20-4-2016 "Naaloru Kalavazhi Narpathu" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | |||||
| அவ்வை தமிழ்ச் சங்கம், சித்திரை–7(புதன்), திருவள்ளுவராண்டு 2047, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com Blogs: http://naalorukalavalinarpathu.blogspot.in/ Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | ||||
கோடை கொண்டாட்டம் ! | |||||
அவ்வை தமிழ் சங்கம் & வைஷாலி வாசகர் மற்றும் விமர்சகர் வட்டம் இணைந்து வழங்கும் கோடை கொண்டாட்டம் வைஷாலி & இந்திரபுரம் வாழ் தமிழர்களே! வாருங்கள் இணைவோம்!! கோடையை கொண்டாடுவோம்!!!
நாள் : 24.04. 2016 தினம் : ஞாயிற்றுக்கிழமை நேரம்: மாலை 4 முதல் 8 மணி வரை இடம்: வைஷாலி சிவன் கோவில், செக்டர் 4 ( தஸ் மஞ்சில் என அழைக்கப்படும் 10 அடுக்கு மாடி கட்டிடம் வருமான வரி குடியிருப்பு அருகில்), வைஷாலி.
நிகழ்ச்சி நிரல் · தமிழ்த் தாய் வாழ்த்து · வரவேற்புரை - அவ்வை தமிழ் சங்கம் · நிகழ்சிகள் 1. யார் இவர், ஊமை விளையாட்டு - உங்கள் பொது அறிவுக்கு ஒரு சவால். ஒரு பிரபல மனிதரை கண்டுபிடிக்கும் உற்சாகம் மிக்க குழு விளையாட்டு. வயது வரம்பு: அனைவரும்.
2. இசை உணவு (Food blast) - இசை நாற்காலி போன்று உணவுகளின் பெயர் கொண்டு விளையாடும் விளையாட்டு. வயது வரம்பு: அனைவரும்.
3. அன்னையை அறிவோம் - அன்னையைப்பற்றி குழந்தைகளும் கணவரும் எவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்னும் சுவாரசியம் மிக்க விளையாட்டு.வயது வரம்பு: அனைவரும்.
4. தூய தமிழ் பேச்சு போட்டி.- மூன்று நிமிடங்களில் கொடுக்கப்பட்ட தலைப்பில் எவ்வளவு சரளமாக பிழையின்றி தூய தமிழில் பேசுகிறார்கள் எனும் போட்டி. வயது வரம்பு: அனைவரும்.
5. திருக்குறள் ஒப்பிப்பு போட்டி - குழந்தைகளிடத்தில் உலகப்பொதுமறையாம் திருக்குறளின் ஆர்வமும் தாக்கமும் ஏற்படுத்த ஒரு போட்டி. வயது வரம்பு: அனைவரும்.
6. சித்திரப் போட்டி - குழந்தைகளுக்கான பத்து நிமிட சித்திரப்போட்டி. குறிப்பு: தூரிகை அல்லது வண்ணப்பேனா (sketch pens) குழந்தைகள் கொண்டு வர வேண்டும். வயது வரம்பு: ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை.
7. கழிவுலிருந்து கலை - குழந்தைகளுக்கான, தேவையற்ற பொருட்களிலிருந்து கலை நயமிக்க பொருட்களை பத்து நிமிடங்களில் எவ்வாறு தயாரிக்கலாம் என சிறிய போட்டி. குறிப்பு: வீட்டிலிருந்து பொருட்களை கொண்டு வர வேண்டும். வயது வரம்பு: ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை.
· நன்றியுரை - வைஷாலி வாசகர் & விமர்சகர் வட்டம் | |||||
களவழி நாற்பது – 21 | |||||
இணைவே லெழின்மருமத் திங்கப்புண் கூர்ந்து கணையலைக் கொல்கிய யானை - துணையிலவாய்த் தொல்வலி யாற்றித் துளங்கினவாய் மெல்ல நிலங்கால் கவரு மலைபோன்ற செங்கட் சினமால் பொருத களத்து. விளக்கம் சோழன் சிவந்த கண்களை உடைய திருமால் போன்று போரிட்ட களத்தில், யானைகளின் கழுத்துக்குக் கீழ் மார்புப் பகுதிகளில் ஒரே அளவான வேல்கள் பாய்ந்து புண்களை உண்டாக்கின. அதற்கு முன் தைத்த அம்புகள் வலியை ஏற்படுத்தின. இந்த நிலையில் பாகர்கள் துணையில்லாமல் வலியைப் பொறுத்துக்கொண்டு உடல் நடுங்கச் சோர்வோடு நின்ற யானைகள் நிலையாக நிலங்களில் இடம்பெற்ற மலைகள் போன்று இருந்தன. பொருள் பொருத களத்து - போரிட்ட களத்தில். சினம்- கோபத்தையுடை, செங்கண்மால் செங்கட்சோழன், பொருத களத்து - போர் செய்த களத்தில், இணைவேல் - இணைத்த வேல்கள், எழில் மருமத்து - அழகிய மார்வில், இங்க - அழுந்துதலால், புண்கூர்ந்து - புண்மிகுத்து, கணை அலைக்கு - அம்பின் அலைப்புகளால், ஒல்கிய யானை தளர்ந்த யானைகள், துணை இலவாய் - (தம்மேற்கொண்ட) துணைவரையிலவாய், தொல் வலி - பண்டை வலியினின்று, ஆற்றி - நீங்கி, துளங்கின ஆய் - நடுங்கி, மெல்ல - மெல்ல, நிலம் - நிலத்தை, கால் கவரும் - காலாலே அகப்படுக்கும், மலைபோன்ற - மலையை யொத்தன. | |||||
தெரியுமா உங்களுக்கு ! | |||||
அடால்ஃப் ஹிட்லர் (Adolf Hitler, ஏப்ரல் 20, 1889- ஏப்ரல் 30 ,1945) · ஜெர்மனி நாட்டின் ஃபியூரர் என அழைக்கப்பட்டார். · இட்லர் தன் படிப்பில் ஏற்பட்ட மந்த நிலையை தன் தந்தையின் கொடுமைக்கு கொடுத்த பரிசாகவும் தன் தந்தை தான் அவரைபோன்று சுங்க அதிகாரி பணியில் அமரவேண்டும் என்ற கனவை பொய்யாக்கிய திருப்தி கிடைத்ததாக தன் சுயசரிதையில் இட்லர் விளக்கியுள்ளார். இதனால் அவர் ஓவியராகும் கனவை மெய்ப்பித்தாகவும் குறிப்பிட்டுள்ளார். · அடால்ப் என்ற பெயர் பழங்காலத்து ஜெர்மானியரிடமிருந்து வந்தது. அடால்ப் என்பது உயர் குணமுள்ள (Nobility) + ஒநாய் (wolf) என்பதைக் குறிக்கும் சொல். இதையறிந்த இட்லர் தனக்குத்தானே ஒநாய் என்ற பெயரை தனக்கு புனைப்பெயராக வைத்துக்கொண்டார்.மேலும் படிக்க நாரா சந்திரபாபு நாயுடு (ஏப்ரல் 20, 1950) · ஒரு இந்திய அரசியல்வாதி. 1995 முதல் 2004 வரை ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராக பொறுப்பு வகித்தார். · இவரே கூடுதலான நாட்கள் பதவியில் இருந்த ஆந்திர முதலமைச்சர் ஆவார் · இந்தியா டுடே,தி எகனாமிக் டைம்ஸ்,டைம் (இதழ்) போன்ற இதழ்களின் ஆண்டுச் சிறப்பு விருதுகளையும் உலக பொருளாதார மன்றத்தின் கனவு அமைச்சரவையின் அங்கத்துவத்தையும் வென்றுள்ளார்.மேலும் படிக்க | |||||
செய்திகள் | |||||
பிஎஃப் புதிய விதிகள் ரத்து: எதிர்ப்புக்குப் பணிந்தது மத்திய அரசு - தினமணி தமிழக அரசியல் கலாச்சாரம் மாறும்: பாலபாரதி சிறப்புப் பேட்டி – தி இந்து ஆப்கன் தலைநகர் காபுலில் தற்கொலை படை தாக்குதலில் 30 பேர் பலி ... – தினகரன் 'வறட்சி குறித்து மாநிலங்களை எச்சரிப்பது அரசின் கடமை' - தினமலர் 21-ஆம் நூற்றாண்டை ஆளப் போகிறது இந்தியா: பிரதமர் மோடி ... - தினமணி உலகின் சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனையாக தேர்வு ...- தினத் தந்தி ஒலிம்பிக் பதக்கமே இலக்கு... தீபா கம்ராகர் உற்சாகம் - தினகரன் ஒலிம்பிக் தகுதிப் போட்டியில் இந்திய பளுதூக்கும் வீரர்கள் - தினமணி | |||||
Dwarkalaya's Cultural Program - Call for nominations | |||||
Annual Cultural Program has been fixed on Sunday, May 15, 2016 at Delhi Tamil Sangam between 10.00 am - 1.00 pm · Nominations called for from all interested members, junior, senior and very senior, too! · Age no bar. · You can be a part of dance (folk or couple), dance drama, debate (patti mandram), fashionista, fusion in music (vocal or instrumental). . . · No solo programs! For patti mandram (Tamil debate), பட்டிமன்றம் தலைப்பு: தாத்தா, பாட்டி ஆன பிறகு வாழ்க்கை - சுவையா, சுமையா ( 'Thatha Patti Ana Piragu Vazhkai Suvaiya, Sumaya') For details, contact 9810499225 / dwarkalaya.regd@gmail.com | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact | |
24.4.2016 4.00 PM Onwards
| வைஷாலி சிவன் கோவில், செக்டர் 4 வைஷாலி. | கோடை கொண்டாட்டம் | அவ்வை தமிழ் சங்கம் & வைஷாலி வாசகர் மற்றும் விமர்சகர் வட்டம் | Dr. Valavan +919312309186 | |
22.4.2016 7.30 AM Onwards
| Apeejay School Auditorium, Film City, Sector 16A,Noida | Mastakabhishekam to LordHanuman ji 7:00 am - Pujya Guruji Swami Tejomayanandaji arrives in the Ashram. 7:30 am - Pujya Guruji will perform Abhishekam to the Lord Hanumanji with Panchamritam
| Chinmaya Mission Noida | ||
23.4.2016 6.30 AM Onwards
| Valluvar Kalai Arangam Auditorium Delhi Tamil Sanagam, Sector 5, RK Puram, ND | Bharatanatyam Recital by Dr. S. Vasudevan and disciples Varsha & Akshaya
| Delhi Tamil Sanagam |
| |
30/04/2016 6.00 PM Onwards
| Vasuki Auditorium, Lok Kala Manch No. 20 Institutional Area, Lodhi Road New Delhi | Chittirai Vizha 6.00 to 7.45 · Dr. Sajani Srihari - Carnatic Vocal (Asst. Prof dept. of music, Avinasilingam University) · Mr. G. Raghavendra Prasaath- Violin · Guru Jayan P. Das - Mridangam 7.50 to 8.40 Award ceremony | Sri Hayagriva & Lok Kala Manch
| 9811413225 011-24644421 | |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
|
Tuesday, April 19, 2016
20-4-2016 “Naaloru Kalavazhi Narpathu” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment