Wednesday, July 26, 2017

27-7-2017 “News Letter” from Avvai Tamil Sangam

27-7-2017 "News Letter" from Avvai Tamil Sangam

Is this mail not displaying correctly? View it in your browser

 

அவ்வைதமிழ்ச்சங்கம்

ஆடி 11, (வியாழன்), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org/indexE.html

Email: avvaitamilsangam@gmail.com

Be a member of ATSFriend on Facebook  |     Forward to a Friend

அவ்வை தமிழ்ச் சங்கத்தின் கோடை விழா கொண்டாட்டம்!

கொண்டாடத் தயாரா?

 

விவரங்கள் விரைவில்...

அவ்வை தமிழ்ச் சங்கம் மின்னஞ்சல் சேவை – புதுப்பொலிவுடன் வாசிக்க தயாரா? தங்கள்  மேலான எண்ணங்களை பகிருங்கள்!

அவ்வை தமிழ்ச் சங்கத்தின் இந்த மின்னஞ்சல் சேவை பல ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே. அவ்வப்போது (சென்ற ஒரு மாதமாக ஏற்பட்டதைப்போல) இதில் தடங்கல் ஏற்பட்டாலும் இதை விடாமல் தொடர்ந்து செயல்படுத்திக்கொண்டிருக்கிறோம். அடுத்த கட்டமாக இந்த மின்னஞ்சல் சேவையை ஆகஸ்ட் 1 முதல் புதுப்பொலிவுடன் வாசகர்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளோம். வாசகர்கள் தங்களின் மேலான எண்ணங்களை avvaitamilsangam@gmail.com  என்ற மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நூல் அறிமுகம் -  "சீதை பேசுகிறேன்"

வெங்கட் கிருஷ்ணமாச்சாரி எழுதிய "சீதை பேசுகிறேன்" எனும் நூல் இப்போது விற்பனையில். இந்தியாவில் விலை: ரூ.65.00 + தபால் செலவு ரூ.35.00 . மொத்தம் ரூ. 100.00. ஒவ்வொரு நூலின் விற்பனைத் தொகையிலிருந்தும் ரூ.13.00 அவ்வை தமிழ்ச் சங்கத்திற்கு நன்கொடையாக வழங்கப்படும். நன்னூல் படித்து சங்கத்திற்கும் உதவுங்கள். இந்நூலை வாங்க 9818092191 என்ற எண்ணுக்கு ரூ.100 PAYTM செய்து பின் குறுஞ்செய்தியில் 9818092191 என்ற எண்ணுக்கு உங்கள் முகவரியை அனுப்பவும்.

மேலும் படிக்க

திரிகடுகம் பாடல் -91

பெறுதிக்கண் பொச்சாந்து உரைத்தல், உயிரை

இறுதிக்கண் யாம் இழந்தேம் என்றல், மறுவந்து

தன் உடம்பு கன்றுங்கால் நாணுதல், - இம் மூன்றும்

மன்னா உடம்பின் தொழில்.

விளக்கம்

 

தாய் தந்தையரை மதிக்காமல் இருத்தலும், அவர்கள் காலத்திற்குப் பின் துன்பப்படுவதும், துன்பம் வந்தபோது அறச் செயல்களைச் செய்யாது போனோமே என்று வருத்தப்படுவதும், மூடர்கள் செய்கைகளாகும்.

பொருள்

(இ-ள்.) உயிரை - (தாய் தந்தைமுதலிய) உயிர்களை, பெறுதிக்கண் - பெற்றவிடத்து, பொச்சாந்து - (பெற்றோர் தமக்குச் செய்த உதவியையும், தாம் அவர்க்குச் செய்ய வேண்டிய உதவியையும்) மறந்து, உரைத்தல் - இகழ்ந்து சொல்லுதலும்; இறுதிக்கண் - அவர் தம் காலமுடிவில், நாம் இழந்தோம் - நாம் எல்லாவற்றையும் இழந்து விட்டோம், என்றல் - என்று இரங்குதலும்; மறு - நோய், வந்து - வந்ததினால், தன் உடம்பு - தன்னுடைய உடல், கன்றுங்கால் - மெலியுங் காலத்தில், நாணுதல் - (முன் அறஞ்செய்திலோமே யென்று தனக்குள்ளே) நாணப்படுதலும்; இ மூன்றும் - ஆகிய இம் மூன்றும், மன்னா - நிலைபெறுதலில்லாத, உடம்பின் குறி - உடம்பை யுடையானிடத்துத் தோன்றும் அடையாளங்களாம்; (எ-று.)

 

(க-ரை.) தாய் தந்தையர் இருக்கும்போது அவரை இகழ்ந்து நடப்பதும், அவர்கள் இறந்தபோது வீணாய்த் துன்பப்படுவதும் துன்பம் நேர்ந்தபோது அறஞ்செய்யாது போனோமே யென்று நாணுவதும் உடற்பற்று மிக்க மூடர்கள் செய்கை என்பது.

 

பெறுதி, இறுதி : தி விகுதி பெற்ற தொழிற்பெயர்கள். நடு நின்ற 'உயிரை' என்னுஞ் சொல் பெறுதிக்கண் என முன்னும். இறுதிக்கண் எனப் பின்னும் சென்றடைதலால் தாப்பிசைப் பொருள் கோள். செய்யுங் கடமைகளைச் செய்த சிறப்புப்பற்றித் தாய்தந்தை முதலியோரை அறிவுப் பொருளாகிய உயிரென்றும், செய்ந்நன்றியறிதல் முதலிய உயிர்க்குணம் இவனிடத்துத் தோன்றாமையாகிய இழிவுபற்றி இவனை உடம்பு என்றுங் கூறினமையால், அவ்விரண்டும் முறையே அவ்வுயர்வு இழிவுகளைப்பற்றி வந்த திணைவழுவமைதி, பொச்சாந்து : பொச்சா : பகுதி

வரலாற்றில் இன்று

·         1627 - தெற்கு இத்தாலி நகரான சான் செவேரோவை நிலநடுக்கம் தாக்கியது.

·         1921 - பிரெட்றிக் பாண்டிங் தலைமையில் டொறொண்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களினால் இன்சுலின் கண்டறியப்பட்டது.

·         1929 - மூன்றாவது ஜெனீவா உடன்படிக்கை

·         1953 - கொரியப் போர் முடிவு: ஐக்கிய அமெரிக்கா, சீனா, மற்றும் வட கொரியா ஆகியவற்றுக்கிடையில் போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது. தென் கொரியா இவ்வொப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டாலும், உடன்பாட்டை மதிப்பதாக வாக்குறுதி தந்தது.

·         1990 - பெலாரஸ் சோவியத் ஒன்றியத்தில் இருந்து விடுதலையை அறிவித்தது.

·         2007 - பீனிக்ஸ், அரிசோனாவில் இரண்டு ஹெலிகப்டர்கள் வானில் மோதின.

மேலும் படிக்க

செய்திகள்

பாஜக ஆதரவுடன் முதல்வராகிறார் நிதீஷ்? – தினமணி

சிறை முறைகேடுகளை அம்பலப்படுத்திய பெண் அதிகாரி ... - மாலை மலர்

நீட் தேர்வு: திமுகவின் மனித சங்கிலிப் போராட்டத்துக்கு நமது ... - தினமணி

பிரதமர் மோடி இன்று ராமேசுவரம் வருகை அப்துல்கலாம் ... - தினத் தந்தி

ரூ.1500 மின்கட்டணமா.. ரேஷன் சலுகை ரத்து: கேரள அரசு அதிரடி - தினமலர்

மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் - தினமணி

தனிநபர் உரிமை அடிப்படை உரிமையே: உச்ச நீதிமன்றத்தை நாடிய 4 ... - தி இந்து

பாதுகாப்புத்துறை அமைச்சராகிறார் அமித் ஷா? - நியூஸ்7 தமிழ்

பெட்ரோல், டீசல் கார்களை 2040 ஆம் ஆண்டில் இருது தடை செய்ய ... - தினத் தந்தி

ஜியோவுக்குப் போட்டியாக ஆஃபர்களை அள்ளி வழங்கும் வோடபோன்! - விகடன்

ஸ்நாப்டீல் - பிளிப்கார்ட் இணைப்பில் இழுபறி!! – ieTamil

வீடு வாடகைக்கு

 

2 BHK (2 Bedroom,1 Big Drawing/Dinning Room), 2 Big Varandah, at C Block Sector 19 Noida

Contact N K IYER, 9873711601

 

நம்மை சுற்றி

 

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

 

30th July 2017, Sunday

India International Centre, Max Muller Marg, New Delhi

Carnatic Music Concert

India International Centre in Association with Ramakrishnapuram South Indian Society

Mr. S. Venkatesh – 9811161370

Mr. RK Vasan - 8826655855

 

30-July-2017.

Maa Adhya Sakthi Dham Mandir, E-Block, Sector 16, Rohini, Delhi

THIRUVILAKKU POOJA

Rohini [Delhi] Sri Vishnu Sahasranama Satsangam

Balaji

+91-9871154466

 

7th August, 2017,  Monday

Sri Devi Kamakshi Mandir, A-11, Aruna Asaf Ali Marg, New Delhi

Aadi Paurnami

Sri Devi Kamakshi Mandir, Delhi Kamakoti Kamakshi Meditation & Cultural Centre

011-26867240, 26520202, 41802507

 

8th August, 2017,  Tuesday

Sri Devi Kamakshi Mandir, A-11, Aruna Asaf Ali Marg, New Delhi

83rd Jayanthi Celebrations of H.H. Sri Sri Jayendra Saraswathi Sankaracharya Swamigal

Sri Devi Kamakshi Mandir, Delhi Kamakoti Kamakshi Meditation & Cultural Centre

011-26867240, 26520202, 41802507

 

11th August, 2017,  Friday

Sri Devi Kamakshi Mandir, A-11, Aruna Asaf Ali Marg, New Delhi

Maha Sankatahara Chaturthi

Sri Devi Kamakshi Mandir, Delhi Kamakoti Kamakshi Meditation & Cultural Centre

011-26867240, 26520202, 41802507

 

17 - 26 Aug'17

Arulmigu Varasiddhi Vinayagar Thirukkoil, G-Block Park, Sector 22, Noida

SRI GANESH CHATHURTHI MAHOTSAVAM 2017

VEDIC PRACHAR SANSTHAN (REGD).

9711020528

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

 


 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment