Sunday, June 11, 2017

12-6-2017 “News Letter” from Avvai Tamil Sangam

12-6-2017 "News Letter" from Avvai Tamil Sangam

Is this mail not displaying correctly? View it in your browser


  

அவ்வைதமிழ்ச்சங்கம்,

வைகாசி 29, ( திங்கள் ), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Be a member of ATSFriend on Facebook  |     Forward to a Friend

நூல் அறிமுகம் -  "சீதை பேசுகிறேன்"

வெங்கட் கிருஷ்ணமாச்சாரி எழுதிய "சீதை பேசுகிறேன்" எனும் நூல் இப்போது விற்பனையில்.

நூல் பற்றி முன்னால் பேராசிரியர் H. பாலசுப்ரமணியம் அவர்கள் தனது அணிந்துரையில் கூறியது...

".....சிறையிலிருந்த செல்வி சீதையின் சொல்லாடலை, ஓராண்டுக் காலமாக அவள் பட்ட அவதிகளையும் துயரங்களையும் சீதாப் பிராட்டியின் வார்த்தைகளிலேயே பதிவு செய்த பெருமைக்குச் சொந்தக்காரராகி விட்டார் எனது நண்பர் கிருஷ்ணமாச்சாரி. இது ஒரு வித்தியாசமான நூல்"

மேலும் படிக்க

 

இந்தியாவில் விலை: ரூ.65.00 + தபால் செலவு ரூ.35.00 . மொத்தம் ரூ. 100.00.

 

இந்நூலின் ஆசிரியர் அவ்வை தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் என்பதை சொல்வதில் பெருமை கொள்கிறோம்.

ஒவ்வொரு நூலின் விற்பனைத் தொகையிலிருந்தும் ரூ.13.00 அவ்வை தமிழ்ச் சங்கத்திற்கு நன்கொடையாக வழங்கப்படும். நன்னூல் படித்து சங்கத்திற்கும் உதவுங்கள்.

இந்நூலை வாங்க 9818092191 என்ற எண்ணுக்கு ரூ.100 PAYTM செய்து பின் குறுஞ்செய்தியில் 9818092191 என்ற எண்ணுக்கு உங்கள் முகவரியை அனுப்பவும்.

திரிகடுகம் பாடல் -81

தோள் வழங்கி வாழும் துறை போல் கணிகையும்,

நாள் கழகம் பார்க்கும் நயம் இலாச் சூதனும்,

வாசி கொண்டு ஒண் பொருள் செய்வானும், - இம் மூவர்

ஆசைக் கடலுள் ஆழ்வார்.  

விளக்கம்

பலருக்குப் பொதுவாய் நின்று நீரைத் தரும் கிணற்றினைப் போன்று தனது உடலைக் கொடுத்து வாழும் வேசியரும், சூதாடும் இடத்தைத் தேடி அலையும் நீதியில்லாத சூதாடியும், மிக்க வட்டிக்கு கொடுத்துப் பொருள் தேடுபவனும் பேராசை பிடித்தவர்கள் ஆவா.

பொருள்

 துறைபோல் - (பலருக்கும் பொதுவாய் நின்று தன்னிடத்து நீரைக் கொடுக்கும்) துறையினைப் போல, தோள் வழங்கி - (பலருக்கும் பொதுவாய் நின்று) தனது தோளைக் கொடுத்து, வாழும் - வாழ்கின்ற, கணிகையும் - வேசையும்; நாள் - ஒவ்வொரு நாளும், கழகம் பார்க்கும் - சூதாடும் இடத்தைத் தேடி ஆடுகின்ற, நயம் இலாச் சூதனும் - நீதியில்லாத சூதாடியும்; வாசி கொண்டு - மிக்க வட்டம் வாங்கி, ஒள் பொருள் - ஒள்ளிய பொருளை, செய்வானும் - தேடுவானும், இ மூவர் - ஆகிய இந்த மூவரும், ஆசைக் கடலுள் - ஆசையாகிய கடலில், ஆழ்வார் – அழுந்துவராவர்.

தெரியமா உங்களுக்கு  !....

குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு நாள்

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள் (World Day Against Child Labour) உலகம் முழுவதும் ஆண்டுதோறும் சூன் 12 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் ஓர் அங்கமான பன்னாட்டு தொழிலாளர் அமைப்பினால் (ஐ.எல்.ஓ) அங்கீகரிக்கப்பட்ட இந்த நாள் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த 2002ம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படுகிறது[1]. ஐ.எல்.ஓ வின் 138[2] மற்றும் 182வது[3] உடன்படிக்கைகளின் ஏற்பினால் தூண்டப்பட்டு இந்த நாள் உருவாக்கப்பட்டது.

நோக்கம்:

இதன் அடிப்படையில் குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலுமாக அகற்றப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்த இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. 2006 அக்டோபர் 10 ம் தேதி முதல் வீடு, சாலையோரக் கடைகள், ஓட்டல்கள் போன்ற இடங்களில் ௧௪ வயதிற்கு உட்பட்ட சிறுவர், சிறுமியரை வேலைக்கு அமர்த்த மத்திய அரசு தடைவிதித்துள்ளது.

வரலாற்றில் இன்று

·         1964 - தென்னாபிரிக்க நீதிமன்றம் நெல்சன் மண்டேலாவுக்கு ஆயுள்கால சிறைத்தண்டனை விதித்தது.

·         1967 - சோவியத் ஒன்றியம் வெனேரா 4 விண்கலத்தை வெள்ளி கோளை நோக்கி ஏவியது. வேறொரு கோளின் வளிமண்டலத்துள் சென்று தகவல்களைப் பூமிக்கு அனுப்பிய முதலாவது விண்கலம் இதுவாகும்.

·         2003 - தமிழர் விடுதலை இயக்கம் என்ற அமைப்புக்குத் தமிழக அரசு தடை விதித்தது.

·         2006 - கூகுள் எர்த், லினக்ஸ் பதிப்பு வெளியிடப்பட்டது.

மேலும் படிக்க

செய்திகள்

போயஸ் கார்டனில் செய்தியாளர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் ... விகடன்

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் நடிகை வரலட்சுமி திடீர் ... Oneindia Tamil
பணி ஓய்வு பெற்றார் நீதிபதி கர்ணன்: தீவிரப்படுத்தப்படுகிறதா ... விகடன்

கர்நாடகாவில் இன்று பந்த்... பாதுகாப்பு வளையத்தில் பெங்களூரு ... Oneindia Tamil
இலவச கல்விக்கு முதல் மாத சம்பளம் - ஐஏஎஸ்-ல் முதலிடம் பெற்ற ... Oneindia Tamil
பாம்பன், நாகை துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் ... விகடன்

மராட்டியத்தை போல் தமிழகத்திலும் விவசாய கடனை தள்ளுபடி ... மாலை மலர்

நீதிபதிகளை தேர்வு செய்வதற்கு "நீட்' போன்ற தேர்வை நடத்த .. தினமணி.

இந்திய வம்சாவளி வழக்கறிஞர் டிரம்ப் மீது திடீர் குற்றச்சாட்டு… தினத் தந்தி

ஜிஎஸ்டி : இன்சுலினுக்கு 5%, ரூ.100க்கு குறைவான சினிமா ... Oneindia Tamil
சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட்: 'வாழ்வா-சாவா' போட்டியில் ... BBC தமிழ்

சாம்பியன்ஸ் ட்ராபி போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி ... நியூஸ்7 தமிழ்

வீடு வாடகைக்கு :

3 BHK DDA flat is available for rent at Mayur Vihar Phase I. Close to Metro Station (pocket 4).  Semi furnished flat. South Indians preferred. Rent 25 K. Flat ready for immediate occupation. For more details contact 9313848410.

 

உலகலாவிய சிறுகதைப் போட்டி!

தமிழ் மொழி எழுத்தாளர்களுக்கு அழைப்பு! சிறுகதை அனுப்ப இறுதி நாள்: ஆனி 16, 2048 / 30.06.2017

மலேசியா நாடடில் இயங்கி வரும் மலேசியத் தமிழ் மணி மன்றத்தின் பத்தாம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு உலகம் தழுவிய சிறுகதைப் போட்டி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இப்போட்டியில் கலந்துகொள்ளத் தமிழ்ப்படைப்பாளர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் மாணவர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் மலேசியத் தமிழ் மணி மன்றத்தின் தேசியத்தலைவர்சு.வை.லிங்கம் அழைப்பு விடுத்துள்ளார்.

முழுமைபெற்ற சிறுகதையை ஆனி 16, 2048 / 30.06.2017 ஆம் நாளுக்குள் மலேசிய நாட்டுப் படைப்பாளர்கள் vaiskaru@yahoo.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் இந்தியா மற்றும் பிற நாட்டுப் படைப்பாளர்கள்    tamilkanikani@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் சிறுகதையை அனுப்ப வேண்டுகிறோம்.

மிகச் சிறந்த சிறுகதையாகத் தெரிவு செய்யப்படும் கதைகளுக்கு:

முதல் பரிசு ஆயிரம் மலேசிய வெள்ளி(1000 இரிங்கிட்டு).

இரண்டாம்  பரிசு எழுநூற்றைம்பது மலேசிய வெள்ளி (750 இரிங்கிட்டு).

மூன்றாம் பரிசு ஐந்நூறு மலேசிய வெள்ளி (500 இரிங்கிட்டு).

ஆறுதல் பரிசுக்காகத் தெரிவுசெய்யப்படும் சிறுகதை ஒவ்வொன்றுக்கும் 

இருநூறு மலேசிய வெள்ளி (200 இரிங்கிட்டு) வழங்கப்படும்.

மிகச் சிறந்த சிறுகதையாகத் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு முறையான தகவல் மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ, பகிரி(புலனத்தின்) வாயிலாகவோ தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்கப்படும்.

சிறுகதைப் போட்டிகள் தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ள மலேசியத் தமிழ் மணி மன்றத் தேசியத் தலைவர்  திரு.சு.வை.லிங்கம்,மலேசியா, தொடர்பு எண் : 0104298234;

மலேசியத் தமிழ் மணி மன்றத் தேசிய உதவித் தலைவரும் சிறுகதைப் போட்டி ஒருங்கிணைப்பாளருமான  கி.தங்கராசு மலேசியா, தொடர்பு எண் : 019-2669943, 019-6011569;

சிறுகதைப் போட்டிகளின்  இந்திய ஒருங்கிணைப்பாளரும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியல்துறைத் தலைவருமான (பொ) முனைவர் போ.சத்தியமூர்த்தி  தொடர்பு எண்:  09488616100.

மேலும் அறிய…

 

நம்மை சுற்றி

 

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

 

27-05-17to 15-06-17

11am to 7pm

Plot #A3, Select CityWalk District Centre, Saket

EXHIBITION "The Drifting Canvas" a pioneering multimedia art exposition

Great Modernist

http://www.delhievents.com/2017/05/exhibition-drifting-canvas-pioneering.html

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

 

 

 

 


 

 

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment