22-2-2017 "News Letter" from Avvai Tamil Sangam Is this 1mail not displaying correctly? View it in your browser | ||||||
| அவ்வை தமிழ்ச் சங்கம், மாசி –10 (புதன்), திருவள்ளுவராண்டு 2047, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | |||||
திரிகடுகம் பாடல் -24 | ||||||
காண் தகு மென் தோள் கணிகை வாய் இன் சொல்லும், தூண்டிலினுள் உட்பொதிந்த தேரையும், மாண்ட சீர், காழ்ந்த பகைவர் வணக்கமும், - இம் மூன்றும் ஆழ்ச்சிப் படுக்கும், அளறு. விளக்கம் மென்மையான தோள்களையுடைய கணிகையரின் மென்மையான மொழியும், தூண்டிலில் மீனுக்கு இரையாக வைக்கப்பட்ட தவளையும், பகைவர்களுடைய வணக்கமும், ஆகிய இம்மூன்றும் நரகம் போன்றதாகும். பொருள் காண் தகு - காணுதற்குத் தக்க, மென்தோள் - மெல்லிய தோள்களையுடைய, கணிகை - வேசையின், வாய் - வாயிற் பிறக்கின்ற, இன்சொல்லும் - இனிய மொழியும்; தூண்டிலினுள் - தூண்டிலினிடத்து, பொதிந்த - (மீனுக்கு இரையாக அதன் முள்ளை மறைத்து) வைக்கப்பட்ட, தேரையும் - தவளையும் : காழ்ந்த - வயிரம் பற்றிய, பகைவர் - பகைவர்களுடைய, மாண்ட - மாட்சிமைப்பட்ட, சீர் - சீரையுடைய, வணக்கமும் - வணக்கமும்; இ மூன்றும் - ஆகிய இம் மூன்றும், ஆழ்ச்சிப் படுக்கும் - (உயிர்களைத் தன்னுள்ளே) அழுந்தப் பண்ணுகின்ற, அளறு - நரகம் (போல்வனவாம்); | ||||||
தெரியமா உங்களுக்கு !.... | ||||||
தில்லையாடி வள்ளியம்மை · தில்லையாடி வள்ளியம்மை (பெப்ரவரி 22, 1898 - பெப்ரவரி 2, 1914) இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு பதினாறாவது வயதில் உயிர்நீத்த ஒரு பெண் போராளி. · 1913 -ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தென்னாப்பிரிவிக்காவில் வசித்து வந்த இந்தியர்களுக்கு பிரித்தானியர்களால் விதிக்கப்பட்ட தலைவரியை எதிர்த்து நடத்திய அறப்போராட்டத்தில் கலந்துகொண்டு ஆட்சியாளர்களுக்கு எதிராகத் துணிந்து போராடினார். · 1913 -ஆம் ஆண்டு திசம்பர் மாதம் சிறையில் அடைக்கப்பட்ட அவர் உடல் நலக்குறைவால் விடுதலை செய்யப்பட்ட போதும் போராட்டக் குழுவினரின் கோரிக்கை நிறைவேறாத நிலையில் வெளியே வர மறுத்து, பின்னர் இந்தியர்களுக்கு விதிக்கப்பட்ட தலைவரி இரத்தான பின்பே விடுதலையை ஏற்று வெளியே வந்தார். · பதினாறே ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த அவரை "பலன் ஏதும் கருதாமல் தென்னாப்பிரிக்காவில் தியாகம் செய்து வெற்றி கண்ட தில்லையாடி வள்ளியம்மை அவர்கள்தாம் எனக்கு முதன் முதலில் விடுதலை உணர்வை ஊட்டிய பெருமைக்குரியவர்" என காந்தி பாராட்டியுள்ளார். மேலும் படிக்க | ||||||
செய்திகள் | ||||||
தமிழக சிறைக்கு சசிகலாவை மாற்றுவதை அனுமதிக்க முடியாது: பி.வி.ஆச்சார்யா உறுதி - தி இந்து ஏப்ரல் முதல் மின்னணு குடும்ப அட்டைகள்: தமிழக அரசு அறிவிப்பு - தினமணி சட்டமன்றத்தில் ஜனநாயக படுகொலைக்கு கண்டனம்: தமிழகம் ...- தினகரன் வெளியேற்றும் அமெரிக்கா, வரவேற்கும் ஜப்பான்! - தி இந்து மும்பை மாநகராட்சி தேர்தல் : 227 வார்டுகளில் விறுவிறுப்பான ... - தினகரன் 170 நாட்களில் 10 கோடி வாடிக்கையாளர்களை கடந்தது ரிலையன்ஸ் ... - தி இந்து 32.30 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.2247 கோடி வறட்சி நிவாரணம் - தினமலர் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மெக்மாஸ்டர் ... - தினமணி மகளிர் உலகக் கோப்பை தகுதிச்சுற்று: தென் ஆப்பிரிக்காவை ... - தினமணி ஐபிஎல் ஏலம் 2017: இந்திய பந்துவீச்சாளர்களுக்கு அதிக மவுசு - தி இந்து | ||||||
வீடு வாடகைக்கு | ||||||
LIG flat at Mayur Vihar Phase - 3 avvailable for on Lease Rental basis from 1st of March'17.The interested family is requested to directly contact email: Bala - 9990209131 / 08527498136 Email id: aruna_clt@yahoo.co.in | ||||||
நம்மை சுற்றி | ||||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact |
| |
23.2.17
| Sri Devi Kamakshi Mandir, New Delhi | Sri Bala Periawal Jayanthi Jayanthi Celebrations of His Holiness Jagadguru Pujyasri Sankara Vijayendra Saraswathi Sankaracharya Swamiji 22.2.17 4.00 PM ACCIDHRA ASWAMEDA PARAYANAM 23.2.17 8.30 A.M Onwards Mahanyasa Ekadasa Rudhra Japa Abishekam, Trisathi Archanai,Harathi 6.00 P.M onwards Veda, Upanishad Parayanam Paduka Puja 7.15 P.M. Prakara Utsavam, Harathi | Sankara Vijayendra Saraswathi Sankaracharya Swamiji |
|
| |
24.2.17 8.30 PM onwards
| Natya Tarangini Performing Arts Centre, Saket, Delhi | Shiv Aradhana celebration of "MAHASHIVARATRI" festival in an "All Night Concert" | Drs. Raja Radha Reddy and Kaushalya Reddy |
| ||
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
|
Tuesday, February 21, 2017
22-2-2017 “News Letter” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment