Wednesday, July 19, 2017

20-7-2017 “News Letter” from Avvai Tamil Sangam

20-7-2017 "News Letter" from Avvai Tamil Sangam

Is this mail not displaying correctly? View it in your browser

  

அவ்வைதமிழ்ச்சங்கம்

ஆடி 4, (வியாழன்), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Be a member of ATSFriend on Facebook  |     Forward to a Friend

அவ்வை தமிழ்ச் சங்கம் மின்னஞ்சல் சேவை – புதுப்பொலிவுடன் வாசிக்க தயாரா? தங்கள்  மேலான எண்ணங்களை பகிருங்கள்!

அவ்வை தமிழ்ச் சங்கத்தின் இந்த மின்னஞ்சல் சேவை பல ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே. அவ்வப்போது (சென்ற ஒரு மாதமாக ஏற்பட்டதைப்போல) இதில் தடங்கல் ஏற்பட்டாலும் இதை விடாமல் தொடர்ந்து செயல்படுத்திக்கொண்டிருக்கிறோம். அடுத்த கட்டமாக இந்த மின்னஞ்சல் சேவையை ஆகஸ்ட் 1 முதல் புதுப்பொலிவுடன் வாசகர்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளோம். வாசகர்கள் தங்களின் மேலான எண்ணங்களை avvaitamilsangam@gmail.com  என்ற மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நூல் அறிமுகம் -  "சீதை பேசுகிறேன்"

வெங்கட் கிருஷ்ணமாச்சாரி எழுதிய "சீதை பேசுகிறேன்" எனும் நூல் இப்போது விற்பனையில்.

நூல் பற்றி முன்னால் பேராசிரியர் H. பாலசுப்ரமணியம் அவர்கள் தனது அணிந்துரையில் கூறியது...

".....சிறையிலிருந்த செல்வி சீதையின் சொல்லாடலை, ஓராண்டுக் காலமாக அவள் பட்ட அவதிகளையும் துயரங்களையும் சீதாப் பிராட்டியின் வார்த்தைகளிலேயே பதிவு செய்த பெருமைக்குச் சொந்தக்காரராகி விட்டார் எனது நண்பர் கிருஷ்ணமாச்சாரி. இது ஒரு வித்தியாசமான நூல்"

மேலும் படிக்க

 

இந்தியாவில் விலை: ரூ.65.00 + தபால் செலவு ரூ.35.00 . மொத்தம் ரூ. 100.00.

 

இந்நூலின் ஆசிரியர் அவ்வை தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் என்பதை சொல்வதில் பெருமை கொள்கிறோம்.

ஒவ்வொரு நூலின் விற்பனைத் தொகையிலிருந்தும் ரூ.13.00 அவ்வை தமிழ்ச் சங்கத்திற்கு நன்கொடையாக வழங்கப்படும். நன்னூல் படித்து சங்கத்திற்கும் உதவுங்கள்.

இந்நூலை வாங்க 9818092191 என்ற எண்ணுக்கு ரூ.100 PAYTM செய்து பின் குறுஞ்செய்தியில் 9818092191 என்ற எண்ணுக்கு உங்கள் முகவரியை அனுப்பவும்.

திரிகடுகம் பாடல் -86

அற்புப் பெருந் தளை யாப்பு நெகிழ்ந்து ஒழிதல்

கற்புப் பெரும் புணை காதலின் கை விடுதல்,

நட்பின் நய நீர்மை நீங்கல், - இவை மூன்றும்

குற்றம் தரூஉம் பகை.

விளக்கம்

ஓருயிரைக் கொல்வதற்கு அஞ்சாதவனும், கல்லாதவர் கூட்டத்தோடு சேர்வதும், ஒரு முயற்சியும் செய்யாமல் இருக்கின்ற செல்வத்தை அழிப்பவனும், மூடர்கள் ஆவார்.

பொருள்

 

 

(இ-ள்.) அன்பு பெருந்தளை - அன்பினாலாகிய பெருந்தளையினது, யாப்பு - கட்டு, நெகிழ்ந்து ஒழிதல் - தன்னை விட்டுத் தளர்ந்து நீங்குதலும்; கற்பு - கல்வியாகிய, பெரும்புணை - பெரிய தெப்பத்தை, காதலின் - பொருள் முதலியவற்றின் விருப்பினால், கை விடுதல் - முற்றும் விட்டுவிடுதலும்; நட்பின் - ஒருவரிடத்தில் வைத்த நட்பினால், நயம் நீர்மை - நீதித் தன்மையினின்று, நீங்கல் - நீங்குதலும், இவை மூன்றும் - ஆகிய இவை மூன்றும், குற்றம் தரூஉம் - (ஒருவனுக்குக்) குற்றங்களை விளைக்கின்ற, பகை - பகைகளாம்; (எ-று.)

 

(க-ரை.) உயிரிடத்தில் அன்பற்றிருப்பதும், பொருட்பற்றால் கல்வியை விடுதலும்; நட்பினால் ஒருபாற் கோடுதலும் பகைபோற் குற்றந் தருவன என்பது.

 

அற்புத் தளை : மூன்றும் வேற்றுமை உருபும் பயனுமுடன்றொக்க தொகை; அன்பாகிய தளையெனின் பண்புத்தொகையாம். தளை : முதனிலைத் தொழிலாகு பெயர். கல்வி, ஒருவனை அறிவு நூல்களை யுணர்ந்து பொருளியலறிந்து பிறவிக் கடலைக் கடந்து வீடுபெறச் செய்வதால், பெரும்புணை யென உருவகிக்கப் பட்டது. குற்றம் - இருமைப் பயனு மிழத்தல் - தரூஉம் : செய்யுளிசைநிறை யளபெடை.

தெரியுமா உங்களுக்கு

அனைத்துலக சதுரங்க நாள் (International chess day)

பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பின் (FIDE) வழிகாட்டலின் ஒவ்வோர் ஆண்டும் சூலை 20 ஆம் நாள் கொண்டாடப்படுகின்றது. 1924 ஆம் ஆண்டு சூலை 20 இல் உலகச் சதுரங்கக் கூட்டமைப்பு பாரிசு நகரில் நிறுவப்பட்டது. சூலை 20 ஆம் நாளை அனைத்துலக சதுரங்க நாளாக 1966 ஆம் ஆண்டில் இக்கூட்டமைப்பு அறிவித்தது.

 

பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு

பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு என்பது உலக நாடுகளின் சதுரங்க அமைப்புகளை ஒன்றிணைக்கும் ஒரு உலக நிறுவனமாகும். இது பொதுவாக (பிரெஞ்சு மொழியில்) FIDE (ஃபீடே) என அழைக்கப்படுகிறது. FIDE பிரான்சின் பாரிஸ் நகரில் சூலை 20, 1924 இல் அமைக்கப்பட்டது. இதன் குறிக்கோள் Gens una sumus, இதன் பொருள் "நாம் அனைவரும் ஒரே மக்கள்" என்பதாகும். தற்போது இந்நிறுவனத்தில் 150 க்கும் மேற்பட்ட நாடுகள் அங்கம் வகிக்கின்றன. உலகில் பல விளையாட்டுகள் காணப்பட்ட போதிலும்கூட, உள்ளக விளையாட்டான சதுரங்கம் முக்கியத்துவமான விளையாட்டுக்களில் ஒன்றாக புராதன காலங்கள் தொட்டு இன்றுவரை மதிக்கப்படுகின்றது.

 

சதுரங்கம்

புராதன காலங்களில் அரசர்களின் விளையாட்டு என வர்ணிக்கப்பட்ட சதுரங்கம் (Chess), இருவர் விளையாடும் ஒரு பலகை விளையாட்டாகும். ஒரு பக்கத்துக்கு 16 காய்கள் வீதம், 32 காய்கள் இவ் விளையாட்டில் பயன்படுகின்றன. ஒவ்வொருவருக்கும் வெவ்வேறாக இரண்டு நிறங்களில் காய்கள் அமைந்திருப்பது வழக்கம். விளையாடும் பலகை, 8 நிரைகளிலும், 8 நிரல்களிலும் (8X8) அமைந்த கட்டங்களைக் கொண்ட சதுர வடிவமானது. பொதுவாக சதுரங்கள் கறுப்பு வெள்ளை நிறங்களில் மாறி மாறி அமைந்திருக்கும்.

 

மூளைக்கு வேலைத்தரும் விளையாட்டு

சதுரங்கம் அதிஸ்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு விளையாட்டு அல்ல. மூளைக்கு வேலைத்தரும் ஒரு விளையாட்டாகக் கருதப்படுகின்றது. மதியூகமும், தந்திரமும் இவ் விளையாட்டுக்கு முக்கியமானதாகும். அதேநேரம், இது ஒரு விளையாட்டாக மட்டுமன்றி, கலையாகவும் அறிவியலாகவும் கூட வர்ணிக்கப்படுவதுண்டு. சதுரங்கம் பொழுதுபோக்காகவும், போட்டியாகவும், விளையாட்டு அமைப்புகளின் சுற்றுப்போட்டிகளாகவும் நடத்தப்படுகின்றன. இத்தகைய போட்டிகள் பிரதேச மட்டம், தேசிய மட்டம், சர்வதேச மட்டம் என வியாபித்து நடத்தப்படுவதுமுண்டு.நவீன காலத்தில் இணையத்தளங்களிலும் சதுரங்கம் ஆடப்படுவதுண்டு. இதற்கான பல நூற்றுக்கணக்கான தனி இணையத்தளங்கள் இன்று இணையப்பின்னலில் காணப்படுகின்றன.

 

ஆட்டத்தின் எதிர்பார்க்கை

இருவரால் விளையாடப்படும். இந்த விளையாட்டில் தனது அரசனை பாதுகாத்துக்கொண்டு, எதிரியின் அரசனை வீழ்த்துவதே ஆட்டத்தின் எதிர்பார்க்கையாகும். தனது அரசனை காப்பாற்றிக் கொண்டு எதிர்த் தரப்பு அரசனை வீழ்த்தியதும் இவ்வாட்டம் நிறைவுபெறும். அரசனைக் காப்பாற்றியவர் வெற்றி பெற்றவராகவும், அரசனை இழந்தவர் தோல்வியடைந்தவராகவும் தீர்மானிக்கப்படுவார்.

மேலும் படிக்க...

வரலாற்றில் இன்று

·         1618 - புளூட்டோ பூமிக்கு மிக அண்மைக்கு வந்தது. இதன் அடுத்த நிகழ்வு 1866 இல் நிகழ்ந்தது. மீண்டும் இது 2113 இல் நிகழும்.

·         1810 - நியூகிரனாடாவின் பகோட்டா (கொலம்பியாவின் தலைநகர்) நகர மக்கள் ஸ்பெயினிடம் இருந்து விடுதலையை அறிவித்தனர்.

·         1871 - பிரித்தானியக் கொலம்பியா கனடாவுடன் இணைந்தது.

·         1953 - யூனிசெப் அமைப்பை நிரந்தரமாக்கும் முடிவு ஐநாவில் எட்டப்பட்டது.

·         1969 - அப்பல்லோ 11 சந்திரனில் இறங்கியது. நீல் ஆம்ஸ்ட்றோங், எட்வின் ஆல்ட்றின் ஆகியோர் சந்திரனில் காலடி வைத்தனர்.

·         1976 - வைக்கிங் 1 சந்திரனில் இறங்கியது.

மேலும் படிக்க

செய்திகள்

காரைக்கால் அரசு கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை ... - தினமணி

இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக திபெத் ... - மாலை மலர்

'குட்கா'வால் சட்டசபையில் கடும் அமளி: தி.மு.க., வெளிநடப்பு - தினமலர்

பள்ளி மாணவர்களின் புத்தக சுமையைக் குறைத்த தெலங்கானா அரசு ... - தினமணி

நீட் தேர்வு குறித்து பேசுவதற்காக 4 அமைச்சர்கள் டெல்லி பயணம் - தி இந்து

பறவையைப் போல போக்குவரத்து ஒழுங்கை கடைப்பிடிக்க ... - தினமணி

விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டம் - தினமணி

ஊரக திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பம் - தினமலர்

சபரிமலை பயணம் இனி சுலபமாகும்... விமான நிலையம் அமைக்க கேரள ... - விகடன்

இந்திய சுதந்திர தின விழா: புகைப்படப் போட்டி - தினமணி

விமானத்தில் பயணிக்க எம்.பி.,க்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் - தினமலர்

ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: கார்த்தி சிதம்பரத்துக்கு சிபிஐ ... - தினமணி

இலங்கையின் சகவாழ்வு மற்றும் நல்லிணக்கத்திற்கு சிங்கப்பூர் ... - tamil.adaderana

பயங்கரவாதிகளின் புகலிடம் பாகிஸ்தான்: அமெரிக்கா அறிக்கை - தினமலர்

அறிமுகமாகிறது புதிய 20 ரூபாய் நோட்டுக்கள்.. பழைய ... - Oneindia Tamil

ஏழுமலையானுக்கே வட்டி குறைப்பு: ரூ.200 கோடி வருமானம் ... - தினமலர்

தக்காளிக்கு மாற்றாகுமா மரத்தக்காளி? - Minmurasu.com

புகார்களை நிரூபிக்கும்படி அமைச்சர்கள் கேட்பதால் ஊழல் ... - தினத் தந்தி

கமலின் முதல் அரசியல் அறிக்கை...ஒரே மணி நேரத்தில் பத்தாயிரம் ... - Oneindia Tamil

 

REQUIRED SOUTH INDIAN ARTISTS FOR A FEATURE FILM CASTING IN DELHI

A film production team is casting for a feature film in Delhi which requires the characters from South India. The specific age category in which the characters required are between 35 to 45 yrs old. Anyone interested can send their pictures with contact numbers at jogifilm19@gmail.com. If found suitable would be called for an audition. 

 

நம்மை சுற்றி

 

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

 

செய்திகள் வரவேற்கப்படுகின்றன! 

செய்திகள் வரவேற்கப்படுகின்றன! 

செய்திகள் வரவேற்கப்படுகின்றன! 

செய்திகள் வரவேற்கப்படுகின்றன! 

செய்திகள் வரவேற்கப்படுகின்றன! 

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

 

 

 


 

 

No comments:

Post a Comment