3-4-2017 "News Letter" from Avvai Tamil Sangam Is this 1mail not displaying correctly? View it in your browser | ||||||
| அவ்வை தமிழ்ச் சங்கம், பங்குனி –21 (திங்கள்), திருவள்ளுவராண்டு 2047, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | |||||
திரிகடுகம் பாடல் -46 | ||||||
கல்தூய்மை யில்லாக் கலிமாவுங் காழ்கடிந்து மேல்தூய்மை யில்லாத வெங்களிறுஞ் - சீறிக் கறுவி வெகுண்டுரைப்பான் பள்ளிஇம் மூன்றும் குறுகார் அறிவுடை யார். விளக்கம் நடக்க இயலாத குதிரையும், கட்டுத்தறியை முறித்து வீரனிருப்பதற்கேற்ற மேலிடம் தூய்மை இல்லாத பயன்படாத யானையும், மாணவர்கள் மேல் சீற்றம் கொண்டு உரைக்கும் கல்விச் சாலையும் அறிவுடையார் சேர மாட்டார். பொருள் கால் - நடையில், தூய்மை - தூயது ஆகுந் தன்மை, இல்லா - இல்லாத, கலிமாவும் - குதிரையும், காழ் - கட்டுத்தறியை, கடிந்து - முறித்து, மேல்தூய்மை - (வீரனிருப்பதற்கேற்ற) மேலிடம் தூயதாம் தன்மை, இல்லாத - உடையதாயிராத, வெங்களிறும் - கொடிய யானையும்; கறுவி - (மாணாக்கன் மேல்) வைரமடைந்து; சீறி - சீற்றங்கொண்டு, வெகுண்டு - சினந்து, உரைப்பான் - (பாடம்) சொல்லுவோனுடைய, பள்ளி - கல்விச்சாலையும்; இ மூன்றும் - ஆகிய இம் மூன்றையும், அறிவு உடையார் - (அவற்றின் பயனின்மையை) உணர்தலுடையார், குறுகார் - சேரார்; | ||||||
தெரியமா உங்களுக்கு !.... | ||||||
சாம் ஹார்முஸ்ஜி பிரேம்ஜி ஜாம்ஷெட்ஜி மானெக்சா · சாம் ஹார்முஸ்ஜி பிரேம்ஜி ஜாம்ஷெட்ஜி மானெக்சா (ஏப்ரல் 3, 1914 – சூன் 27, 2008) என்னும் முழுப் பெயர் கொண்ட சாம் மானேக்சா நான்கு தலைமுறைகளாக இராணுவத்தில் பணிபுரிந்தவர். · 40 ஆண்டுகால ராணுவ சேவையில் 5 போர்களைச் சந்தித்தவர். இந்திய இராணுவத்தின் எட்டாவது தலைமைத் தளபதியாக இருந்து இந்தியா வழிநடத்திய ஏனைய போர்களில் கலந்து கொண்டவர். · இந்தியாவின் மிக உயர்ந்த பதவியான பீல்டு மார்ஷல் பதவியை முதலில் பெற்றார். மேலும் படிக்க கமலா சட்டோபாத்தியாயா · கமலா சட்டோபாத்தியாயா (Kamaladevi Chattopadhyay) 3 ஏப்ரல் 1903–29 அக்டோபர் 1988) என்பவர் ஒரு இந்திய சமூக சீர்திருத்தவாதி, பெண்ணியவாதி மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார். · இவர் இந்திய விடுதலை இயக்கத்தில் ஈடுபட்டதற்காக நினைவு கூரப்படுகிறார். · மேலும் இந்திய கைவினைப் பொருள்கள், கைத்தறி வளர்ச்சி, சுதந்திர இந்தியாவில் நாடக மறுமலர்ச்சி ஆகியவற்றிற்கு உந்து சக்தியாக இருந்தார். மேலும் கூட்டுறவு இயக்கத்தின் முன்னோடியாகவும், இந்திய பெண்களின் சமூக, பொருளாதார மேம்பாட்டுக்காக உழைத்தவர். · சங்கீத நாடக அகாதெமியின் துணைத்தலைவர், பாரதீய நாட்டிய சங்கத்தின் தலைவர், அகில இந்திய கைவினைஞர்கள் வாரியத் தலைவர், யுனெஸ்கோவின் உறுப்பினர் எனப் பல பதவிகளை வகித்து சிறப்பாகப் பணியாற்றியவர் மேலும் படிக்க | ||||||
செய்திகள் | ||||||
நாட்டிலேயே மிக நீளமான சுரங்க சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார் - தி இந்து டெல்லியில் தமிழக விவசாயிகள் மொட்டையடித்துப் போராட்டம் - தி இந்து விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் இன்று பொது ... – தினமலர் குடியிருப்பு பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை அமைக்க பல ... - தினகரன் ரிசர்வ் வங்கி ஆளுநரின் ஊதியம் இரு மடங்கு உயர்வு – தினமணி ரத்தம் சிந்தியது போதும்; வளர்ச்சிக்கு உதவுங்கள் காஷ்மீர் ... - தினமலர் இந்திய கலாசாரத்தின் தூதர் நான்: தலாய் லாமா - தினமலர் இந்தியா ஓபன் சூப்பர் சீரீஸ் பேட்மின்டன் தங்கம் வென்றார் பி.வி ... - தினகரன் | ||||||
நம்மை சுற்றி |
| |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact |
| |
8.4.2017 &9.4.2017 6.00 AM onwards | MAA AADHYA SAKTHI DHAM MANDIR, Block E-5, [ Opp. District Park ] Sector – 16, Rohini, Delhi - 89 | 16th ANNIVERSARY CELEBRATIONS Sri Radha Kalyana Mahotsavam
| ROHINI SRI VISHNU SAHASRANAMA SATSANGAM
|
| ||
30.4.2017 | Sri Devi Kamakshi Mandir, Opp. J.N.U. East Gate, A-11, Aruna Asaf Ali Marg, New Delhi | 43rd year Samashti Upanayanam
Those desirous of performing the Upanayanam of their Wards may contact the at the given address or on phone number and register their name, Veda and Gothra at the earliest, in any case, before the 25th April,2017. | Indu Samaya Madar Mandram | 25742607 / 9871765727 / 41802507 / 26890508/ 22720797 / 22770815 / 26865513 |
| |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
|
Sunday, April 2, 2017
3-4-2017 “News Letter” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment