது. நானாற்பதில் இடம் பற்றிவந்ததற்கு இலக்கண விளக்கப் பாட்டியலில் (851) இந்நூல் எடுத்துக்காட்டாகத் தரப்பெற்றுள்ளது. எனவே, போர்க்களமாகிய இடத்தைச் சுட்டி எழுந்ததே இந்நூல் என்பது தெளிவு.

 

இந் நூல் தோன்றிய வரலாறு பற்றியசெய்திகள் தெளிவு இன்றிப் பற்பல ஐயப்பாடுகளை விளைவித்துள்ளன. இதனால், ஆராய்ச்சியாளர்களிடையே நேர்ந்துள்ள கருத்து வேற்றுமைகளும் பலவாம்.

 

களவழி நாற்பதின் இறுதியில் காணப்பெறும் குறிப்பை முதற்கண் நோக்குவோம்: 'சோழன் செங்கணானும் சேரமான் கணைக்காலிரும் பொறையும் (திருப்)போர்ப் புறத்துப் பொருது உடைந்துழி, சேரமான் கணைக்காலிரும் பொறையைப் பற்றிக்கொண்டு, சோழன்சிறை வைத்துழி, பொய்கையார் களம் பாடி, வீடு கொண்ட களவழி நாற்பது' என்னும் குறிப்பு உள்ளது. இதிலிருந்து, சோழன் செங்கணான் போர் என்னும் இடத்தில் கணைக்காலிரும் பொறையோடு போரிட்டான் என்பதும், போரில் சோழன் வெற்றி பெற்று, சேரமான் கணைக்காலிரும் பொறையைச் சிறைப்படுத்தினான் என்பதும், அப்பொழுது பொய்கையார் என்பார் சோழனது வெற்றியைப் புகழ்ந்து பாடிச் சேரனைச் சிறையிலிருந்து விடுதலை செய்தார் என்பதும் தெரியவருகின்றன.

 

 Kalavali Narpatu or Kalavazhi Narpathu is a didactic Tamil poetic work that is included in the Patinenkilkkanakku anthology of Ethical Tamil Literature. Kalavali Narpatu was written in the post Sangam age corresponding to between 100 CE - 500 CE. The literary work has forty poetic verses and was composed by the poet Poigayaar.

 

Kalavali Narpatu, written by Poigayaar, is one of the 18 minor literary works in Tamil that area apart of Patinenkilkkanakku. The different poems in Kalavali Narpatu are composed in the Puram tradition of Tamil literature of Sangam age which refers to the external concepts and themes. The Puram tradition implemented in the Sangam literature refers to the various subject matters that are related with the tangible concepts of life such as war and battle, politics, wealth and many others.

 

The ethical literary work of Kalavali Narpatu, also known as Kalavazhi Narpathu contains plentiful didactic and ethical messages that instruct an individual to lead a proper, acceptable and correct life within the society.

குறிப்பு:

இச்சேவையை மேம்படுத்த தங்களின் ஆலோசனைகள் வரவேற்கப்படுகிறது. இம்முயற்சி பற்றிய உங்கள் கருத்துக்களை எங்களுக்கு avvaitamilsangam@gmail.com  என்ற முகவரிக்கு அனுப்பவும்.

தெரியுமா உங்களுக்கு!   

உலகக் கவிதைகள் தினம் (World Poetry Day)

·         எழுச்சிமிக்க கவிதைகள் நாட்டின் சுதந்திரத்திற்கும், புரட்சிக்கும் வித்திட்டிருக்கிறது. இரண்டு வரிகளைக் கொண்ட திருக்குறள் உலகம் முழுவதும் போற்றப்படுகிறது. யுனெஸ்கோ 1999ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21 அன்று பாரிஸ் நகரில் 30ஆவது பொதுமாநாட்டை நடத்தியது.

·         இந்த மாநாட்டில் உலக கவிதைகள் தினமாக மார்ச் 21 ஐ அறிவித்தது. இதனை ஐக்கிய நாடுகள் சபை ஏற்றுக்கொண்டது.  மேலும் படிக்க

 

உலக காடுகள் தினம் (World Forestry Day)

·         வனங்கள் அழிக்கப்படுவதால் உலகில் வெப்பநிலை கூடுகிறது.

·         காடுகளின் அவசியத்தை உணர்த்த உலக காடுகள் தினம் கொண்டாடப்படுகிறது. மேலும் படிக்க

 

சர்வதேச இனப்பாகுபாடு நிராகரிப்பு தினம் (International Day of the Elimination of Racial Discrimination)

·         இனக்கொள்கைக்கு எந்தவித அடிப்படை விஞ்ஞானமும் இல்லை. மனிதனை இனங்களாகப் பிரிக்கப்படுவது எந்தவிதத்திலும் சரியானதல்ல.

·         மனிதர்களுக்கு இடையே இனபேதம் பார்ப்பது சமூக விரோதச் செயல் என யுனெஸ்கோ தெரிவிக்கிறது. உலகின் பல நாடுகளில் இனவெறி இருப்பதைக் கருத்தில்கொண்ட ஐ.நா. சபை 1966ஆம் ஆண்டில் மார்ச் 21ஐ சர்வதேச இனப்பாகுபாடு நிராகரிப்பு தினமாக அறிவித்தது.  மேலும் படிக்க

 

உலக டவுன் சிண்ட்ரோம் தினம் (World Down Syndrome Day)

·         நோய் எப்போதும் மனிதனின் பகுதியாகவே உள்ளது. டவுன் சிண்ட்ரோம் என்பது மனவளர்ச்சி குன்றியதைக் குறிப்பிடுகிறது.

·          இந்த நோயானது மனித செல்லுக்குள், குரோமோசோமில் ஏற்படும் பிழையால் ஏற்படுகிறது. இந்த நோயைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த ஐ.நா. பொதுச்சபை 2011ஆம் ஆண்டு, டிசம்பர் மாதத்தில் மார்ச் 21ஐ உலக டவுன் சிண்ட்ரோம் தினமாக அறிவித்தது. மேலும் படிக்க

 

சர்வதேச நவ்ரூஸ் தினம்  (International Day of Nowruz)

·         நவ்ரூஸ் என்பது பழங்கால பாரம்பரிய இசைத் திருவிழா.

·         வெவ்வேறு சமூகங்கள் மத்தியில் கலாச்சார பன்முகத்தன்மை, நட்பு பங்களிப்பு, அமைதி மற்றும் தலைமுறைகளுக்கு இடையே குடும்பங்களில் ஒற்றுமை, அத்துடன் நல்லிணக்கம் உலகம் முழுவதும் அமைவதை ஊக்குவிக்க இத்தினம் கொண்டாடப்படுகிறது.

·         இத்தினத்தை ஐ.நா.சபை 2010ஆம் ஆண்டில் அறிவித்தது. மேலும் படிக்க

 

சர்வதேச கைது மற்றும் காணாமல் போன பணியாளர்களின் ஒற்றுமை தினம் (International Day of Solidarity with Detained and Missing Staff Members)

·         ஐக்கிய நாடுகளின் அதிகாரிகள் பலர் சட்ட விரோதமாக கடத்தப்பட்டுள்ளனர். முன்னாள் பத்திரிகையாளர் அலெக் கோலெட் (Alec Collett) பாலஸ்தீன முகாம் அருகில் சேவைபுரிந்து கொண்டிருக்கும்போது 1985ஆம் ஆண்டில் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டார்.

·         அவரது உடல் 2009ஆம் ஆண்டில் கிடைத்தது. இதனை நினைவு கொள்ளவே ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21 அன்று இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. மேலும் படிக்க

 

உலக பொம்மலாட்டம் தினம்( World Puppetry Day )

·         பொம்மலாட்டம் மிகப் பழமையான மரபுவழிக் கதைகளில் ஒன்று. உலகின் பல்வேறு இடங்களில் இக்கலை மரபுவழிக் கலையாகத் திகழ்கிறது.

·         உயிர் அற்ற பொம்மைகள், உயிர்பெற்று திரைக்கு முன்னே ஆடிப்பாடி, பேசும் உணர்வில் பார்வையாளர்களைக் கவரும் கலையாக உள்ளது.

·         உலகம் முழுவதும் வாழும் பொம்மலாட்டக் கலைஞர்களை கௌரவிக்க இத்தினம் 2003ஆம் ஆண்டிலிருந்து கொண்டாடப்படுகிறது. மேலும் படிக்க

Source: http://importantdaysofworld.pressbooks.com

செய்திகள்   

தேசத்தை சீர்குலைக்கவா கருத்துச் சுதந்திரம்?அருண் ஜேட்லி - தினமணி

நகைக்கடைகள் இயங்கின: 18 நாட்கள் போராட்டத்தால் 80000 கோடி ... -  தினகரன்

ஸ்ரீஹரிகோட்டாவில் மேலும் ஒரு ஏவுதளம் விண்வெளி ஆராய்ச்சி ...தினமலர்

பாகிஸ்தான் சிறையிலிருந்து 86 இந்திய மீனவர்கள் விடுவிப்பு  -தி இந்து

வெஸ்ட் இண்டீசுக்கு 2–வது வெற்றி இலங்கையை தோற்கடித்தது- தினத் தந்தி

தென் ஆப்பிரிக்காவுக்கு முதல் வெற்றி:டிவில்லியர்ஸ் 64; மோரிஸ் 4வி/27 - தினமணி

ஸ்விஸ் ஓபன்: பிரணாய் சாம்பியன்   -  தினமணி

வீடு வாடகைக்கு

 2BHK House available on Rent  Veg Family Preferred, Sector 17 (Konark Enclave),  Vasundhara Near Saibaba Temple Vasundhara.,  For details contact Mr.Ramesh Mobile: 9810813014

Hindustani Vocal Classes starting from 1st April -2016

  To enrol for batches starting 1st April 2016, interested parents and students may contact:

  NATYA TARANGINI PERFORMING ARTS CENTRE,

  Plot No. 49 & 52,

  Pushp Vihar Sector – 6,

  Saket, New Delhi – 17,

  (Opp. Pushp Vihar Police Station)

   Ph. 011-29565540/ 5245

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

26.3.2016

4.30 PM to 8.30 PM

Sri Adi Sankara Temple/Sankar Mutt, Sector 42, Noida

VISESHA UPANYASAM/DISCOURSE

4.30 PM to 6.15 PM

Sri Vishnu Sahasranama Parayanam

6.15 PM to 8.30 PM

"Vedamum adhan Upayogamum/Importance of Vedas"

by Maha Mahabadhyaya, Vedabashya Rathnam, Dharshana Kalanidhi,  Meemamsa Vedantha Sironmani, Veda Sastra Rathnakara Mullaivasal "Brahmashri  R Krishnamurthy Sastrigal"

8.45 PM

Prasada distribution 

Sri Vishnu Sahasranama Satsangam, Noida

vssnoida@yahoo.com

27.3.2016

11.00 AM to

3.00 pm

sector 2,  Rohini

Collection camp for GOONJ

Rohini Mahila Sewa Samiti

9868793733, 8527272710.

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 


No comments:

Post a Comment