27-2-2017 "News Letter" from Avvai Tamil Sangam Is this 1mail not displaying correctly? View it in your browser | ||
| அவ்வை தமிழ்ச் சங்கம், மாசி –15 (சனி), திருவள்ளுவராண்டு 2047, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | |
திரிகடுகம் பாடல் -27 | ||
உண்பொழுது நீராடி யுண்டலும் என்பெறினும் பால்பற்றிச் சொல்லா விடுதலுந் -தோல்வற்றிச் சாயினுஞ் சான்றாண்மை குன்றாமைஇம்மூன்றுந் தூஉய மென்பார் தொழில். விளக்கம் குளித்தபின் உண்ணுவதும், பொய் சொல்லாமல் இருத்தலும், தோல் வற்றிச் சுருங்கினாலும் நற்குணங்களில் இருந்து குறையாமையும், ஆகிய இம்மூன்றும் நல்லவர் செயல்களாகும். பொருள் உண்பொழுது - உண்ணுதற்குரிய காலத்தில், நீர் ஆடி - குளித்து, உண்டலும் - உண்ணுதலும்; என் பெறினும் - (சாட்சியாகும் பொழுது) எவ்வளவு பெரும் பயனை அடைவதாயிருந்தாலும், பால் - ஒரு பக்கம், பற்றி - சார்ந்து, சொல்லா விடுதலும் - பொய்க்கரி சொல்லாமலிருத்தலும்; தோல் வற்றி - (உணவின்மையால்) உடம்பு இளைத்து, சாயினும் - அழிவதாயிருந்தாலும், சான்று ஆண்மை - பல நற்குணங்களால் நிறைந்து அவற்றை ஆளுதல், குன்றாமை - குறையாமையும்; இ மூன்றும் இவை மூன்றும், தூஉயம் - (மன மொழி மெய்களால்) குற்றமற்றவர்களாயிருக்கின்றோம், என்பார் - என்று கருதுவோர் தொழில் - செயல்களாம்; | ||
தெரியமா உங்களுக்கு !.... | ||
குசுமாகரசு (27 பிப்பிரவரி 1912 – 10 மார்ச்சு 1999), · விட்டுணு வாமன சிருவாதுகர் என்னும் எழுத்தாளர் குசுமாகரசு (குஷ்மாகரஜ்) என்னும் புனைப்பெயரில் எழுதிவந்த புகழ்பெற்ற மராத்திய எழுத்தாளர், கவிஞர், சிறுகதை ஆசிரியர், புதினப்படைப்பாளி, நாடக ஆசிரியர். இவர் மாந்தநேயராகவும், தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்காகவும் உரிமைக்காகவும் அறத்துக்காகவும் பாடுபட்டவராகவும் அறியப்படுகின்றார். · இவருடைய பிறந்தநாளான பிப்ரவரி 27, மராட்டி மொழி நாளாகக் கொண்டாடப்படுகிறது.மேலும் படிக்க சந்திரசேகர ஆசாத் (23 சூலை 1906 – 27 பெப்ரவரி 1931) · சந்திரசேகர ஆசாத் என அழைக்கப்படும் சந்திரசேகர சீதாராம் திவாரி இந்திய விடுதலை போராட்ட வீரர்களில் ஒருவர். · இந்துசுத்தான் குடியரசு அமைப்பு மீளுருவாக்கம், ககோரி ரயில் கொள்ளை, பகத் சிங் போன்றவர்களை வழிநடத்துதல், இந்துசுத்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு உருவாக்கம், பிரித்தானிய அதிகாரி சான்டர்சு கொலை போன்றவற்றைச் செய்தவர். · ஆசாத் கொல்லப்பட்ட இடமான அல்ஃப்ரெட் பூங்கா அதன் பிறகு சந்திரசேகர ஆசாத் பூங்கா என்றே அழைக்கப்பட்டது. மேலும் அவரது பெயரில் பள்ளிகள், கல்லூரிகள், வீதிகள் மற்றும் பொதுக்கழகங்கள் தொடங்கப்பட்டுள்ளன.. மேலும் படிக்க | ||
செய்திகள் | ||
இனவெறி தாக்குதலை தடுக்க என்ன செய்ய போகிறார்கள்? - அமெரிக்க ... - தி இந்து நெடுவாசலில் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு ... - தினத் தந்தி இந்தியாவிலேயே பணக்கார நகரம் மும்பைதான் - தினமணி ஜெ.தீபாவின் வீட்டை ஆதரவாளர்கள் முற்றுகை பெண் தீக்குளிக்க ... – தினத் தந்தி பத்திரிகையாளர் விருந்து புறக்கணிக்க டிரம்ப் முடிவு - தினமலர் நடிகர் தவக்களை மாரடைப்பால் காலமானார் - தி இந்து ஒரு தோல்வியினால் தொடரையே இழந்து விட்டோம் என்று அர்த்தமல்ல: சச்சின் டெண்டுல்கர் - தினமணி | ||
வீடு வாடகைக்கு | ||
LIG flat at Mayur Vihar Phase - 3 avvailable for on Lease Rental basis from 1st of March'17.The interested family is requested to directly contact email: Bala - 9990209131 / 08527498136 Email id: aruna_clt@yahoo.co.in | ||
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
|
Sunday, February 26, 2017
27-2-2017 “News Letter” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment