11-4-2016 "Naaloru Kalavazhi Narpathu" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | |||||
| அவ்வை தமிழ்ச் சங்கம், பங்குனி –29(திங்கள்), திருவள்ளுவராண்டு 2047, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com Blogs: http://naalorukalavalinarpathu.blogspot.in/ Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | ||||
களவழி நாற்பது – 15 | |||||
கொல்யானை பாயக் குடைமுருக்கி யெவ்வாயும் புக்கவா யெல்லாம் பிணம் பிறங்கத்-தச்சன் பினைபடு பள்ளியிற் றோன்றுமே செங்கட் சினமால் பொருத களத்து. விளக்கம் சிவந்த கண்களை உடைய திருமால் போன்று போரிட்ட களத்தில், யானைகள் எல்லா இடங்களிலும் பாய்ந்தமையால் சிதைக்கப்பட்ட வெண்கொற்றக் குடைகளும் பிணங்களும் எங்கும் காணப்பட்டன. அக்காட்சி, தச்சுத் தொழில் வல்லவர், தச்சுத் தொழிலைச் செய்தும் பிறருக்குக் கற்றுக் கொடுத்தும் வருகின்ற தொழிற்பள்ளிக்கூடம் போல் இருந்தது. பொருள் சினம் - கோபத்தையுடை, செங்கண்மால் - செங்கட்சோழன், பொருத களத்து - போர்செய்த களத்தில், எவாய் உம்-எவ்விடத்தும், குடை முருக்கி - குடைகளையழித்து, கொல் யானை - கொல்லும் யானைகள், பாய - பாய்தலால், புக்க வாய் எல்லாம் - அவ் யானைகள் புகுந்த இடமெல்லாம், பிணம் பிறங்க பிணங்கள் விளங்க, தச்சன் - தச்சனால், வினைபடு - வினை செய்யப்படும், பள்ளியில் - இடங்கள்போல, தோன்றும் தோன்றா நிற்கும். | |||||
கோடை கொண்டாட்டம் ! | |||||
அவ்வை தமிழ் சங்கம் & வைஷாலி வாசகர் மற்றும் விமர்சகர் வட்டம் இணைந்து வழங்கும் கோடை கொண்டாட்டம் வைஷாலி & இந்திரபுரம் வாழ் தமிழர்களே! வாருங்கள் இணைவோம்!! கோடையை கொண்டாடுவோம்!!!
நாள் : 24.04. 2016 தினம் : ஞாயிற்றுக்கிழமை நேரம்: மாலை 4 முதல் 7.30 மணி வரை இடம்: வைஷாலி சிவன் கோவில், செக்டர் 4 ( தஸ் மஞ்சில் என அழைக்கப்படும் 10 அடுக்கு மாடி கட்டிடம் வருமான வரி குடியிருப்பு அருகில்), வைஷாலி. மேலும் விவரங்கள் விரைவில்! எங்கள் செய்தி மடலையும் பேஸ்புக் பக்கத்தையும் தொடர்ந்து கவனியுங்கள்! | |||||
தெரியுமா உங்களுக்கு! | |||||
மொனாக்கோ நகரம் · மொனாக்கோ (Monaco) என்பது ஐரோப்பாவில் பிரெஞ்சு ரிவியேராவில் (கோட் டாசூர்) பிரான்ஸ் நாட்டுக்கு தென்கிழக்கில் உள்ள ஒரு தன்னாட்சி கொண்ட நகர-நாடு ஆகும். · வத்திக்கான் நகருக்கு அடுத்ததாக உலகின் மிகச்சிறிய நகர-நாடு இதுவாகும். · மொனாகோ உலகின் அதிக மொத்த உள்நாட்டு உற்பத்தியை (GDP $215,163) கொண்டுள்ளது. · அத்துடன் உலகின் மக்கள் தொகை அடர்த்தி அதிகமாக உள்ள நாடும், தனி நபர் வாழ்வுக் காலம் (90 ஆண்டுகள்) அதிகமான நாடும் இதுவே. · ஒரு பண்டைய தொன்மம் படி, ஹெர்குலஸ் மொனாக்கோ பகுதி வழியாக தாண்டி முந்தைய தேவர்களை திரும்பி பார்க்கச்சென்றார். இதன் விளைவாக, அங்கு ஹெர்குலசுக்காக ஒரு கோவில் கட்டப்பட்டது. அக்கோயில் மொனிக்கொஸ் என அழைக்கப்பட்டது. · இந்த பகுதியில் மட்டுமே ஹெர்குலசுக்காக கோயில் கட்டப்பட்டதால் இக் கோயிலை ஹெர்குலசின் "மாளிகை" என அழைக்கப்பட்டது, இதனால் இந்நகரமும் மொனிக்கொஸ் என அழைக்கப்பட்டது.மேலும் படிக்க | |||||
செய்திகள் | |||||
கேரளக் கோயில் தீ விபத்தில் 106 பேர் பலி:பிரதமர் நேரில் ஆறுதல் - தினமணி திமுக தேர்தல் அறிக்கை: இலவசம் இல்லை..மானியம், சலுகைகள் அதிகம் – தி இந்து 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்: இதுவரை ரூ.52 கோடி பறிமுதல் - தமிழகத்தில் ரூ.21.4 கோடி சிக்கியது– தி இந்து ஜப்பானில் ஜான் கெர்ரி – தினமலர் பாராளுமன்ற கட்டிட வளாகத்தில் தீ விபத்து - தினத் தந்தி ஆன்ட்ரே ரஸல், பிராட் ஹாக் அபாரம்:98 ரன்களில் சுருண்டது டெல்லி - தினமணி | |||||
வீடு வாங்க / விற்க | |||||
For sale 2BHK, Ground Floor with reserved car parking at Sector-49, Hindan Vihar Noida For details please contact : 8826567774 Camera Installed at Parking & all floor with Wifi Service.. | |||||
Dwarkalaya's Cultural Program - Call for nominations | |||||
Annual Cultural Program has been fixed on Sunday, May 15, 2016 at Delhi Tamil Sangam between 10.00 am - 1.00 pm · Nominations called for from all interested members, junior, senior and very senior, too! · Age no bar. · You can be a part of dance (folk or couple), dance drama, debate (patti mandram), fashionista, fusion in music (vocal or instrumental). . . · No solo programs! For patti mandram (Tamil debate), பட்டிமன்றம் தலைப்பு: தாத்தா, பாட்டி ஆன பிறகு வாழ்க்கை - சுவையா, சுமையா ( 'Thatha Patti Ana Piragu Vazhkai Suvaiya, Sumaya') For details, contact 9810499225 / dwarkalaya.regd@gmail.com | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact | |
11.4.2016 | திருவள்ளுவர் கலை அரங்கம், தில்லி தமிழ் சங்கம். | 6.30 PM onwards பாமினி சேகர் நிருத்தியாலயா வழங்கும் இராமாயணம் – நாட்டிய நாடகம் தொடர்ந்து பத்ம விருது பெற்றவர்களுக்கு பாராட்டு விழா சிறப்பு விருந்தினர்கள் பத்மவிபூஷன் குருஜி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பத்மஸ்ரீ எம்.என்.கிருஷ்ணமணி | Delhi Tamil Sangam | ||
15.4.2016 6.00 PM to 16.4.2016
| Sree vinayaka Mandir, AB Block, Sarojini nagar, New Delhi | Akanda Ghana Yagnam 24 hrs nonstop musical offering by all musicians, music students along with music lovers Concluding with the rendering of Pancharatna kritis of sadguru Thyagaraja | Sree Vinayaka Mandir Committee |
| |
8.4.2016 to 17.4.2016
| Shri Karunya Mahaganapathi Temple, Phase III, Mayur Vihar, New Delhi | Ashta Brahmana Sahita Samagra Sama Veda Parayanam 1st Session – 7.30 AM to 11.00AM 2nd Session – 3.00 PM to 6.00 PM 3rd Session – 6.30 PM to 8.00 PM |
|
| |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
|
Sunday, April 10, 2016
11-4-2016 “Naaloru Kalavazhi Narpathu” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment