Monday, April 10, 2017

11-4-2017 “News Letter” from Avvai Tamil Sangam

11-4-2017 "News Letter" from Avvai Tamil Sangam

Is this 1mail not displaying correctly? View it in your browser

  

 

அவ்வை தமிழ்ச் சங்கம்,

பங்குனி  29 (செவ்வாய்), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

திரிகடுகம் பாடல் -49

ஏவாது மாற்றும் இளங்கிளையும் காவாது

வைதெள்ளிச் சொல்லுந் தலைமகனும் - பொய்தெள்ளி

அம்மனை தேய்க்கும் மனையாளும் இம்மூவர்

இம்மைக் குறுதியில் லார்.

விளக்கம்

மனைவியை இகழ்ந்து பேசுகின்ற கணவனும், தந்தை சொல் கேளாத புதல்வனையும், தான் வாழும் வீட்டின் செல்வத்தை அழிக்கும் மனைவியும், எவருக்கும் பயனில்லாதவர் ஆவார்.

பொருள்

ஏவு - (பெற்றோரால்) ஏவப்பட்ட, ஆதும் - எந்தக் காரியத்தையும், மாற்றும் - தன்னால் முடியாதென மறுக்கின்ற, இளங்கிளையும் - புதல்வனும்; காவாது - மனைவியைக் காவாமல், வைது - திட்டி, எள்ளி - இகழ்ந்து, சொல்லும் - பேசுகின்ற, தலைமகனும் - கணவனும்; பொய் - பொய்ம் மொழியை, தெள்ளி - ஆராய்ந்து சொல்லி, அம்மனை - தான் வாழ்கின்ற வீட்டின் செல்வத்தை, தேய்க்கும் - அழிக்கும், மனையாளும் - மனைவியும்; இ மூவர் - ஆகிய இம் மூவரும், இம்மைக்கு - இப் பிறப்பில், உறுதி யில்லார் - எவருக்கும் பயனில்லாதவர் ஆவர்.;

தெரியமா உங்களுக்கு  !....

கி. வா. ஜகந்நாதன்

·        கி. வா. ஜகந்நாதன் என்றழைக்கப்பட்ட கிருஷ்ணராயபுரம் வாசுதேவ ஜகந்நாதன் (ஏப்ரல் 11, 1906 - நவம்பர் 4, 1988) குறிப்பிடத்தக்க தமிழ் இதழாளர், கவிஞர், எழுத்தாளர் மற்றும் நாட்டுப்புறவியலாளர்.

·        இவர் தமிழறிஞர் உ. வே சாமிநாதய்யரின் மாணாக்கராவார். கலைமகள் இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார்.

·        1967 இல் இவரது வீரர் உலகம் என்னும் இலக்கிய விமர்சன படைப்பிற்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. கம்பன் கழகம் இவரது நினைவாக கி. வா. ஜ பரிசை நிறுவி வழங்கி வருகிறது.  மேலும் படிக்க   

உலக நடுக்குவாத நாள்

·         நடுக்குவாதம் அல்லது பார்கின்சன் நோய் (Parkinson's disease) அல்லது பீ.டி என்பது மைய நரம்பு மண்டலத்தைச் சிதைக்கின்ற ஒரு நோய் ஆகும், பொதுவாக இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் இயக்கத்திறன்கள், பேச்சு மற்றும் மற்ற செயல்பாடுகள் சீராக இயங்கமாட்டாது.

·          மூளையின் தொழிற்பாடுகளில் ஒன்றாகிய உடலியக்கங்களை ஒருங்கிணைத்தல் பாதிப்படைவதால் இந்நோய் ஏற்படுகின்றது. பார்கின்சனின் நோயின் அறிகுறிகள் இடைக்காலம் முதற்கொண்டே அறியப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளன. அதில் அவெர்ரோஸ் குறிப்பிடத்தக்கதாகும்.

·         எனினும், அது முறையாக அங்கிகரிக்கப்படாமல், ஆன் எஸ்ஸே ஆன் த ஷேகிங்க் பால்ஸியில் (1817)ஆங்கிலேய மருத்துவரான ஜேம்ஸ் பார்கின்சன் குறிப்பிடும் வரை ஆவணப்படுத்தப்படாமலிருந்தது.

·         பார்கின்சன் நோய் அப்போது பராலிசிஸ் அஜிடன்ஸ் என்று அறியப்பட்டிருந்தது. "பார்கின்சன்ஸ் நோய்" என்ற பதம் பின்பு ஜான் - மார்டின் ஷார்காட் மூலமாக அளிக்கப்பட்டது.

·        பிற்காலத்தில் நோபல் பரிசு பெற்ற ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி ஆர்விட் கார்ல்சன் என்பவரில் வேலையின் காரணமாக மூளையில் ஏற்படும் உயிர்வேதியியல் மாற்றங்கள் 1950களில் கண்டு பிடிக்கப்பட்டது. எல்-டோபா மருத்துவ பயிற்சியில் 1967ம் ஆண்டு நுழைந்தது.எல்- டோபாவுடன் அளிக்கப்படும் சிகிச்சையினால் பார்கின்சன் நோயை உடைய நோயாளிகளில் ஏற்படும் முன்னேற்றங்களைப் பற்றிய முதல் பெரிய ஆய்வு 1968ல் வெளியிடப்பட்டது.  மேலும் படிக்க   

வீடு வாடகைக்கு     

1BHK DDA Flat in 1st floor, sector 14  Dwarka available for Sale. Car Parking space. Free Hold.  Immediate Possession, For further details contact: K.P. Sai, Mobile - 08056039285 ,kpsai2311@gmail.com

செய்திகள் 

வருமான வரித்துறையினர் அமைச்சர் விஜய பாஸ்கரிடம் 4 மணி நேரம் விசாரணை

 தி இந்து

ஹெல்மெட் அணியாமல் சென்றால் ரூ.1000 அபராதம்: மக்களவையில் ... - தினமணி

இன்று முதல் சீனா - இங்கிலாந்து இடையே நேரடி சரக்கு ரயில் சேவை- தினகரன்

குளிர்பானம் தயாரிக்க தாமிரபரணியிலிருந்து தண்ணீர் வழங்குவது ... - தி இந்து

ஆதார் - பான்கார்டு இணைப்பு: 10 அம்சங்கள்தினமலர்

ரத்து செய்யப்பட்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு தேர்தல் ஆணையம் செலவு செய்தது ரூ.1.10 கோடி; கட்சிகளுக்கு ஆதரவளித்த சுயேச்சைகள் மீது நடவடிக்கை - தி இந்து

ஆஸ்திரேலிய பிரதமருடன் மோடி பேச்சுவார்த்தை 6 ஒப்பந்தங்கள் ... - தினத் தந்தி

சவுதி அரேபியா மக்களுக்கு வருமான வரி ரத்து: அரசு அதிரடி ...-  தினத் தந்தி

பெண்களுக்கான ஹாக்கி லீக் போட்டி: இறுதி ஆட்டத்தில் இந்தியா வெற்றி - தி இந்து

நம்மை சுற்றி

 

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

 

30.4.2017

Sri Devi Kamakshi Mandir, Opp. J.N.U. East Gate, A-11, Aruna Asaf Ali Marg, New Delhi

43rd year  Samashti Upanayanam

 

Those desirous of performing the Upanayanam of their Wards may contact the at the given address or on phone number and register their name, Veda and Gothra at the earliest, in any case, before the 25th April,2017.

Indu Samaya Madar Mandram

25742607 / 9871765727 / 41802507 / 26890508/ 22720797 / 22770815 / 26865513

 Click Here for invitation

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 


No comments:

Post a Comment