28-2-2017 "News Letter" from Avvai Tamil Sangam Is this 1mail not displaying correctly? View it in your browser | ||
| அவ்வை தமிழ்ச் சங்கம், மாசி –16 (செவ்வாய்), திருவள்ளுவராண்டு 2047, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | |
திரிகடுகம் பாடல் -28 | ||
வெல்வது வேண்டி வெகுண்டுரைக்கு நோன்பிலியும் இல்லது காமுற் றிருப்பானுங் - கல்வி செவிக்குற்றம் பார்த்திருப் பானும்இம் மூவர் உமிக்குத்திக் கைவருந்து வார். விளக்கம் வெல்ல வேண்டி சினந்து சொல்கின்ற தவம் இல்லாதவனும், கிடைத்தற்கரிய பொருளை விரும்புபவனும், பிறன் கல்வியில் குற்றத்தைப் பார்ப்பவனும் ஆகிய இம்மூவரும் துன்பத்தையே அடைவர். பொருள் வெல்வது - சொல்வென்றியை, வேண்டி - விரும்பி, வெகுண்டு உரைக்கும் - (உண்மைப் பொருளை யுரைப்போரைச்) சினந்து சொல்கின்ற, நோன்பு இலியும் - தவம் இல்லாதவனும், (தீயோனும்,) இல்லது - (தனக்குக்) கிடைத்தற்கரிய பொருளை, காமுற்று - விரும்பி, இருப்பானும் - இருக்கின்றவனும்; கல்வி - பிறன் கற்ற கல்விப் பொருளில், செவிக் குற்றம் - செவியினால் குற்றத்தை, பார்த்திருப்பானும் - ஆராய்ந்து பார்க்கின்றவனும், இ மூவர் - ஆகிய இம் மூவரும், உமி குத்தி - உமியைக் குத்தி, கை வருந்துவார் - கைவருந்துவோரை ஒப்பர்; | ||
தெரியமா உங்களுக்கு !.... | ||
தேசிய அறிவியல் நாள் · தேசிய அறிவியல் நாள் இந்தியாவில் பெப்ரவரி 28 ஆம் நாளில் ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. · தேசத்தலைவர்கள் மற்றும் தியாகிகளைக் கொண்டாடுவது போல அறிவியல் மேதைகளும் போற்றப்பட வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் 1987 - ஆம் ஆண்டு இந்தத் தேசிய அறிவியல் நாள் இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. · சர். சி. வி. இராமன் தனது புகழ்பெற்ற ராமன் விளைவை (Raman Effect) இந்நாளிலேயே கண்டுபிடித்தார். இந்தக் கண்டுபிடிப்பு உலகளாவிய பெருமையை இந்தியாவிற்குப் பெற்றுத் தந்ததுடன் உயரிய விருதான நோபல் பரிசும் (1930) இவருக்கு கிடைத்தது. அந்நிகழ்வின் நினைவாகவும் அறிவியல் என்பது அடித்தட்டு மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கோடும் இந்திய அரசு இந்நாளைத் தேசிய அறிவியல் நாளாகப் பிரகடனப்படுத்தியது. மேலும் படிக்க
டாக்டர் இராஜேந்திரப் பிரசாத் · டாக்டர் இராஜேந்திரப் பிரசாத் Dr. Rajendra Prasad 3 டிசம்பர் 1884 – 28 பிப்ரவரி 1963) இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரும் இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். காங்கிரஸ் கட்சித் தலைவர்களுள் ஒருவர். · 1950 முதல் 1962 வரை இந்திய குடியரசுத் தலைவராக இருந்தார். இரு முறை குடியரசுத் தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே குடியரசுத் தலைவர். மேலும் படிக்க
தி. ஜானகிராமன் · தி. ஜானகிராமன் (T.Janakiraman, பெப்ரவரி 28, 1921 - நவம்பர் 18, 1982 . திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம், தேவக்குடி) ஒரு புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர். தி.ஜா என்றும் அழைக்கப்படுபவர். சக்தி வைத்தியம் என்ற சிறுகதைத் தொகுப்புக்காக தமிழுக்கான சாகித்ய அகாதமி பரிசு பெற்றவர். · தமிழின் மிகப்புகழ்பெற்ற நாவல்களான மோகமுள், மரப்பசு, அம்மா வந்தாள் போன்றவற்றை எழுதியவர். மேலும் படிக்க | ||
செய்திகள் | ||
நெடுவாசல் போராட்டத்துக்கு 100 கிராம மக்கள் ஆதரவு: ஒரே நாளில் 10,000 பேர் திரண்டனர் - தி இந்து பிரதமரிடம் 41 பக்க கோரிக்கை மனு எடப்பாடி பழனிசாமி வழங்கினார் - தினத் தந்தி 'நீட்' அடிப்படையில் கால்நடை மருத்துவப் படிப்புக்கும் மாணவர் சேர்க்கை - தி இந்து இயற்கை எரிவாயு எடுக்க எதிர்ப்பு: நெடுவாசலில் போராட்டத்தை ...– தினத் தந்தி அமெரிக்காவின் பாதுகாப்பு செலவினங்களில் 10 சதவீதம் அதிகரிக்க ... – பிபிசி ஆஸ்கர் விருதுகள் - வெற்றியாளர்கள் பட்டியல்| சிறந்த படம்: மூன் லைட் - தி இந்து விராட்கோலிக்கு சிறந்த கேப்டன் விருது- மாலை மலர் | ||
வீடு வாடகைக்கு | ||
LIG flat at Mayur Vihar Phase - 3 avvailable for on Lease Rental basis from 1st of March'17.The interested family is requested to directly contact email: Bala - 9990209131 / 08527498136 Email id: aruna_clt@yahoo.co.in | ||
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
|
Monday, February 27, 2017
28-2-2017 “News Letter” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment