Sunday, November 20, 2016

21-11-2016 “News Letter” from Avvai Tamil Sangam

21-11-2016 "News Letter" from Avvai Tamil Sangam

Is this mail not displaying correctly? View it in your browser

 

    

அவ்வை தமிழ்ச் சங்கம்,

கார்த்திகை  6(திங்கள்), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

ஐந்திணை எழுபது : 55  மருதம்(4)

பொய்கை நல் ஊரன் திறங்கிளத்தல், என்னுடைய

எவ்வம் எனினும், எழுந்தீக, வைகல்

மறு வில் பொலந்தொடி வீசும் அலற்றும்

சிறுவன் உடையேன் துணை.

விளக்கம்:

"நீர் நிலைகளையுடைய மருத நிலத்தூர்த் தலைவனின் ஒழுக்க நெறிகளை நீ எடுத்துத் கூற வேண்டியதில்லை. தலைவன் பிரிந்தது என்னுடைய தவறாக இருப்பினும் இருக்கட்டும். நாள்தோறும் பொன் வளையல்களை அணிந்து கைவீசி விளையாடும் என் மகனை நான் பதுகாவலாகக் கொண்டுள்ளேன். ஆகையால் இவ்விடத்தை விட்டுச் செல்வாயாக" என பாணற்கு வாயில் மறுத்துத் தலைவி கூறினாள்.

 

You singing the praises

of the man from the fine

town with ponds is

painful for me.

 

Get up and leave!

I have with me my little

son playing on the streets,

talking endlessly,

and swaying his arms with

gold bangles.

பொருள்:

பொய்கை நல் ஊரன் – the man from the fine town with ponds, திறங்கிளத்தல் – singing his praises, என்னுடைய – mine, எவ்வம் எனினும் – even though it is painful, எழுந்தீக – rise up, வைகல் மறுவில் – daily on the street, பொலந்தொடி வீசும் – sways his gold bangles, அலற்றும் சிறுவன் – young son talking endlessly, உடையேன் துணை – I have my little son who plays swaying his arms with gold bangles

source: https://pathinenkeelkanakku.wordpress.com/ஐந்திணை-எழுபது/

தெரியமா உங்களுக்கு....

உலகத் தொலைக்காட்சி நாள்

·         உலகத் தொலைக்காட்சி நாள் (World Television Day) உலகெங்கும் ஆண்டுதோறும் நவம்பர் 21 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.

·         நவம்பர் 21, 1996-ஆம் ஆண்டு நடைபெற்ற அனைத்துலகத் தொலைகாட்சிக் கருத்தரங்கத்தின் பரிந்துரையின் பேரில் ஐக்கிய நாடுகள் அவை நவம்பர் 21 ஆம் நாளை உலகத் தொலைக்காட்சி நாளாக அறிவித்தது. இக்கருத்தரங்கில் உலகில் தொலைக்காட்சியின் கூடிய முக்கியத்துவம் பற்றி கலந்துரையாடப்பட்டது.

·         உலக நாடுகள் அமைதி, பாதுகாப்பு, பொருளாதாரம், சமூக மாற்றங்கள் மற்றும் தமது கலை, கலாசார தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தமக்கிடையே பரிமாறிக் கொள்ள இந்நாள் சிறப்பான நாளாகக் கருதப்பட்டது. இதன்படி முதல் தொலைக்காட்சி நாள் 1997-ம் ஆண்டு கொண்டாடப்பட்டது.

·         ஐநாவின் டிசம்பர் 17, 1996 இல் நடந்த 99வது கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட 51/205 சாசனத்தில் இது பற்றிய அறிவித்தல் வெளியிடப்பட்டது...மேலும் படிக்க

செய்திகள் 

இந்தூர் - பாட்னா எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு விபத்து: 120 பேர் பலி; படுகாயம் 200  - தி இந்து 

நாமக்கல்லில் கூட்டுறவு வாரவிழா: 416 பயனாளிகளுக்கு ரூ.7.59 ... -  தினத் தந்தி

 ரூபாய் நோட்டு தடை விவகாரத்தில் மறு ஆய்வு செய்து உரிய மாற்றங்கள் செய்வேன்: மோடி உறுதி - தி இந்து 

மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள முன்பணம் -  தினமலர்

அமெரிக்கா: மிட் ராம்னி அமைச்சராக வாய்ப்பு-  தினமணி

சீன ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை சிந்து ... -  தினத் தந்தி

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

26.11.16

 7pm onwards

 

Guruvayurappan Temple, Mayur Vihar, Phase-I

Ayyappa Bhajans by Hamsadhwani Bhajana Group, Vasundhara Enclave, Delhi

Guruvayurappan Temple Authorities, Mayur Vihar, Phase-I

8826655855

R.K. Vasan

26.11.16

& 27.11.16

 

Sir Jai Durga Bhawan, Sri Jai Durga Mandhir, Avantika, Rohini, Delhi-85

24th Ayyappa Pooja Celebrations-2016

North West Delhi Cultural Association

Click Here for Invitation

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

No comments:

Post a Comment