22-4-2016 "Naaloru Kalavazhi Narpathu" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | |||||
| அவ்வை தமிழ்ச் சங்கம், சித்திரை–9(வெள்ளி), திருவள்ளுவராண்டு 2047, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com Blogs: http://naalorukalavalinarpathu.blogspot.in/ Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | ||||
கோடை கொண்டாட்டம் ! | |||||
அவ்வை தமிழ் சங்கம் & வைஷாலி வாசகர் மற்றும் விமர்சகர் வட்டம் இணைந்து வழங்கும் கோடை கொண்டாட்டம் வைஷாலி & இந்திரபுரம் வாழ் தமிழர்களே! வாருங்கள் இணைவோம்!! கோடையை கொண்டாடுவோம்!!!
நாள் : 24.04. 2016 தினம் : ஞாயிற்றுக்கிழமை நேரம்: மாலை 4 முதல் 8 மணி வரை இடம்: வைஷாலி சிவன் கோவில், செக்டர் 4 ( தஸ் மஞ்சில் என அழைக்கப்படும் 10 அடுக்கு மாடி கட்டிடம் வருமான வரி குடியிருப்பு அருகில்), வைஷாலி.
நிகழ்ச்சி நிரல் · தமிழ்த் தாய் வாழ்த்து · வரவேற்புரை - அவ்வை தமிழ் சங்கம் · நிகழ்சிகள் 1. யார் இவர், ஊமை விளையாட்டு - உங்கள் பொது அறிவுக்கு ஒரு சவால். ஒரு பிரபல மனிதரை கண்டுபிடிக்கும் உற்சாகம் மிக்க குழு விளையாட்டு. வயது வரம்பு: அனைவரும்.
2. இசை உணவு (Food blast) - இசை நாற்காலி போன்று உணவுகளின் பெயர் கொண்டு விளையாடும் விளையாட்டு. வயது வரம்பு: அனைவரும்.
3. அன்னையை அறிவோம் - அன்னையைப்பற்றி குழந்தைகளும் கணவரும் எவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்னும் சுவாரசியம் மிக்க விளையாட்டு.வயது வரம்பு: அனைவரும்.
4. தூய தமிழ் பேச்சு போட்டி.- மூன்று நிமிடங்களில் கொடுக்கப்பட்ட தலைப்பில் எவ்வளவு சரளமாக பிழையின்றி தூய தமிழில் பேசுகிறார்கள் எனும் போட்டி. வயது வரம்பு: அனைவரும்.
5. திருக்குறள் ஒப்பிப்பு போட்டி - குழந்தைகளிடத்தில் உலகப்பொதுமறையாம் திருக்குறளின் ஆர்வமும் தாக்கமும் ஏற்படுத்த ஒரு போட்டி. வயது வரம்பு: அனைவரும்.
6. சித்திரப் போட்டி - குழந்தைகளுக்கான பத்து நிமிட சித்திரப்போட்டி. குறிப்பு: தூரிகை அல்லது வண்ணப்பேனா (sketch pens) குழந்தைகள் கொண்டு வர வேண்டும். வயது வரம்பு: ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை.
7. கழிவுலிருந்து கலை - குழந்தைகளுக்கான, தேவையற்ற பொருட்களிலிருந்து கலை நயமிக்க பொருட்களை பத்து நிமிடங்களில் எவ்வாறு தயாரிக்கலாம் என சிறிய போட்டி. குறிப்பு: வீட்டிலிருந்து பொருட்களை கொண்டு வர வேண்டும். வயது வரம்பு: ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை.
· நன்றியுரை - வைஷாலி வாசகர் & விமர்சகர் வட்டம் | |||||
களவழி நாற்பது – 23 | |||||
எற்றி வயவ ரெறிய நுதல்பிளந்து நெய்த்தோர்ப் புனலு ணிவந்தகளிற் றுடம்பு செக்கர்கொள் வானிற் கருங்கொண்மூப் போன்றவே கொற்றவேற் றானைக் கொடித்திண்டேர்ச் செம்பியன் செற்றாரை யட்ட களத்து. விளக்கம் வீரம் பொருந்திய செம்பியன் (சோழன்) தன்னோடு பொருந்தாதவர்களை வென்ற போர்க்களத்தில், வீரர்களின் போர்க்கருவிகள் வீசப்பெற்று, அதனால் பிளவுபட்ட நெற்றியிலிருந்து ஒழுகிய இரத்த நீரில் குளித்தெழுந்த யானைகளின் உடம்புகள், மாலை நேரச் சிவந்த வானில் திட்டுத் திட்டாகப் படர்ந்த மேகம் போல் இருந்தன. பொருள் நுதல் – நெற்றி, செம்பியன் – சோழன். கொற்றம் - வெற்றியையுடை, வேல் - வேலையேந்திய, தானை-சேனையையும், கொடி திண் தேர் - கொடி கட்டிய வலிய தேரையுமுடைய, செம்பியன் செங்கட்சோழன், செற்றாரை - பகைவரை, அட்ட களத்து கொன்ற போர்க்களத்தில், வயவர் எற்றி எறிய- வீரர்கள் (படைக்கலங்களை) எடுத்து எறிய, நுதல் பிளந்து - நெற்றி பிளத்தலால், நெய்த்தோர் புனல் உள் - உதிர நீருள், நிவந்த மூழ்கியெழுந்த, களிறு உடம்பு - யானைகளின் உடம்புகள், செக்கர் கொள் வான்இல் - செக்கர் வானத்தில், கரும் கொண்மூ - கரியமேகத்தை, போன்ற - ஒத்தன. | |||||
தெரியுமா உங்களுக்கு ! | |||||
புவி நாள் (Earth Day) · புவி நாள் (Earth Day) என்பது ஆண்டுதோறும் ஏப்ரல் 22ம் நாளன்று புவியின் சுற்றுச் சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அச்சூழல் மாசடைவதைத் தடுக்கும் நோக்கோடு அனைத்து நாடுகளிலும் 1970ஆம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்பட்டுவரும் ஒரு சிறப்பு நாளாகும். · ஐக்கிய அமெரிக்காவில் சுற்றுச்சூழலியல் நிபுணரும் மேலவை உறுப்பினருமான கேலார்ட் நெல்சன் என்பவர் சுற்றுச்சூழல் பற்றிய அறிவைப் பரப்பத் தகுந்த நாளாக 1970 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 நடத்த அழைப்பு விடுத்தார். இந்த நாளின்போது புவியின் வடகோளப் பகுதி வசந்த காலமாகவும், தென்கோளப் பகுதி இலையுதிர் காலமாகவும் காணப்படுகிறது. · அவரது அழைப்பை ஏற்று 20 மில்லியன் மக்கள் இந்நிகழ்வில் பங்கெடுத்தார்கள். அன்றிலிருந்து ஆண்டுதோறும் இந்நாள் 175 நாடுகளில் புவி [பூமி] நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.மேலும் படிக்க | |||||
சர்வதேச பூமி தினக் கவிதை | |||||
சுற்றும் பூமி சுகந்தானா சற்றே சிந்தி மானிடரே! சூழல் நலமே மாசானால் சுகத்தில் வருமே பேரிடரே!
பூமியின் வெப்பம் தாங்காது பூக்காடு எல்லாம் சாக்காடு! சாமியும் வந்தால் தீராது சரியான தீர்வை நீதேடு!
மரத்தை வெட்டி தீர்த்திடவே மழைதான் இனியும் வந்திடுமோ! வரத்தைக் கேட்டு அழுதாலும் வனத்தில் பசுமை தந்திடுமோ!
நீரின் நிலைகள் பூமிக்கு நாளும் செழிக்கும் ரத்தநாளம்! ஊரின் வளர்ச்சி பெருக்கத்தால் ஓடிய நதியோ அலங்கோலம்!
விளையும் நிலமும் ரணமாகி வறட்சி கண்டு வெடிக்கிறது! உலையின் கொதிப்பு போலாகி உலவும் காற்று கொதிக்கிறது!
பஞ்ச பூதம் இயங்குவதும் பரந்த பூமி அடித்தளமே! கொஞ்சம் யோசி மனதினிலே குவலயம் நன்மை கண்டிடுமே!
இயற்கை இணைந்த வாழ்வாலே என்றும் நலமே சேர்த்திடலாம்! உயர்ந்த சூழலைக் கொண்டாலே உலகில் புவியைக் காத்திடலாம்!. -ப.கண்ணன்சேகர், 9894976159, திமிரி. | |||||
செய்திகள் | |||||
உத்தரகண்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி ரத்து: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு - தினமணி மல்லையாவை இந்தியாவிற்கு கொண்டு வர அமலாக்கத்துறை தீவிர முயற்சி – தி இந்து ஊடக சுதந்திரமிக்க நாடுகள் பட்டியல் : முதலிடத்தில் பின்லாந்து, 133 ...- தினகரன் வளைகுடா நாடுகளின் தலைவர்களுடன் ஒபாமா சந்திப்பு: ஐஎஸ்ஸுக்கு எதிரான போருக்கு உதவ கோரிக்கை – தி இந்து ஒலிம்பியாவில் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது - தினத் தந்தி விக்கெட் இழப்பின்றி குஜராத்தை வீழ்த்தியது ஹைதராபாத் - தினமணி | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact | |
24.4.2016 4.00 PM Onwards
| வைஷாலி சிவன் கோவில், செக்டர் 4 வைஷாலி. | கோடை கொண்டாட்டம் | அவ்வை தமிழ் சங்கம் & வைஷாலி வாசகர் மற்றும் விமர்சகர் வட்டம் | Dr. Valavan +919312309186 | |
22.4.2016 7.30 AM Onwards
| Apeejay School Auditorium, Film City, Sector 16A,Noida | Mastakabhishekam to LordHanuman ji 7:00 am - Pujya Guruji Swami Tejomayanandaji arrives in the Ashram. 7:30 am - Pujya Guruji will perform Abhishekam to the Lord Hanumanji with Panchamritam
| Chinmaya Mission Noida | ||
23.4.2016 6.30 AM Onwards
| Valluvar Kalai Arangam Auditorium Delhi Tamil Sanagam, Sector 5, RK Puram, ND | Bharatanatyam Recital by Dr. S. Vasudevan and disciples Varsha & Akshaya
| Delhi Tamil Sanagam |
| |
30/04/2016 6.00 PM Onwards
| Vasuki Auditorium, Lok Kala Manch No. 20 Institutional Area, Lodhi Road New Delhi | Chittirai Vizha 6.00 to 7.45 · Dr. Sajani Srihari - Carnatic Vocal (Asst. Prof dept. of music, Avinasilingam University) · Mr. G. Raghavendra Prasaath- Violin · Guru Jayan P. Das - Mridangam 7.50 to 8.40 Award ceremony | Sri Hayagriva & Lok Kala Manch
| 9811413225 011-24644421 | |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
|
Thursday, April 21, 2016
22-4-2016 “Naaloru Kalavazhi Narpathu” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment