18-4-2016 "Naaloru Kalavazhi Narpathu" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | |||||
| அவ்வை தமிழ்ச் சங்கம், சித்திரை–5(திங்கள்), திருவள்ளுவராண்டு 2047, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com Blogs: http://naalorukalavalinarpathu.blogspot.in/ Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | ||||
கோடை கொண்டாட்டம் ! | |||||
அவ்வை தமிழ் சங்கம் & வைஷாலி வாசகர் மற்றும் விமர்சகர் வட்டம் இணைந்து வழங்கும் கோடை கொண்டாட்டம் வைஷாலி & இந்திரபுரம் வாழ் தமிழர்களே! வாருங்கள் இணைவோம்!! கோடையை கொண்டாடுவோம்!!!
நாள் : 24.04. 2016 தினம் : ஞாயிற்றுக்கிழமை நேரம்: மாலை 4 முதல் 8 மணி வரை இடம்: வைஷாலி சிவன் கோவில், செக்டர் 4 ( தஸ் மஞ்சில் என அழைக்கப்படும் 10 அடுக்கு மாடி கட்டிடம் வருமான வரி குடியிருப்பு அருகில்), வைஷாலி.
நிகழ்ச்சி நிரல் · தமிழ்த் தாய் வாழ்த்து · வரவேற்புரை - அவ்வை தமிழ் சங்கம் · நிகழ்சிகள் 1. யார் இவர், ஊமை விளையாட்டு - உங்கள் பொது அறிவுக்கு ஒரு சவால். ஒரு பிரபல மனிதரை கண்டுபிடிக்கும் உற்சாகம் மிக்க குழு விளையாட்டு. வயது வரம்பு: அனைவரும்.
2. இசை உணவு (Food blast) - இசை நாற்காலி போன்று உணவுகளின் பெயர் கொண்டு விளையாடும் விளையாட்டு. வயது வரம்பு: அனைவரும்.
3. அன்னையை அறிவோம் - அன்னையைப்பற்றி குழந்தைகளும் கணவரும் எவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்னும் சுவாரசியம் மிக்க விளையாட்டு.வயது வரம்பு: அனைவரும்.
4. தூய தமிழ் பேச்சு போட்டி.- மூன்று நிமிடங்களில் கொடுக்கப்பட்ட தலைப்பில் எவ்வளவு சரளமாக பிழையின்றி தூய தமிழில் பேசுகிறார்கள் எனும் போட்டி. வயது வரம்பு: அனைவரும்.
5. திருக்குறள் ஒப்பிப்பு போட்டி - குழந்தைகளிடத்தில் உலகப்பொதுமறையாம் திருக்குறளின் ஆர்வமும் தாக்கமும் ஏற்படுத்த ஒரு போட்டி. வயது வரம்பு: அனைவரும்.
6. சித்திரப் போட்டி - குழந்தைகளுக்கான பத்து நிமிட சித்திரப்போட்டி. குறிப்பு: தூரிகை அல்லது வண்ணப்பேனா (sketch pens) குழந்தைகள் கொண்டு வர வேண்டும். வயது வரம்பு: ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை.
7. கழிவுலிருந்து கலை - குழந்தைகளுக்கான, தேவையற்ற பொருட்களிலிருந்து கலை நயமிக்க பொருட்களை பத்து நிமிடங்களில் எவ்வாறு தயாரிக்கலாம் என சிறிய போட்டி. குறிப்பு: வீட்டிலிருந்து பொருட்களை கொண்டு வர வேண்டும். வயது வரம்பு: ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை.
· நன்றியுரை - வைஷாலி வாசகர் & விமர்சகர் வட்டம் | |||||
களவழி நாற்பது – 19 | |||||
இடைமருப்பின் விட்டெறிந்த வெஃகங்கான் மூழ்கிக் கடைமணி காண்வரத் தோற்றி - நடைமெலிந்து முக்கோட்ட போன்ற களிறெல்லா நீர்நாடன் புக்கம ரட்ட களத்து. விளக்கம் வீரர்கள் எறிந்த வேலானது யானையின் இரு தந்தங்களுக்கு நடுவே பாய்ந்து சென்று கடைப்பகுதி மட்டும் வெளியே தோன்றியது. அக்காட்சி மூன்று தந்தங்களை உடையது போன்று யானைகள் நின்றது போலிருந்தது. பொருள் நீர் நாடன்-நீர் நாட்டையுடைய செங்கட்சோழன், அமர் புக்கு - போரிற் புகுந்து, அட்ட களத்து - (பகைவரைக் கொன்ற போர்க்களத்தில், மருப்பின் இடை - யானைகளின்) கொம்பினடுவே, விட்டு எறிந்த எஃகம் - விட்டெறிந்த வேல், கால் மூழ்கி - காம்பு குளித்தலால், கடைமணி - (அவ்வேலின்) கடைமணி, காண்வர - விளங்க, களிறு, எல்லாம் - யானைகளெல்லாம், தோற்றி - தோன்றி, நடைமெலிந்து - நடை தளர்ந்து, முக்கோட்ட போன்ற - மூன்று கொம்புகளையுடைய யானைகளை யொத்தன. | |||||
தெரியுமா உங்களுக்கு! | |||||
உலகப் பாரம்பரியச் சின்னங்கள் தினம்( World Heritage Day ) · சர்வதேச நினைவுச் சின்னம் பாதுகாப்பு ஆலோசனை சபை சார்பாக 1982ஆம் ஆண்டு ஏப்ரல் 18 அன்று ஒரு கருத்தரங்கம் டுனிசியாவில் நடைபெற்றது. · உலகளவில் நினைவுச் சின்னங்களைக் கொண்டாட வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது. இதனை யுனெஸ்கோ ஏற்றுக்கொண்டது. · முதன்முதலாக 1983ஆம் ஆண்டு ஏப்ரல் 18 அன்று உலகப் பாரம்பரியச் சின்னங்கள் தினம் கடைப்பிடிக்கப்பட்டது.
தோண்டோ கேசவ் கார்வே (ஏப்ரல் 18, 1858 - நவம்பர் 9, 1962) · மகரிசி முனைவர். தோண்டு கேசவ் கார்வே (Maharshi Dr. Dhondu Keshav Karve இந்தியாவில் மகளிர் நலனுக்காக போராடிய சமூக சீர்திருத்தவாதி. · இவரது நினைவாக மும்பையின் குயின்ஸ் சாலை மகரிசி கார்வே சாலை எனப் பெயரிடப்பட்டுள்ளது. · பெண்களுக்கான கல்வி மேம்பாட்டிற்கும் விதவைகள் மறுமணம் புரியும் உரிமைக்கான போராட்டத்திலும் முன்னோடியாக விளங்கினார். · இவரது சேவையை பாராட்டும் விதமாக இந்திய அரசு நாட்டின் மிக உயரிய குடிமை விருதான பாரத ரத்னா விருதை இவரது நூறாவது அகவையில் 1958ஆம் ஆண்டு வழங்கி கௌரவித்தது.மேலும் படிக்க | |||||
ஏப்ரல்- 18 உலக பாரம்பரிய தின கவிதை | |||||
முன்னோரின் வாழ்வியல் மூலத்தை அறிந்திட முத்தான பழமையே முதும்பெரும் தலமாகும்! பின்னாளில் வருவோரும் பெருமையாய் கற்றிட பிழையிலா வாழ்வினை பெறுவதும் நலமாகும்! பன்னிசை பாட்டோடு பாரம்பரிய செல்வமும் பழமையைக் காப்பது பாரினில் வளமாகும்! மின்னிடும் உலகினில் மிஞ்சியே இருப்பதை மீட்டிட செய்வது மரபியல் பலமாகும்!
மடையிலா அழகென மயக்கிடும் தாஜ்மகால் மாற்றாக வேறொன்று மனதாலும் சிறக்குமா! குடைவரை கோவிலும் கோமல்லை சிற்பமும் கொட்டிடும் அழகினை குவலயம் மறக்குமா! விடையிலா வியப்பென வளமிகு தஞ்சையில் வீற்றிடும் கோபுரம் விஞ்ஞான விளக்கமா! படைகொண்ட மூவேந்தன் பளிச்சிடும் சிற்பங்கள் பாரினில் மீண்டுமே படைத்திட முடியுமா!
சொல்பேசா சமணரும் சூழ்ந்திட்ட குகைளும் கல்குவாரி யானதால் கரைந்தே போனது! நல்நினைவு சின்னமென நாடுகள் போற்றிய நிலைமாறி போயிட நலிவென ஆனது! கல்வெட்டு குகைகளும் கட்டிட வகைகளும் கலைநய ஓவியம் காத்திட போராடு! தொல்லிய வரலாறு தொடங்கிய நாட்டினுள் தொலையாத பன்பாடு தொடர்ந்திட பாடுபடு!
-கவிஞர் ப.கண்ணன்சேகர்(செல் -9894976159) திமிரி. | |||||
செய்திகள் | |||||
''மத்திய அரசின் திட்டங்களை தமிழக அரசு தனதாக்கிக் கொள்ள முயல்கிறது'' – தி இந்து குஜராத்தில் பட்டேல் சமூகத்தினரின் போராட்டத்தில் வன்முறை: 144 ... - தினகரன் சொத்து வாங்க, வங்கி கணக்கு தொடங்க அனுமதி பாகிஸ்தானில் ... - தினத் தந்தி விஜய், வோரா, மேக்ஸ்வெல் விளாசல் : கிங்ஸ் லெவனுக்கு முதல் ... – தினகரன் | |||||
Dwarkalaya's Cultural Program - Call for nominations | |||||
Annual Cultural Program has been fixed on Sunday, May 15, 2016 at Delhi Tamil Sangam between 10.00 am - 1.00 pm · Nominations called for from all interested members, junior, senior and very senior, too! · Age no bar. · You can be a part of dance (folk or couple), dance drama, debate (patti mandram), fashionista, fusion in music (vocal or instrumental). . . · No solo programs! For patti mandram (Tamil debate), பட்டிமன்றம் தலைப்பு: தாத்தா, பாட்டி ஆன பிறகு வாழ்க்கை - சுவையா, சுமையா ( 'Thatha Patti Ana Piragu Vazhkai Suvaiya, Sumaya') For details, contact 9810499225 / dwarkalaya.regd@gmail.com | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact | |
24.4.2016 4.00 PM Onwards
| வைஷாலி சிவன் கோவில், செக்டர் 4 வைஷாலி. | கோடை கொண்டாட்டம் | அவ்வை தமிழ் சங்கம் & வைஷாலி வாசகர் மற்றும் விமர்சகர் வட்டம் | Dr. Valavan +919312309186 | |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
|
Sunday, April 17, 2016
18-4-2016 “Naaloru Kalavazhi Narpathu” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment