5-4-2017 "News Letter" from Avvai Tamil Sangam Is this 1mail not displaying correctly? View it in your browser | ||||||
| அவ்வை தமிழ்ச் சங்கம், பங்குனி –23 (திங்கள்), திருவள்ளுவராண்டு 2047, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | |||||
திரிகடுகம் பாடல் -47 | ||||||
சில் சொல், பெருந் தோள், மகளிரும்; பல் வகையும் தாளினால் தந்த விழு நிதியும்; நாள்தொறும் நாத் தளிர்ப்ப ஆக்கிய உண்டியும்; - இம் மூன்றும் காப்பு இகழல் ஆகாப் பொருள். விளக்கம் மெல்லிய சொல்லையும், பெரும் தோள்களையுமுடைய மகளிரும், பலவகை முயற்சியால் தேடிய செல்வமும், நாக்கில் நீர் ஊறும்படியாகச் சமைத்த உணவும், என்றும் இகழ்ந்து கூற முடியாத பொருள்கள் ஆகும். பொருள் சில்சொல் - மெல்லிய சொல்லையும், பெரும்தோள் - பெரிய தோள்களையுமுடைய, மகளிரும் - பெண்டிரும்; பல்வகையும் - பலவகையாலும், தாளினால் - முயற்சியினால், தந்த - தேடிய, விழுநிதியும் - சிறப்பாகிய பொருளும், நாள்தோறும் - எப்பொழுதும், நா - நாக்கு, தளிர்ப்ப - நீர் அருந்தும்படி, ஆக்கிய - சமைத்த, உண்டியும் - உணவும்; இ மூன்றும் - ஆகிய இம்மூன்றும், காப்பு - காத்தலை, இகழல் ஆகா - தாழ்த்திக் கூறுதலாகாத, பொருள் பொருள்களாம்; | ||||||
தெரியமா உங்களுக்கு !.... | ||||||
எம். சாரதா மேனன் · எம். சாரதா மேனன் (M. Sarada Menon) என்பவர் இந்தியாவின் முதல் பெண் மனநல மருத்துவர் மற்றும் ஸ்கார்ப் என்னும் தொண்டு நிறுவனத்தை தொடங்கிய பெண்மணி ஆவார். பத்ம பூசண் விருது, அவ்வையார் விருது ஆகியவற்றைப் பெற்றவர். மேலும் படிக்க எஸ். எஸ். பிள்ளை · சுப்பையா சிவசங்கரநாராயண பிள்ளை, அல்லது, எஸ். எஸ். பிள்ளை (ஏப்ரல் 5, 1901 - ஆகஸ்ட் 31, 1950) என்பவர் இருபதாம் நூற்றாண்டின் சிறந்த இந்தியக் கணிதவியலாளரில் ஒருவர். · எண் கோட்பாட்டில் பல நிபுணர்களின் கவனத்தை ஈர்த்த வாரிங் பிரச்சினையில் அவருடைய சாதனை மிகப்பெரிதாகப் பேசப்படுகிற ஒன்று. இந்தியா அவருடைய அகால மரணத்தினால் இன்னும் பல சாதனைகள் புரிந்து நாட்டுக்குப் புகழ் சேர்க்கக்கூடிய ஒருவரை இழந்தது. · எண் கோட்பாட்டில் வாரிங் பிரச்சினையைப் பற்றிய ஒரு முக்கியமான கண்டுபிடிப்பைச் செய்து சரித்திரம் படைத்தார். 1909இல் டேவிட் ஹில்பர்ட் வாரிங் பிரச்சினையைப் பற்றிய ஓர் அடிப்படைத் தேற்றத்தை நிறுவினார். மேலும் படிக்க | ||||||
செய்திகள் | ||||||
குஜராத் மாநில முதல் பெண் டிஜிபி கீதா ஜோரி! - தினமணி அனைத்து விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் ...-தினத் தந்தி சிரியாவில் 'ரசாயன வாயு தாக்குதல்': 11 குழந்தைகள் உட்பட 58 பேர் பலி - தி இந்து அமெரிக்காவை தொடர்ந்து பிரிட்டனுக்கான விசாவிலும் - தினமலர் நியூயார்க்கைவிட 3 மடங்கு பெரிய நகரத்தை உருவாக்கும் சீனா- தி இந்து புதிய 200 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்யும் திட்டத்தை ... - தினத் தந்தி இந்தியா ஓபன் பாட்மிண்டன்: பி.வி.சிந்து சாம்பியன்- ஒலிம்பிக் ... - தி இந்து | ||||||
நம்மை சுற்றி |
| |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact |
| |
8.4.2017 &9.4.2017 6.00 AM onwards | MAA AADHYA SAKTHI DHAM MANDIR, Block E-5, [ Opp. District Park ] Sector – 16, Rohini, Delhi - 89 | 16th ANNIVERSARY CELEBRATIONS Sri Radha Kalyana Mahotsavam
| ROHINI SRI VISHNU SAHASRANAMA SATSANGAM
|
| ||
8.4.2017 &9.4.2017
| Siddhi vinayakar koil G-block sector-22, Noida | Sri nama navami Mahotsav | VPS - NOIDA |
| ||
30.4.2017 | Sri Devi Kamakshi Mandir, Opp. J.N.U. East Gate, A-11, Aruna Asaf Ali Marg, New Delhi | 43rd year Samashti Upanayanam
Those desirous of performing the Upanayanam of their Wards may contact the at the given address or on phone number and register their name, Veda and Gothra at the earliest, in any case, before the 25th April,2017. | Indu Samaya Madar Mandram | 25742607 / 9871765727 / 41802507 / 26890508/ 22720797 / 22770815 / 26865513 |
| |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
|
Tuesday, April 4, 2017
5-4-2017 “News Letter” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment