29-4-2016 "Naaloru Kalavazhi Narpathu" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | |||||
| அவ்வை தமிழ்ச் சங்கம், சித்திரை–16(வெள்ளி), திருவள்ளுவராண்டு 2047, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com Blogs: http://naalorukalavalinarpathu.blogspot.in/ Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | ||||
களவழி நாற்பது – 28 | |||||
ஓடா மறவ ருருத்து மதஞ்செருக்கிப் பீடுடை வாளார் பிறங்கிய ஞாட்பினுட் கேடகத்தோ டற்ற தடக்கைகொண் டோடி இகலன்வாய்த் துற்றிய தோற்ற மயலார்க்குக் கண்ணாடி காண்பாரிற் றோன்றும் புனனாடன் நண்ணாரை யட்ட களத்து. விளக்கம் சோழன் பகைவர்களை வென்ற களத்தில், பெருமிதத்தோடு போரிட்ட போர்க்களத்தில் வீரர்கள் பகைவர்தம் கைகளை ஏந்திய கேடயத்தோடு அறுபட்டு வீழுமாறு வெட்டினர். அக்கைகளை நரிகள் கவ்விக் கொண்டு ஓடின. அந்தத் தோற்றம் தம் முகங்களைக் கண்ணாடியில் கண்டு மகிழும் மனிதர்களைப் போல அந்நரிகள் பக்கத்தில் நிற்பவர்களுக்குக் காட்சி தந்தன. பொருள் பீடுடை - பெருமை உடைய, புனல் நாடன - நீர் நாட்டையுடைய செங்கட் சோழன், நண்ணாரை - பகைவரை, அட்ட களத்து - கொன்ற போர்க்களத்தில், ஓடா மறவர் - புறங்கொடாத வீரர்கள், உருத்து - கோபித்து, மதம் செருக்கி - களிப்பால் மிகுந்து, பீடு உடை - பெருமையையுடைய, வாளார் - வாளேந்தினவராய், பிறங்கிய - போர் செய்த, ஞாட்பின்உள் - போரின் கண், கேடகத்தோடு அற்ற - கேடகத்தோடறுபட்ட, தட கை - நீண்ட கைகளை, கொண்டோடி - கொண்டுசென்று , இகலன் - ஓரிகள், வாய் துற்றிய - (தமது) வாயிற் கவ்விய, தோற்றம் - காட்சி, அயலார்க்கு - அயலில் நின்றவர்க்கு கண்ணாடி காண்பார் இல் - கண்ணாடி காண்பாரைப் போல தோன்றும் தோன்றாநிற்கும். | |||||
தெரியுமா உங்களுக்கு ! | |||||
ராஜா ரவி வர்மா ( ஏப்ரல் 29, 1848 - அக்டோபர் 2, 1906) · ராஜா ரவி வர்மா நவீன காலத்துக்கு ஏற்ற முறையில் மேல்நாட்டில் வழங்கும் ஓவிய மரபை அப்படியே இந்தியப் பாணி ஓவியக்கலைக்குள் புகுத்தியவர். · உலகப்புகழ் பெற்ற பல ஓவியங்களைப் படைத்தவர். · 1873 இல் வியென்னாவில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சியில் ரவிவர்மாவின் ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு சிறப்பான விருதைப்பெற்றார். · தென்னிந்தியப் பெண்களை இந்துக்கடவுளரின் உருவகங்களாகப் படைத்தார். · பழம்பெரும் காவிய நாயகிகளான துஷ்யந்தை, சகுந்தலை, தமயந்தி போன்றோரின் உருவகங்களை வரைந்து உலகப்புகழ் பெற்றார். மேலும் படிக்க | |||||
செய்திகள் | |||||
நிகழாண்டிலேயே மருத்துவ பொது நுழைவுத் தேர்வு: மே 1, ஜூலை 24 இரு கட்டமாக நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி - தினமணி வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஐஆர்என்எஸ்எஸ்-1ஜி - தி இந்து உலகை ஆட்டிப்படைத்த ஆப்பிள் ஐபோனுக்கு கைகொடுத்தது ... – தினகரன் ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கு: இடைத்தரகர் மைக்கேலை ஒப்படைக்கக் கோரி பிரிட்டனுக்கு கடிதம் - தி இந்து இளைஞர்களை நம்பி இருக்கிறேன்: கலைஞர் - nakkheeran publications பாரீஸ் தாக்குதல் குற்றவாளி பிரான்ஸிடம் ஒப்படைப்பு- தினமலர் ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி: 2-வது சுற்றில் சாய்னா, சிந்து - தி இந்து கொல்கத்தாவை சிதறடித்தார் போலார்ட்: மும்பைக்கு 4-ஆவது வெற்றி - தினமணி | |||||
மணமகன் /மணமகள் தேவை | |||||
Karthick Nivas Ramdoss, DOB: 07/04/1990. Height 5"4', Chettiar/BTech IIT(Kanpur), MBA IIM(Lucknow), Consultant in Mumbai/brought up in Jaipur. Bharat matrimony/tamilmatrimony ID: M4245385. For further details contact: 9828156027. | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact | |
30/04/2016 6.00 PM Onwards
| Vasuki Auditorium, Lok Kala Manch No. 20 Institutional Area, Lodhi Road New Delhi | Chittirai Vizha 6.00 to 7.45 Carnatic Music Concert · Dr. Sajani Srihari - Carnatic Vocal (Asst. Prof dept. of music, Avinasilingam University) · Mr. G. Raghavendra Prasaath- Violin · Guru Jayan P. Das - Mridangam 7.50 to 8.50 Award ceremony | Sri Hayagriva & Lok Kala Manch
| 9811413225 011-24644421 | |
30/04/2016 5.00 PM Onwards | Delhi Tamil Sangam, Thiruvalluvar Kalai Arangam
Sector-V, R K Puram, New Delhi-22 | Taala-brahmum & Umang - 2016 · 5.00 PM–8.30 PM - Starting with Award Program of Senior & Young Musician 2016 of Rudraksham Society · Program on Taala Brahmum 2016 & Umang 2016 – Disciples of 'Taalmani' Shri P. Vetri Boopathy, Pandit Jay Shankar Mishra & Ganesh Shankar Mishra | Rudraksham Society (Primarily on Carnatik) & JM Sangeet Academy (On Hindustani) | R. Muthu Subramanian, V.P. Rudraksham : 9811553220 Abhishek Mishra : 9990550884
| |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
|
No comments:
Post a Comment