7-2-2017 "News Letter" from Avvai Tamil Sangam Is this mail not displaying correctly? View it in your browser | ||||||
| அவ்வை தமிழ்ச் சங்கம், தை – 25 (செவ்வாய்), திருவள்ளுவராண்டு 2047, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com Blogspot: http://dinam-oru-thirikadukam.blogspot.in/ Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | |||||
திரிகடுகம் பாடல் -16 | ||||||
மண்ணின்மேல் வான்புகழ் நட்டானும், மாசு இல் சீர்ப் பெண்ணினுள் கற்புடையாள் - பெற்றானும், உண்ணு நீர்க் கூவல் குறை இன்றித் தொட்டானும், - இம் மூவர் சாவா உடம்பு எய்தினார். விளக்கம் மண்ணுலகத்தில் புகழை அடைந்தவனும், கற்புடைய மனைவியைப் பெற்ற கணவனும், கிணறுகளைத் தோண்டி வைத்தவனும், எக்காலத்தும் அழியாத புகழைப் பெற்றவராவார். அவர் இறந்தாலும் அவர் புகழ் நிலைக்கும். பொருள் மண்ணின்மேல் - மண்ணுலகத்தில், வான் - பெரிய, புகழ் - புகழை, நட்டானும் - நிலைநிறுத்தினவனும், பெண்ணினுள் - பெண்களுள், மாசுஇல் - குற்றமற்ற, சீர் - சிறப்புடைய கற்பு உடையாள் - கற்புடையவளை, பெற்றானும் - (மனைவியாகப்) பெற்ற கணவனும், உண்ணு நீர் - உண்ணப்படுகின்ற நீர் குறைவு இன்றி - குறைவுபடாதபடி, கூவல் - கிணறுகளை, தொட்டானும் - தோண்டி வைத்தவனும், இ மூவர் - ஆகிய இம் மூவரும், சாவா - (எக்காலத்தும்) இறவாத, உடம்பு - (புகழ்)உடலை, எய்தினார் - பெற்றவராவார்; | ||||||
தெரியமா உங்களுக்கு !.... | ||||||
தேவநேயப் பாவாணர் (பெப்ரவரி 7, 1902- சனவரி 15, 1981) · தேவநேயப் பாவாணர் ( Devaneya Pavanar ) மிகச்சிறந்த தமிழறிஞரும், சொல்லாராய்ச்சி வல்லுநருமாவார். இவர் 40க்கும் மேலான மொழிகளின் சொல்லியல்புகளைக் கற்று மிக அரிய சிறப்புடன் சொல்லாராய்ச்சிகள் செய்துள்ளார். · மறைமலை அடிகளார் வழியில் நின்று தனித்தமிழ் இயக்கத்திற்கு அடிமரமாய் ஆழ்வேராய் இருந்து சிறப்பாக உழைத்தார். இவருடைய ஒப்பரிய தமிழறிவும் பன்மொழியியல் அறிவும் கருதி, சிறப்பாக மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் என்று அழைக்கப்பட்டார்.மேலும் படிக்க | ||||||
செய்திகள் | ||||||
சசிகலா முதல்வராக பதவியேற்பு நிகழ்ச்சி ரத்து? - தி இந்து ஜெயலலிதா மரணத்தில் மர்மம் எதுவும் இல்லை: ரிச்சர்டு பீல் - தினமணி சசிகலா பதவிஏற்பு எப்போது என்பதில் குழப்பம்; நாளையும் கவர்னர் ... - தினத் தந்தி 'தனித்தன்மை' காக்கப் போராடும் நாகாலாந்து! - தி இந்து சட்டவிரோத செயல்களை தடுக்க செல்போன் பயன்படுத்துவோரின் ...- தினத் தந்தி செல்லாத நோட்டாக ரூ.2.5 லட்சத்துக்குள் டெபாசிட் ...- தினகரன் வட இந்தியாவில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.8 ஆக பதிவு- தினமலர் இங்கிலாந்து கேப்டன் அலாஸ்டர் குக் ராஜிநாமா - தினமணி ஐபிஎல் ஏலம்: இஷாந்த் சர்மா உள்ளிட்ட 7 பேருக்கு அடிப்படை விலை ...- தினமணி | ||||||
நம்மை சுற்றி | ||||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact |
| |
18.2.17 & 19.2.17
| Dr. Ambedkar Auditorium, AP & Telangana Bhavan, New Delhi | Sri Ramanujar's 1000th year Jeyanthi Children can participate in the Quiz Competition on Sri Ramanujar's Life and History. | Sri Ramanuja Kainkarya Sabha in association with Delhi Telugu Academy | 9868248831 9968689305 Details Click Here
|
| |
24.2.17 8.30 PM onwards
| Natya Tarangini Performing Arts Centre, Saket, Delhi | Shiv Aradhana celebration of "MAHASHIVARATRI" festival in an "All Night Concert" | Drs. Raja Radha Reddy and Kaushalya Reddy |
| ||
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
|
Monday, February 6, 2017
7-2-2017 “News Letter” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment