29-5-2017 "News Letter" from Avvai Tamil Sangam Is this mail not displaying correctly? View it in your browser | ||||||||
அவ்வைதமிழ்ச்சங்கம், வைகாசி 15, (திங்கள்), திருவள்ளுவராண்டு 2047, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com Be a member of ATS| Friend on Facebook | Forward to a Friend | ||||||||
CBSC தேர்வில் அகில இந்திய அளவில் 99.6% பெற்று முதலிடம் வகிக்கும் நொய்டாவைச் சேர்ந்த தமிழ்ப்பெண் ரக் ஷா கோபால் த/பெ கோபால் ஸ்ரீனிவாசன் அவர்களை அவ்வைத் தமிழ்ச் சங்கம் பாராட்டுவதில் பெருமை கொள்கிறது. | ||||||||
நூல் அறிமுகம் - "சீதை பேசுகிறேன்" | ||||||||
வெங்கட் கிருஷ்ணமாச்சாரி எழுதிய "சீதை பேசுகிறேன்" எனும் நூல் இப்போது விற்பனையில். நூல் பற்றி முன்னால் பேராசிரியர் H. பாலசுப்ரமணியம் அவர்கள் தனது அணிந்துரையில் கூறியது... ".....சிறையிலிருந்த செல்வி சீதையின் சொல்லாடலை, ஓராண்டுக் காலமாக அவள் பட்ட அவதிகளையும் துயரங்களையும் சீதாப் பிராட்டியின் வார்த்தைகளிலேயே பதிவு செய்த பெருமைக்குச் சொந்தக்காரராகி விட்டார் எனது நண்பர் கிருஷ்ணமாச்சாரி. இது ஒரு வித்தியாசமான நூல்"
இந்தியாவில் விலை: ரூ.65.00 + தபால் செலவு ரூ.35.00 . மொத்தம் ரூ. 100.00.
இந்நூலின் ஆசிரியர் அவ்வை தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் என்பதை சொல்வதில் பெருமை கொள்கிறோம். ஒவ்வொரு நூலின் விற்பனைத் தொகையிலிருந்தும் ரூ.13.00 அவ்வை தமிழ்ச் சங்கத்திற்கு நன்கொடையாக வழங்கப்படும். நன்னூல் படித்து சங்கத்திற்கும் உதவுங்கள். இந்நூலை வாங்க 9818092191 என்ற எண்ணுக்கு ரூ.100 PAYTM செய்து பின் குறுஞ்செய்தியில் 9818092191 என்ற எண்ணுக்கு உங்கள் முகவரியை அனுப்பவும். | ||||||||
திரிகடுகம் பாடல் -71 | ||||||||
உடுத்தாடை இல்லாதார் நீராட்டும், பெண்டிர் தொடுத்தாண்டு அவைப் போர் புகலும், கொடுத்து அளிக்கும் ஆண்மை உடையவர் நல்குரவும், - இம் மூன்றும் காண அரிய, என் கண். விளக்கம் ஆடையின்றி நீராடுவதும், பெண்கள் வழக்கு தொடுத்தலும், கொடையாளர்கள் வறுமையும் பார்க்கத் தகுந்தன அல்ல. பொருள் | ||||||||
தெரியமா உங்களுக்கு !.... | ||||||||
ஐக்கிய நாடுகள் சர்வதேச அமைதி காப்போர் தினம் International Day of United Nations Peacekeepers எனப்படுவது ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ஆண், பெண் இரு சாராரையும் கௌரவப்படுத்துவதற்கும், சமாதானத்திற்கான இந்நடவடிக்கைகளின்போது உயிர் நீத்தவர்களை ஞாபகமூட்டுவதற்காகவும் 2001ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை பிரகடனப்படுத்திய தினமாகும். இத்தினம் மே 29ஆம் திகதி அனுட்டிக்கப்படுகிறது. வரலாற்றில் இன்று · 1919 - ஐன்ஸ்டீனின் சார்புக் கோட்பாடு சோதிக்கப்பட்டது. பின்னர் இது உறுதிப்படுத்தப்பட்டது. · 1947 - இந்தியத் தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் அமைக்கப்பட்டது. · 1953 - முதற்தடவையாக சேர் எட்மண்ட் ஹில்லறி, ஷேர்ப்பா டென்சிங் இருவரும் எவரெஸ்ட் சிகரத்தை ஏறி சாதனை படைத்தனர். · 1999 - டிஸ்கவரி விண்ணோடம் பன்னாட்டு விண்வெளி நிலையத்துடனான தனது முதலாவது இணைப்பை வெற்றிகரமாக முடித்தது.. | ||||||||
செய்திகள் | ||||||||
சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வில் 99.6% எடுத்த நொய்டா மாணவி ரக்ஷா கோபால் முதலிடம் - தி இந்து சிபிஎஸ்இ 12ம் வகுப்பு ரிசல்ட் வெளியீடு : சென்னை மண்டலம் 92.60 ... தினகரன் பயங்கரவாத இயக்க தளபதி கொல்லப்பட்டதை கண்டித்து காஷ்மீரில் ... - தினத் தந்தி 83 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக நடவடிக்கை; மேட்டூர் அணையை தூர்வாரும் பணி - தினத் தந்தி தூத்துக்குடி, கடலூர், புதுச்சேரி, நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு - தினமணி குடிநீர் கேன் உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்- தினமணி காந்தியை கொன்றது கோட்சே மட்டுமா? கிளம்பியது புது சர்ச்சை - தினமலர் ஆழித் தேரோட்ட விழாவில் கலைநிகழ்ச்சிகள் - தினமணி ஒன்று முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பாடநூல்கள் தட்டுப்பாடின்றி ... - தினமணி ஆந்திரா மீனவர்கள் மிரட்டல் கடலுக்கு செல்ல மீனவர்கள் தயக்கம்- தினகரன் தலித் குடும்பத்தினருக்கு சோப்பு வழங்கிய விவகாரம் யோகி ... - தினகரன் காஷ்மீரில் நடந்த கல்வீச்சின் போது வாலிபரை மனித கேடயமாக ... - தினத் தந்தி குஜராத்தில் ரூ.1 கோடி செல்லாத நோட்டுகள் பறிமுதல் - 4 பேர் கைது - மாலை மலர் | ||||||||
வீடு வாடகைக்கு : 3 BHK DDA flat is available for rent at Mayur Vihar Phase I. Close to Metro Station (pocket 4). Semi furnished flat. South Indians preferred. Rent 25 K. Flat ready for immediate occupation. For more details contact 9313848410. |
| |||||||
உலகலாவிய சிறுகதைப் போட்டி! தமிழ் மொழி எழுத்தாளர்களுக்கு அழைப்பு! சிறுகதை அனுப்ப இறுதி நாள்: ஆனி 16, 2048 / 30.06.2017 மலேசியா நாடடில் இயங்கி வரும் மலேசியத் தமிழ் மணி மன்றத்தின் பத்தாம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு உலகம் தழுவிய சிறுகதைப் போட்டி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இப்போட்டியில் கலந்துகொள்ளத் தமிழ்ப்படைப்பாளர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் மாணவர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் மலேசியத் தமிழ் மணி மன்றத்தின் தேசியத்தலைவர்சு.வை.லிங்கம் அழைப்பு விடுத்துள்ளார். முழுமைபெற்ற சிறுகதையை ஆனி 16, 2048 / 30.06.2017 ஆம் நாளுக்குள் மலேசிய நாட்டுப் படைப்பாளர்கள் vaiskaru@yahoo.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் இந்தியா மற்றும் பிற நாட்டுப் படைப்பாளர்கள் tamilkanikani@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் சிறுகதையை அனுப்ப வேண்டுகிறோம். மிகச் சிறந்த சிறுகதையாகத் தெரிவு செய்யப்படும் கதைகளுக்கு: முதல் பரிசு ஆயிரம் மலேசிய வெள்ளி(1000 இரிங்கிட்டு). இரண்டாம் பரிசு எழுநூற்றைம்பது மலேசிய வெள்ளி (750 இரிங்கிட்டு). மூன்றாம் பரிசு ஐந்நூறு மலேசிய வெள்ளி (500 இரிங்கிட்டு). ஆறுதல் பரிசுக்காகத் தெரிவுசெய்யப்படும் சிறுகதை ஒவ்வொன்றுக்கும் இருநூறு மலேசிய வெள்ளி (200 இரிங்கிட்டு) வழங்கப்படும். மிகச் சிறந்த சிறுகதையாகத் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு முறையான தகவல் மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ, பகிரி(புலனத்தின்) வாயிலாகவோ தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்கப்படும். சிறுகதைப் போட்டிகள் தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ள மலேசியத் தமிழ் மணி மன்றத் தேசியத் தலைவர் திரு.சு.வை.லிங்கம்,மலேசியா, தொடர்பு எண் : 0104298234; மலேசியத் தமிழ் மணி மன்றத் தேசிய உதவித் தலைவரும் சிறுகதைப் போட்டி ஒருங்கிணைப்பாளருமான கி.தங்கராசு மலேசியா, தொடர்பு எண் : 019-2669943, 019-6011569; சிறுகதைப் போட்டிகளின் இந்திய ஒருங்கிணைப்பாளரும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியல்துறைத் தலைவருமான (பொ) முனைவர் போ.சத்தியமூர்த்தி தொடர்பு எண்: 09488616100. |
| |||||||
நம்மை சுற்றி |
| |||||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact |
| |||
27-05-17to 15-06-17 11am to 7pm | Plot #A3, Select CityWalk District Centre, Saket | EXHIBITION "The Drifting Canvas" a pioneering multimedia art exposition | Great Modernist | http://www.delhievents.com/2017/05/exhibition-drifting-canvas-pioneering.html |
| |||
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
| |||||||
No comments:
Post a Comment