14-4-2017 "News Letter" from Avvai Tamil Sangam Is this 1mail not displaying correctly? View it in your browser | ||||||
| அவ்வை தமிழ்ச் சங்கம், சித்திரை –1 (வெள்ளி), திருவள்ளுவராண்டு 2047, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | |||||
அனைவருக்கும் ஹேவிளம்பி வருட இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்... | ||||||
திரிகடுகம் பாடல் -52 | ||||||
கண்ணுக் கணிகலம் கண்ணோட்டம் காமுற்ற பெண்ணுக் கணிகலம் நாணுடைமை - நண்ணும் மறுமைக் கணிகலம் கல்வியிம் மூன்றும் குறியுடையோர் கண்ணே யுள. விளக்கம் கண்களுக்கு அணிகலம் கண்ணாடுதல், பெண்ணுக்கு அணிகலம் நாணம், மறுபிறப்புக்கு அணிகலன் கல்வி அறிவு. இம்மூன்றும் ஆராயும் இயல்புடையாரிடத்தில் உள்ளன. பொருள் கண்ணுக்கு - கண்களுக்கு, அணிகலம் - அணியத் தக்க பூணாவது, கண்ணோட்டம் - கண்ணோடுதல்; காமுற்ற - (கணவனால்) விரும்பப்பட்ட, பெண்ணுக்கு - குலமகளுக்கு, அணிகலம் - அணிகலனாவது, நாண் உடைமை - நாணம் உடையவளாயிருத்தல்; நண்ணும் - பொருந்துகின்ற, மறுமைக்கு - மறுப்பிறப்புக்கு, அணிகலம் - அணிகலனாவது, கல்வி - கல்வி அறிவு; இ மூன்றும் - ஆகிய இம் மூன்றும், குறி உடையார் கண்ணே - ஆராயும் இயல்புடையாரிடத்தே உள - உண்டு; | ||||||
தெரியமா உங்களுக்கு !.... | ||||||
பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் · பாபா சாகேப் என்றழைக்கப்படும் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (Bhimrao Ramji Ambedkar; 14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956) இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகவும், உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர். தாழ்த்தப்பட்ட மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர். பரோடா மன்னருடன் இணைந்து தீண்டாமை ஒழியப் போராடியவர். · பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் தேர்ந்தவர்; ஆசிரியராகவும், இதழாளராகவும், எழுத்தாளராகவும் சமூகநீதிப் புரட்சியாளராகவும் விளங்கியவர். 'திராவிட புத்தம்' என்ற பெயரில் பல ஆயிரக்கணக்கான தாழ்த்தப்பட்டவர் எனப்பட்ட தலித் மக்களை புத்தசமயத்தைத் தழுவச்செய்தவர்; இவை யாவற்றுக்கும் மேலாக இந்திய அரசியலமைப்புச் சாசனத்தை வரைவதற்கான குழுவின் தலைவராகவும் பொறுப்பேற்றவர். · 2012 ஆம் ஆண்டில் வரலாற்றுத் தொலைக்காட்சியும், சி.என்.என்- ஐ.பி.என் தொலைக்காட்சியும் நடத்திய வாக்கெடுப்பில் மிகச்சிறந்த இந்தியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். · இந்தியாவின் மிகச்சிறந்த உயரிய விருதான 'பாரத ரத்னா' விருது இவரது இறப்புக்குப் பின் 1990 இல் இவருக்கு வழங்கப்பட்டது..மேலும் படிக்க இராகுல் சாங்கிருத்தியாயன் · இராகுல் சாங்கிருத்தியாயன் (ஏப்ரல் 9, 1893 - ஏப்ரல் 14, 1963) இந்தி பயண இலக்கியத்தின் தந்தை என அறியப்படுபவர்; தன் வாழ்நாளில் 45 வருட காலத்தை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணத்தில் செலவழித்தவர்; பன்மொழிப்புலவர்; பல்துறை வித்தகர்; புத்தத் துறவியாகி பின்னர் மார்க்சியவாதியானவர். · அதுமட்டுமன்றி ஆங்கிலேயர் ஆட்சிக்கெதிரான கருத்துகளை எழுதியதற்காக மூன்றாண்டு கால சிறைவாசம் அனுபவித்தவர். · இருபது வயதில் எழுத ஆரம்பித்த இராகுல்ஜி பல்வேறு துறைகளில் 146 புத்தகங்கள் எழுதியிருக்கிறார். இவர் எழுதிய நூல்களில் அனைவரும் அறிந்தது வால்கா முதல் கங்கை வரை வரலாற்றுப் புனைவு நூலாகும். · கி.மு. ஆறாயிரத்தில் துவங்கும் இந்நூல் கி.பி. 1942இல் முடிகிறது. இந்நூல் கே.என். முத்தையா என்பவரால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது. தெலுங்கு மற்றும் மலையாள மொழிபெயர்ப்புகளும் அம்மொழிகளில் புகழ்பெற்றுத் திகழ்கின்றன. மேலும் படிக்க | ||||||
வீடு வாடகைக்கு | ||||||
1BHK DDA Flat in 1st floor, sector 14 Dwarka available for Sale. Car Parking space. Free Hold. Immediate Possession, For further details contact: K.P. Sai, Mobile - 08056039285 ,kpsai2311@gmail.com 2 Bed room flat available on rent in Sector 7, Dwarka. This is a first floor flat in Evergreen Apartments. The flat is painted and refurnished recently. ACs and fans are provided in all the rooms. Rent is negotiable. South Indian vegetarians preferred. Interested persons could get in touch with Mr. Jaishankar @ 9810116465. | ||||||
செய்திகள் | ||||||
வாக்குப் பதிவு இயந்திரமும் கட்சிகளின் இரட்டை நிலைப்பாடும் - தி இந்து தலைமை நீதிபதி உட்பட உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் ஆஜராக ... - தினகரன் அதிநவீன போர் கப்பல் நாளை சென்னை வருகிறது பொதுமக்கள் .. - .தினத் தந்தி டிடிவி தினகரன் நேரில் ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு - தி இந்து அந்தமானில் மேலடுக்கு சுழற்சி: வெப்பம் மேலும் அதிகரிக்க ...- தினமணி ஆப்கானிஸ்தானில் அணு அல்லாத மிகப்பெரிய குண்டை வீசிய .. - .தினத் தந்தி கொல்கத்தாவுடன் இன்று மோதல்: ஹாட்ரிக் வெற்றி முனைப்பில் பஞ்சாப் - தி இந்து | ||||||
நம்மை சுற்றி |
| |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact |
| |
14.4.2017 6.00 p.m | Vasuki Auditorium, 20. Lodi Institutional Area, Lodi Road | SWATHI SMRITHI -2017 ... HARE PADMANABHA an evening dedicated to the King Composer H. H. Swathi Thirunal featuring Smt Sudha Raghuraman . Carnatic vocal and Dr Vasudevan .. Bharathantyam | Rasikapriya in association with Lok Kala Munch |
| ||
14.4.2017
| Arulmigu varasiddhi vinayagar kovil, Noida | TAMIL NEW YEAR - 14.04.2017 ACTIVITIES | Vedic Prachar Sansthan |
| ||
22.4.2017 | Sri Ram Mandir, Dwarka | Annual Chithirai Festival of Music & Dance | Dwarakalaya | Mr. Santhakumar 9818084125 or Mr. Jaishankar @ 9810116465. |
| |
30.4.2017 | Sri Devi Kamakshi Mandir, Opp. J.N.U. East Gate, A-11, Aruna Asaf Ali Marg, New Delhi | 43rd year Samashti Upanayanam
Those desirous of performing the Upanayanam of their Wards may contact the at the given address or on phone number and register their name, Veda and Gothra at the earliest, in any case, before the 25th April,2017. | Indu Samaya Madar Mandram | 25742607 / 9871765727 / 41802507 / 26890508/ 22720797 / 22770815 / 26865513 |
| |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
|
Thursday, April 13, 2017
14-4-2017 “News Letter” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment