Sunday, February 19, 2017

20-2-2017 “News Letter” from Avvai Tamil Sangam

20-2-2017 "News Letter" from Avvai Tamil Sangam

Is this 1mail not displaying correctly? View it in your browser

 

    

அவ்வை தமிழ்ச் சங்கம்,

மாசி –8 (திங்கள்), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

திரிகடுகம் பாடல் -22

பற்று என்னும் பாசத் தளையும், பல வழியும்

பற்று அறாது ஓடும் அவாத் தேரும், தெற்றெனப்

பொய்த்துரை என்னும் புகை இருளும், - இம் மூன்றும்

வித்து; அற, வீடும் பிறப்பு.

விளக்கம்

பாசப் பற்றையும், பற்று விடாத விருப்பத்தையும், பொய்மையை என்றும் அறியாமை, ஆகிய இம்மூன்றையும் நீக்கினால் வீடு பேறு அடையலாம்.

பொருள்

பற்று என்னும் - பற்று என்று சொல்லப்படுகின்ற, பாசத்தளையும் - கயிற்று விலங்கும், பலவழியும் - பல பொருள்களிலும், பற்று - பிடிப்பு, அறாது - நீங்காமல், ஓடும் - ஓடுகின்ற, அவாத் தேரும் - விருப்பமாகிய தேரும்; தெற்றென - தெளிவாக, பொய்த்து உரை என்னும் - பிறருக்குப் பொய்ம்மை உரைப்பதாகிய சொல் என்று சொல்லப்படும், பகை இருளும் - (அறிவுக்குப்) பகையாகிய இருளும்; இ மூன்றும் - ஆகிய இம் மூன்றும், வித்துஅற - தனக்குக் காரணமாகிய அவிச்சை கெட, பிறப்பு வீடும் - பிறப்பு அழியும்;

தெரியமா உங்களுக்கு  !....

சமூக நீதிக்கான உலக நாள்

·         சமூக நீதிக்கான உலக நாள் அல்லது உலக நீதி நாள் (World Day of Social Justice) எனும் இந்நாளை ஆண்டுதோறும் உலக நாடுகள் முழுவதும் பிப்ரவரி 20 ஆம் நாளன்று அனுசரிக்கப்படுகிறது.

·         வறுமையை போக்கவும், மற்றும் வேலையின்மையின் பிரச்சினைகளைக் கையாளம் முயற்சிகளை ஊக்குவிக்கவும், இந்நாள் அங்கிகரிக்கப்படுகிறது. மேலும் இந்நாளில், ஐக்கிய நாடுகள் அவை, மற்றும் சர்வதேச தொழிலாளர் அலுவலகம் உட்பட, பல அமைப்புக்கள் மக்கள் சமூக நீதி முக்கியத்துவம் பற்றிய அறிக்கைகளை தயாரிக்க அமைக்கப் பெற்றுள்ளது.

வை. மு. கோதைநாயகி (டிசம்பர் 1, 1901 - பெப்ரவரி 20, 1960)

·         வை. மு. கோதைநாயகி தமிழகத்தைச் சேர்ந்த ஒரு புதின எழுத்தாளர். துப்பறியும் புதினம் எழுதிய முதல் தமிழ்ப்பெண் எழுத்தாளராவார். மேடைப் பேச்சாளர், கவிஞர், சமூகநல ஊழியர், இதழாசிரியர், இந்திய விடுதலைக்காகப் போராடியவர் என்று பல துறைகளிலும் சிறந்து விளங்கியவர் வை.மு.கோதைநாயகி அம்மாள். இவரை சமகால எழுத்தாளர்கள், ''நாவல்ராணி, கதா மோகினி, ஏக அரசி'' என்று போற்றினர்.

·         இதுவரை வெளிவந்துள்ள தமிழ் இலக்கிய வரலாற்று நூல்கள் இவரைச் சரியாக அடையாளம் காட்டவில்லை. 115 புதினங்களை எழுதியவர். தான் வாழ்ந்த 59 ஆண்டுகளில் 35 ஆண்டுகள் எழுத்தே உலகம் என்று இயங்கினார்.  மேலும் படிக்க

செய்திகள் 

நம்பிக்கை கோரும் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்த எம்எல்ஏக்கள் பதவி பறிக்கப்படுமா?  - தி இந்து

மேகேதாட்டுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது: ஜி ...தினமணி

ஊடகங்களே அமெரிக்காவின் எதிரி: ட்ரம்ப் குற்றச்சாட்டு -  தி இந்து

ஆன்லைனில் பிஎப் பணத்தை எடுக்கும் வசதி வருகிறது - தினகரன்

உள்ளாட்சித் தேர்தல் வழக்கு: மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு ... -  தினமணி  

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரை வென்றது இலங்கை அணி - தினகரன்

 உலகக் கோப்பை தகுதிச் சுற்று: இறுதிச் சுற்றில் இந்திய மகளிர் -  தினமணி

நம்மை சுற்றி   

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

 

24.2.17

8.30 PM onwards

 

Natya Tarangini Performing Arts Centre, Saket, Delhi

Shiv Aradhana celebration of "MAHASHIVARATRI" festival in an "All Night Concert"

Drs. Raja Radha Reddy and Kaushalya Reddy

http://www.rajaradhareddy.com/

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

No comments:

Post a Comment