13-4-2017 "News Letter" from Avvai Tamil Sangam Is this 1mail not displaying correctly? View it in your browser | ||||||
| அவ்வை தமிழ்ச் சங்கம், பங்குனி –31 (வியாழன்), திருவள்ளுவராண்டு 2047, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | |||||
திரிகடுகம் பாடல் -51 | ||||||
தூர்ந்து ஒழுகிக்கண்ணும், துணைகள் துணைகளே; சார்ந்து ஒழுகிக்கண்ணும், சலவர் சலவரே; ஈர்ந்த கல் இன்னார் கயவர்; - இவர் மூவர், தேர்ந்தக்கால், தோன்றும் பொருள். விளக்கம் வறுமையிலும் உதவுபவர் உறவினரேயாவார், கருத்துக்கு இணங்கி நடந்தவிடத்தும் பகைவர் பகைவரே ஆவர். துன்பம் செய்யும் கயவர்கள் பிளக்கப்பட்ட கல்லுக்கு ஒப்பாவார்கள். இவர்களிடம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பொருள் தூர்ந்து - (பொருள்வருவாய்) அடைபட்டு ஒழுகிக் கண்ணும் - (இல்லாமல்) வாழுமிடத்தும், துணைகள் - உறவாவோர், துணைகளே - உறவினரே யாவர்; சார்ந்து - கருத்துக்கு இணங்கி, ஒழுகிக் கண்ணும் - நடந்தவிடத்தும், சலவர் - பகைவர், சலவரே - பகைவரே; இன்னா - துன்பஞ் செய்யுங் குணமுள்ள, கயவர் - கீழ்மக்கள், ஈர்ந்த - பிளக்கப்பட்ட கல் - கல்லை ஒப்பாவார்; இவர் மூவர் - இவர் மூவரும், தேர்ந்தக்கால் - (அறிவுடையோர்) ஆராயுமிடத்து; தோன்றும் - வெளிப்படும், பொருள் - பொருள்களாவார்; | ||||||
தெரியமா உங்களுக்கு !.... | ||||||
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் · பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (ஏப்ரல் 13, 1930 - அக்டோபர் 8, 1959) ஒரு சிறந்த தமிழ் அறிஞர், சிந்தனையாளர், பாடலாசிரியர் ஆவார். எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியது இவருடைய சிறப்பாகும். இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.மேலும் படிக்க சுப்பையா முத்தையா · சுப்பையா முத்தையா (Subbiah Muthiah, பிறப்பு: 13 ஏப்ரல் 1930) இந்திய ஊடகவியலாளரும், வரலாற்றாளரும் ஆவார். பழமையான கட்டடங்கள், தொன்மையான கலாச்சாரம், தண்மையான சூழ்நிலையைக் காப்பதில் பேரார்வம் கொண்டவர். சென்னையிலிருந்து வெளிவந்த மாதமிருமுறை இதழான மெட்ராஸ் மியூசிங்ஸ் இதழின் ஆசிரியராகப் பணியாற்றியவர். சென்னை வரலாறு, பண்பாடு பற்றி நிறைய நூல்களை எழுதியுள்ளார்.. மேலும் படிக்க | ||||||
வீடு வாடகைக்கு | ||||||
1BHK DDA Flat in 1st floor, sector 14 Dwarka available for Sale. Car Parking space. Free Hold. Immediate Possession, For further details contact: K.P. Sai, Mobile - 08056039285 ,kpsai2311@gmail.com 2 Bed room flat available on rent in Sector 7, Dwarka. This is a first floor flat in Evergreen Apartments. The flat is painted and refurnished recently. ACs and fans are provided in all the rooms. Rent is negotiable. South Indian vegetarians preferred. Interested persons could get in touch with Mr. Jaishankar @ 9810116465. | ||||||
செய்திகள் | ||||||
டாஸ்மாக் கடைக்கு எதிரான போராட்டம்: பெண்ணை அறைந்த ஏடிஎஸ்பி-க்கு கடும் நெருக்கடி - தி இந்து ‛பா.ஜ.,வுடன் மோதல் போக்கு வேண்டாம்': முதல்வர் கோரிக்கை ...- தினமலர் முதல் சுரங்கப்பாதை: திருமங்கலம்–நேரு பூங்கா இடையே மே மாதம் ...- தினத் தந்தி வீடு தேடி வரும் ரயில் டிக்கெட்; ஐ.ஆர்.சி.டி.சி., அறிமுகம்- தினமலர் இந்த மாதம் 30ம் தேதிக்குள் ஆதார் எண் இணைக்காத வங்கி கணக்கு ...- தினகரன் மே 1-ஆம் தேதி முதல் பெட்ரோல்-டீசல் விலை தினசரி நிர்ணயம்: 5 ...- தினமணி பாரதிய மஹிளா வங்கியை தனியாக நடத்துவதால் செலவு அதிகம்: நிதித்துறை இணையமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் மக்களவையில் தகவல் - தி இந்து 50000 கிராமங்களில் மொபைல் நெட்வொர்க் இல்லை- தினமலர் | ||||||
நம்மை சுற்றி |
| |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact |
| |
14.4.2017 6.00 p.m | Vasuki Auditorium, 20. Lodi Institutional Area, Lodi Road | SWATHI SMRITHI -2017 ... HARE PADMANABHA an evening dedicated to the King Composer H. H. Swathi Thirunal featuring Smt Sudha Raghuraman . Carnatic vocal and Dr Vasudevan .. Bharathantyam | Rasikapriya in association with Lok Kala Munch |
| ||
14.4.2017
| Arulmigu varasiddhi vinayagar kovil, Noida | TAMIL NEW YEAR - 14.04.2017 ACTIVITIES | Vedic Prachar Sansthan |
| ||
22.4.2017 | Sri Ram Mandir, Dwarka | Annual Chithirai Festival of Music & Dance | Dwarakalaya | Mr. Santhakumar 9818084125 or Mr. Jaishankar @ 9810116465. |
| |
30.4.2017 | Sri Devi Kamakshi Mandir, Opp. J.N.U. East Gate, A-11, Aruna Asaf Ali Marg, New Delhi | 43rd year Samashti Upanayanam
Those desirous of performing the Upanayanam of their Wards may contact the at the given address or on phone number and register their name, Veda and Gothra at the earliest, in any case, before the 25th April,2017. | Indu Samaya Madar Mandram | 25742607 / 9871765727 / 41802507 / 26890508/ 22720797 / 22770815 / 26865513 |
| |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
|
Wednesday, April 12, 2017
13-4-2017 “News Letter” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment