07-4-2016 "Naaloru Kalavazhi Narpathu" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | |||||
| அவ்வை தமிழ்ச் சங்கம், பங்குனி –25(வியாழன்), திருவள்ளுவராண்டு 2047, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com Blogs: http://naalorukalavalinarpathu.blogspot.in/ Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | ||||
களவழி நாற்பது – 13 | |||||
நிரைகதிர் நீளெஃக நீட்டி வயவர் வரைபுரை யானைக்கை நூற - வரைமேல் உருமெறி பாம்பிற் புறளுஞ் செருமொய்ம்பிற் சேஎய்பொரு தட்ட களத்து. விளக்கம் முருகனைப் போன்று சோழன் போரிட்ட களத்தில், போர்வீரர்களால் வெட்டப்பட்டு யானைகளின் துதிக்கைகள் கீழே விழுந்து அசைந்தன. அக்காட்சி இடி ஒலியோடு மலைமீது பேரிடி விழுந்தமையால் அதிர்ச்சியடைந்த பாம்புகள் கீழே விழுந்து புரள்வது போல் இருந்தது. பொருள் செரு மொய்ம்புஇன் - போர் வலியையுடைய, சேஎய் செங்கட்சோழன், பொருது அட்ட - போர்செய்து கொன்ற, களத்து - போர்க்களத்தில், நிரை கதிர் - நிரைத்த வொளியினையுடைய, நீள் எஃகம் - நீண்ட வாளை, நீட்டி-பின்னே வாங்கி, வயவர்-வீரர்கள், வரைபுரை-மலையையொத்த, யானைகை-யானைகளின் கைகளை, நூற-துணிக்க, வரைமேல்-மலையின்மேல், உரும் எறி-இடிவிழுந்த, பாம்புஇன்-பாம்பைப் போல, புரளும்-புரளாநிற்கும். | |||||
தெரியுமா உங்களுக்கு! | |||||
உலக சுகாதார தினம் (World Health Day) · மக்கள் அனைவருக்கும் ஆரோக்கியமான சுகாதாரம் வழங்க வேண்டும் என்பது உலக சுகாதார அமைப்பின் முக்கிய குறிக்கோளாகும். உலக சுகாதார அமைப்பானது ஐக்கிய நாடுகள் சபையின் ஓர் சார்பு நிறுவனம். இது 1948ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டது. · ஆகவேதான் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7 அன்று உலக சுகாதார தினம் கொண்டாடப்படுகிறது.மேலும் படிக்க ருவாண்டா இனப்படுகொலை நினைவு தினம் (Day of Remembrance of the Rwanda Genocide ) · ருவாண்டாவில் 1994ஆம் ஆண்டு ஏப்ரல் 7 அன்று இனப்படுகொலை தொடங்கியது. · இது 100 நாட்களுக்கு மேல் நடந்தது. இதில் 20 சதவீதமான மக்கள் இறந்தனர். அதாவது 80000 அப்பாவி மக்கள் மிகக் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இனப்படுகொலையில் உயிர் இழந்தவர்களுக்காகவும், இது போன்ற நிகழ்வுகள் மீண்டும் ஏற்படாமல் இருக்க நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. | |||||
உலக சுகாதார தின கவிதை! | |||||
தனிமனித சுத்தமதை தவறாமல் செய்திடு மணியான தூய்மையால் மண்ணுலகை மாற்றிடு
வீட்டினது சுத்தமென வீதியை கூட்டிடு நாட்டையே நலமாக்க நல்லதை விதைத்திடு
சுத்தமிலா இடந்தோறும் சுகாதாரம் பெருக்கிடு பத்தில்லா சூழலாக்க பார்முழுதும் பாடுபடு
வீட்டுகொரு கழிப்பறை வேண்டுமென கட்டிடு காட்டின்மர வளங்களை கண்டிப்பாய் காத்திடு
பசுமையின் போர்வையால் பாரினை மூடிடு விசும்பின்நீர் துளியாலே வேளாண்மை செய்திடு
நெரிசலே இல்லாத நகரத்தை நிறுவிடு வரிசையில் காத்திருப்பு வழக்கத்தை மாற்றிடு
நல்லதொரு குடிநீரை நலிந்தோர்க்கும் கொடுத்திடு இல்லாமை இல்லாமல் ஏழ்மையை ஒழித்திடு
சுற்றுப்புற தூய்மையை சுகமாக்கி வைத்திடு பெற்றிடும் விழிப்பாலே பிணிகளை தடுத்திடு
மருத்துவ முழுமையால் மக்களை காத்திடு ஒருவனுக்கு ஒருத்தியென உறவாலே வாழ்ந்திடு
ஊட்டங்கள் நிறைவான உணவையே உண்டிடு வாட்டத்தை விலக்கிட விளையாட்டைக் கொண்டிடு
பன்பாடு மாறாத பாதையில் சென்றிடு முன்னோர்கள் காட்டிய முறைமையை காத்திடு
இயற்கை உறவோடு இசைவாக வாழ்ந்திடு உயரும் சுகத்தாலே உலகையே மாற்றிடு
-கவிஞர் ப.கண்ணன்சேகர், திமிரி செல் :9894976159. | |||||
செய்திகள் | |||||
மும்பை 2002 - 2003 குண்டுவெடிப்பு வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை – தி இந்து தேர்தல் ஏற்பாடுகள்: தலைமைத் தேர்தல் ஆணையர் இன்று ஆலோசனை - தினமணி பிளஸ்-2 கணித தேர்வில் தவறான வினாவுக்கு 6 கருணை மதிப்பெண் - தி இந்து சிறு தொழில்களின் கழுத்தை நெரிக்கிறது – தினமலர் இலங்கை சிறைகளில் இருந்து 99 மீனவர்கள் விடுதலை - தி இந்து மலேசிய ஓபன்: 2-ஆவது சுற்றில் சாய்னா, சிந்து .- தினமணி கிரிக்கெட் மைதானத்துக்கு டேரன் சமி பெயர் - தி இந்து | |||||
வீடு வாடகைக்கு | |||||
2BHK House available on Rent Veg Family Preferred, Sector 17 (Konark Enclave), Vasundhara Near Saibaba Temple Vasundhara., For details contact Mr.Ramesh Mobile: 9810813014 1BHK in 1st floor, sector 14 Dwarka available for rent. (Semi Furnished). Expected Rent is Rs 9,500 p.m . Very good water supply. Car Parking space. House is available from 1st April 2016. South Indian (Vegetarian) preferred. For further details contact: K.P. Sai, Mobile - 08056039285 | |||||
Dwarkalaya's Cultural Program - Call for nominations | |||||
Annual Cultural Program has been fixed on Sunday, May 15, 2016 at Delhi Tamil Sangam between 10.00 am - 1.00 pm · Nominations called for from all interested members, junior, senior and very senior, too! · Age no bar. · You can be a part of dance (folk or couple), dance drama, debate (patti mandram), fashionista, fusion in music (vocal or instrumental). . . · No solo programs! For patti mandram (Tamil debate), பட்டிமன்றம் தலைப்பு: தாத்தா, பாட்டி ஆன பிறகு வாழ்க்கை - சுவையா, சுமையா ( 'Thatha Patti Ana Piragu Vazhkai Suvaiya, Sumaya') For details, contact 9810499225 / dwarkalaya.regd@gmail.com | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact | |
9.4.2016 & 10.4.2016 | திருவள்ளுவர் கலை அரங்கம், தில்லி தமிழ் சங்கம். | மகளிர் தின போட்டிகள் - 2016 இசை, பேச்சு, கோலம், கவிதை, சமையல் மற்றும் விளையாட்டு போட்டிகள் | Delhi Tamil Sangam | ||
9.4.2016 3.00 pm Onwards | திருவள்ளுவர் கலை அரங்கம், தில்லி தமிழ் சங்கம். | ஏப்ரல் மாத இலக்கியச் சந்திப்பு பேச்சாளர்கள் தமிழ் நாடக அரங்குகள், 20.நி. முனைவர் அ. மங்கை (பத்மா வெங்கடராமன்), இணைப்பேராசிரியர், ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி, சென்னை, வருகைதரு பேராசிரியர், சட்டம் மற்றும் ஆளுகை மையம், ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம், புது தில்லி. நாடகப் போக்குகள் – கருத்தியல் நோக்கு, 20.நி. திருமிகு க. சுரேஷ் முனைவர்பட்ட ஆய்வாளர், நவீன இந்திய மொழிகள் மையம், தில்லிப் பல்கலைக்கழகம், தில்லி கலந்துரையாடல் - 30 நி | தில்லிகை தில்லி இலக்கியவட்டம் மற்றும் தில்லித் தமிழ்ச்சங்கம்
|
| |
15.4.2016 6.00 PM to 16.4.2016
| Sree vinayaka MAndir, AB Block, Sarojini nagar, New Delhi | Akanda Ghana Yagnam 24 hrs nonstop musical offering by all musicians, music students along with music lovers Concluding with the rendering of Pancharatna kritis of sadguru Thyagaraja | Sree Vinayaka Mandir Committee |
| |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
|
Wednesday, April 6, 2016
07-4-2016 “Naaloru Kalavazhi Narpathu” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment