Sunday, April 24, 2016

25-4-2016 “Naaloru Kalavazhi Narpathu” from Avvai Tamil Sangam

25-4-2016 "Naaloru Kalavazhi Narpathu" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

 

 

அவ்வை தமிழ்ச் சங்கம்,

சித்திரை–12(திங்கள்), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Blogs: http://naalorukalavalinarpathu.blogspot.in/

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

களவழி நாற்பது – 24

திண்டோண் மறவ ரெறியத் திசைதோறும்

பைந்தலை பாரிற் புரள்பவை - நன்கெனைத்தும்

பெண்ணையந் தோட்டம் பெருவளி புக்கற்றே

கண்ணார் கமழ்தெரியற் காவிரி நீர்நாடன்

நண்ணாரை யட்ட களத்து.

விளக்கம்

சோழன் தன்னோடு சேராத பகைவர்களை வென்ற களத்தில், வீரர்கள் எல்லாத் திசைகளிலும் வாளை வீசியதால் வெட்டுப்பட்ட புதிய தலைகள் போர்க்களத்தில் நிறைந்து கிடந்தன. அக்காட்சி, புயல் வீச்சால் தாக்கப்பட்டுக் கரிய காய்கள் எல்லாம் சிதறி விழுந்த பனந்தோப்பாகத் தெரிந்தது.

பொருள்

மறவர் – வீரர், நண்ணாரை – பகைவரை.

கண் ஆர் - கண்ணுக்கு நிறைந்த (காட்சியையுடைய), கமழ் தெரியல்-மணக்கின்ற மாலையை (அணிந்த), காவிரி நீர் நாடன் - காவிரி நீர் நாட்டையுடைய செங்கட்சோழன், நண்ணாரை -பகைவரை அட்டகளத்து - கொன்ற போர்க்களத்தில், திண்தோள் - வலிய தோளையுடைய, மறவர் வீரர்கள், எறிய - (வாளால்) எறிதலால், திசை தோறும் - திசைகள் தோறும், பார் இல் - பூமியில், பைந்தலை - கரிய தலைகள், புரள்பவை-புரளுவன, நன்கு எனைத்து உம் - மிகவும், பெண்ணை தோட்டம் - பனங்காட்டில், பெருவளி பெருங்காற்று, புக்கது அற்று- புக்க செயலை யொத்தன.

தெரியுமா உங்களுக்கு !   

உலக மலேரியா தினம் (World Malaria Day)

·         ஆண்டுதோறும் மலேரியா நோயினால் சுமார் 7 லட்சம் பேர் இறக்கின்றனர்.

·         ஒவ்வொரு ஆண்டும் 219 மில்லியன் மக்கள் மலேரியாவால் பாதிக்கின்றனர். ஆகவே இதனை கண்டறிந்து கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வை உலகம் முழுவதும் ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் உலக சுகாதார அமைப்பு 2007இல், மலேரியா தினமாக ஏப்ரல் 25ஐ அறிவித்துக் கொண்டாடி வருகிறது.மேலும் படிக்க

டாக்டர் வ. சுப. மாணிக்கம் (ஏப்ரல் 17.1917 - ஏப்ரல் 25.1989)

·         வ.சுப. மா தன் வாழ்நாள் முழுவதும் தமிழுக்காகவே வாழ்ந்து, தமிழ் வளர்ச்சியைப் பற்றியே சிந்தித்து பல நிலையினும் சிறந்தோங்கித் தமிழ்ப் பணிக்காகவே வாழ்ந்த மூதறிஞர்.

·         தமிழின் சிறப்புக்களைப் பற்றி ஆய்வுகள் பல செய்தமையால் தமிழ் இமயம் என்று தமிழ் அறிஞர்களால் போற்றப்பட்ட வ.சுப.மா. பன்முக ஆற்றல் உடையவர்.

·         வ.சுப.மாணிக்கம் அவர்கள் ஒரு சிந்தனையாளர். பழைமையையும் புதுமையையும் ஒருமித்த மனதோடு ஏற்றுப் போற்றினார்.

·         தமிழ்ச் சொல்லாக்கங்களை நடைமுறைப் படுத்துவதில் மிகவும் முனைப்புக் காட்டியவர். தமிழ் வழிக் கல்வி இயக்கம் என்ற அமைப்பை நிறுவி இவ்வியக்கம் நன்கு பரவும் வழி காண தமிழ்ச் சுற்றுலா மேற்கொண்டார்.மேலும் படிக்க

புதுமைப்பித்தன் என்ற புனைப்பெயர் கொண்ட சொ. விருத்தாசலம் (ஏப்ரல் 25, 1906 - ஜூன் 30, 1948)

·         மிகச்சிறந்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர். நவீன தமிழ் இலக்கியத்தின் ஒரு முன்னோடியாக இவர் கருதப்படுகிறார். கூரிய சமூக விமர்சனமும் நையாண்டியும், முற்போக்குச் சிந்தனையும், இலக்கியச் சுவையும் கொண்ட இவருடைய படைப்புகள், இவரின் தனித்தன்மையினை நிறுவுகின்றன.

·         இவரது படைப்புகள் தமிழ் இலக்கியத்தில் மிகவும் அதிகமாக விவாதிக்கப்பட்டுள்ளன.

·         புதுமைப்பித்தனின் சிறுகதைகள் தான் அவருக்கு எழுத்துலகில் தனி இடத்தை அளித்தன. அவர் எழுதியதாகக் கணிக்கப்படும் 108 சிறுகதைகளில் 48 மட்டுமே அவர் காலத்திலேயே வெளியாகின. மேலும் படிக்க

செய்திகள்   

நீதித்துறையைக் காப்பாற்றுங்கள்: பிரதமரிடம் தலைமை நீதிபதி கண்ணீர் மல்க வேண்டுகோள் தி இந்து

என்.எல்.சி., தொழிற்சங்கத்தினர் மோதல் போலீஸ் தடியடியால் பதட்டம் - தினமலர்

மல்லையா பாஸ்போர்ட் முடக்கம்; இந்தியா அழைத்து வர தீவிரம்தி இந்து

தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்:பிரதமர் மோடி  - தினமணி

ஒரு அபூர்வ நிகழ்வு: அமெரிக்க தெருவுக்கு இந்தியர் பெயர்- தினத் தந்தி

இந்திய மல்யுத்த வீரர் சந்தீப் தோமர் ஒலிம்பிக்கிற்கு தகுதி -  தினமணி

விராட் கோலியின் சதம் வீண்:மோசமான பந்துவீச்சால் தோற்றது பெங்களூர் -  தினமணி

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

30/04/2016

6.00 PM Onwards

 

Vasuki Auditorium, Lok Kala Manch

No. 20 Institutional Area, Lodhi Road New Delhi

Chittirai Vizha

6.00 to 7.45

·         Dr. Sajani Srihari - Carnatic Vocal (Asst. Prof dept. of music, Avinasilingam University)

·         Mr. G. Raghavendra Prasaath- Violin

·         Guru Jayan P. Das - Mridangam

7.50 to 8.40 Award ceremony

Sri Hayagriva &

Lok Kala Manch

 

9811413225

011-24644421

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

No comments:

Post a Comment