--
31-5-2017 "News Letter" from Avvai Tamil Sangam
Is this mail not displaying correctly? View it in your browser
அவ்வைதமிழ்ச்சங்கம்,
வைகாசி 17, (புதன்), திருவள்ளுவராண்டு 2047,
Web: http://www.avvaitamilsangam.
org Email: avvaitamilsangam@gmail.com
Be a member of ATS| Friend on Facebook | Forward to a Friend
நூல் அறிமுகம் - "சீதை பேசுகிறேன்"
வெங்கட் கிருஷ்ணமாச்சாரி எழுதிய "சீதை பேசுகிறேன்" எனும் நூல் இப்போது விற்பனையில்.
நூல் பற்றி முன்னால் பேராசிரியர் H. பாலசுப்ரமணியம் அவர்கள் தனது அணிந்துரையில் கூறியது...
".....சிறையிலிருந்த செல்வி சீதையின் சொல்லாடலை, ஓராண்டுக் காலமாக அவள் பட்ட அவதிகளையும் துயரங்களையும் சீதாப் பிராட்டியின் வார்த்தைகளிலேயே பதிவு செய்த பெருமைக்குச் சொந்தக்காரராகி விட்டார் எனது நண்பர் கிருஷ்ணமாச்சாரி. இது ஒரு வித்தியாசமான நூல்"
இந்தியாவில் விலை: ரூ.65.00 + தபால் செலவு ரூ.35.00 . மொத்தம் ரூ. 100.00.
இந்நூலின் ஆசிரியர் அவ்வை தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் என்பதை சொல்வதில் பெருமை கொள்கிறோம்.
ஒவ்வொரு நூலின் விற்பனைத் தொகையிலிருந்தும் ரூ.13.00 அவ்வை தமிழ்ச் சங்கத்திற்கு நன்கொடையாக வழங்கப்படும். நன்னூல் படித்து சங்கத்திற்கும் உதவுங்கள்.
இந்நூலை வாங்க 9818092191 என்ற எண்ணுக்கு ரூ.100 PAYTM செய்து பின் குறுஞ்செய்தியில் 9818092191 என்ற எண்ணுக்கு உங்கள் முகவரியை அனுப்பவும்.
திரிகடுகம் பாடல் -73
'இரந்துகொண்டு ஒண் பொருள் செய்வல்!' என்பானும்,
பரந்து ஒழுகும் பெண்பாலைப் பாசம் என்பானும்,
விரி கடலூடு செல்வானும், - இம் மூவர்
அரிய துணிந்து ஒழுகுவார்.
விளக்கம்
பிச்சை எடுத்துப் பெரும் பொருள் ஈட்டுபவனும், வேசியை நம்பும் காமுகனும், தக்க கருவிகள் இன்றி கடலில் பொருள் ஈட்டச் செல்லும் வணிகனும், தன் முயற்சியில் வெற்றி பெற மாட்டார்கள்.
தெரியமா உங்களுக்கு !....
உலக புகையிலை எதிர்ப்பு நாள்
உலகெங்கும் மே 31 ஆம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பு நாடுகள் சேர்ந்து இந்நாளை 1987ம் ஆண்டில் சிறப்பு நாளாக அறிவித்தது. உலகில் மனித இறப்புகளைத் தோற்றுவிக்கும் முக்கிய காரணிகளில் புகையிலை இரண்டாவது இடத்தை வகிக்கிறது. இச்சிறப்பு நாளின் அறிவிப்பு மூலம் உலக சுகாதார நிறுவனம் ஆண்டுதோறும் புகையிலை சம்பந்தமான சுமார் 3.5 மில்லியன் இறப்புகளைக் குறைக்க முடியும் என எதிர்பார்க்கிறது.
வரலாற்றில் இன்று
· 1910 - தென்னாபிரிக்க ஒன்றியம் அமைக்கப்பட்டது.
· 1911 - டைட்டானிக் கப்பல் வெள்ளோட்டம் விடப்பட்டது..
· .1962 - மேற்கிந்தியத் தீவுகளின் கூட்டமைப்பு கலைக்கப்பட்டது
· 1973 - சென்னையில் இருந்து புறப்பட்ட இந்தியன் ஏர்லைன்சு விமானம் 440 பாலம் விமான நிலையத்தை அண்மித்த போது தீப்பற்றி எரிந்ததில் அதில் பயணம் செய்த 65 பேரில் 48 பேர் கொல்லப்பட்டனர்.
· 2007 - டொராண்டோ தமிழியல் மாநாடு ஆரம்பமானது.
செய்திகள்
தீ விபத்துக்குள்ளான சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் விரிசல் - தினமணி...
காபூல் இந்தியத் தூதரகம் அருகே குண்டுவெடிப்பு ... -விகடன்
சினிமாவுக்கு 'குட்பை' சொல்லும் ரஜினி.. 'காலா'தான் கடைசி படம்! -Oneindia Tamil
அயோத்திக்கு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் திடீர் பயணம்- மாலை மலர்
டெல்லி ஐஐடியில் பிஹெச்டி மாணவி தற்கொலை -Samayam Tamil
தொட்டு விடும் தூரத்திற்கு சூரியனை நெருங்கப் போகும் நாசா ..- Oneindia Tamil
மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக இந்தியா -.. தினத் தந்தி.சாம்பியன்ஸ் டிராபி நாளை தொடக்கம்: இங்கிலாந்து-வங்காளதேசம்- மாலை மலர்...
வீடு வாடகைக்கு :
3 BHK DDA flat is available for rent at Mayur Vihar Phase I. Close to Metro Station (pocket 4). Semi furnished flat. South Indians preferred. Rent 25 K. Flat ready for immediate occupation. For more details contact 9313848410.
உலகலாவிய சிறுகதைப் போட்டி!
தமிழ் மொழி எழுத்தாளர்களுக்கு அழைப்பு! சிறுகதை அனுப்ப இறுதி நாள்: ஆனி 16, 2048 / 30.06.2017
மலேசியா நாடடில் இயங்கி வரும் மலேசியத் தமிழ் மணி மன்றத்தின் பத்தாம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு உலகம் தழுவிய சிறுகதைப் போட்டி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இப்போட்டியில் கலந்துகொள்ளத் தமிழ்ப்படைப்பாளர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் மாணவர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் மலேசியத் தமிழ் மணி மன்றத்தின் தேசியத்தலைவர்சு.வை.லிங்கம் அழைப்பு விடுத்துள்ளார்.
முழுமைபெற்ற சிறுகதையை ஆனி 16, 2048 / 30.06.2017 ஆம் நாளுக்குள் மலேசிய நாட்டுப் படைப்பாளர்கள் vaiskaru@yahoo.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் இந்தியா மற்றும் பிற நாட்டுப் படைப்பாளர்கள் tamilkanikani@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் சிறுகதையை அனுப்ப வேண்டுகிறோம்.
மிகச் சிறந்த சிறுகதையாகத் தெரிவு செய்யப்படும் கதைகளுக்கு:
முதல் பரிசு ஆயிரம் மலேசிய வெள்ளி(1000 இரிங்கிட்டு).
இரண்டாம் பரிசு எழுநூற்றைம்பது மலேசிய வெள்ளி (750 இரிங்கிட்டு).
மூன்றாம் பரிசு ஐந்நூறு மலேசிய வெள்ளி (500 இரிங்கிட்டு).
ஆறுதல் பரிசுக்காகத் தெரிவுசெய்யப்படும் சிறுகதை ஒவ்வொன்றுக்கும்
இருநூறு மலேசிய வெள்ளி (200 இரிங்கிட்டு) வழங்கப்படும்.
மிகச் சிறந்த சிறுகதையாகத் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு முறையான தகவல் மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ, பகிரி(புலனத்தின்) வாயிலாகவோ தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்கப்படும்.
சிறுகதைப் போட்டிகள் தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ள மலேசியத் தமிழ் மணி மன்றத் தேசியத் தலைவர் திரு.சு.வை.லிங்கம்,மலேசியா, தொடர்பு எண் : 0104298234;
மலேசியத் தமிழ் மணி மன்றத் தேசிய உதவித் தலைவரும் சிறுகதைப் போட்டி ஒருங்கிணைப்பாளருமான கி.தங்கராசு மலேசியா, தொடர்பு எண் : 019-2669943, 019-6011569;
சிறுகதைப் போட்டிகளின் இந்திய ஒருங்கிணைப்பாளரும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியல்துறைத் தலைவருமான (பொ) முனைவர் போ.சத்தியமூர்த்தி தொடர்பு எண்: 09488616100.
நம்மை சுற்றி
Date & Time
Venue
Program Details
Organized by
Contact
27-05-17to 15-06-17
11am to 7pm
Plot #A3, Select CityWalk District Centre, Saket
EXHIBITION "The Drifting Canvas" a pioneering multimedia art exposition
Great Modernist
http://www.delhievents.com/
2017/05/exhibition-drifting- canvas-pioneering.html
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com
---
You received this message because you are subscribed to the Google Groups "Indrayakural" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to indrayakural+unsubscribe@googlegroups.com .
For more options, visit https://groups.google.com/d/optout .
Wednesday, May 31, 2017
Re: 31-5-2017 “News Letter” from Avvai Tamil Sangam
On 31 May 2017 12:43, "Avvai Tamil Sangam Noida" <avvaitamilsangam@gmail.com> wrote:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment