18-5-2017 "News Letter" from Avvai Tamil Sangam Is this 1mail not displaying correctly? View it in your browser | ||||||
அவ்வைதமிழ்ச்சங்கம், வைகாசி 4 (வியாழன்), திருவள்ளுவராண்டு 2047, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com Be a member of ATS| Friend on Facebook | Forward to a Friend | ||||||
திரிகடுகம் பாடல் -64 | ||||||
நல் விருந்து ஓம்பலின், நட்டாளாம்; வைகலும் இல் புறஞ் செய்தலின், ஈன்ற தாய்; தொல் குடியின் மக்கள் பெறலின், மனைக் கிழத்தி; - இம் மூன்றும் கற்புடையாள் பூண்ட கடன். விளக்கம் விருந்தினரைப் போற்றுதலால் நட்பானவள் ஆவாள். இல்லறத்தைக் காப்பதால் பெற்ற தாய் ஆவாள். மக்களைப் பெறுதலால் மனையாள் ஆவாள். இம்மூன்றும் கற்புடைய பெண்களின் கடமைகளாகும். பொருள் நல் விருந்து - நன்மையான விருந்தினரை, ஓம்பலின் - பாதுகாத்தலால், நட்டாள் ஆம் - கணவனுக்கு நட்பினளாம்; வைகலும் - நாடோறும், இல் - இல்லறத்தை, புறஞ் செய்தலின் (வழுவாது) காத்தலால், ஈன்ற தாய் (ஆம்) - பெற்ற தாயாம்; தொல்குடியின் - தன் பழைய குடும்பத்துக்குரிய, மக்கள் பெறலின் - மக்களைப் பெறுதலால், மனைக்கிழத்தி (ஆம்) - மனையாளாம்; இ மூன்றும் - (விருந்தோம்பல் முதலிய) இம் மூன்று செயலும், கற்பு உடையாள் - கற்புடைய பெண், பூண்ட மேற்கொண்ட, கடன் – கடமைகளாம். | ||||||
தெரியமா உங்களுக்கு !.... | ||||||
பன்னாட்டு அருங்காட்சியக நாள் · பன்னாட்டு அருங்காட்சியக நாள் (International Museum Day, IMD) ஆண்டுதோறும் மே 18 அல்லது அதற்குக்கிட்டவான நாட்களில் பன்னாட்டு ரீதியாக நடத்தப்படும் நிகழ்வு ஆகும். இந்நிகழ்வுகள் அருங்காட்சியகங்களின் பன்னாட்டுப் பேரவையினால் (International Council of Museums, ICOM) ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப்படுகின்றன. ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு கருப்பொருளில் நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்படுகின்றன. · அருங்காட்சியக வல்லுனர்கள் பொதுமக்களை சந்திக்கவும், அருங்காட்சியகங்கள் இன்று எதிர்நோக்கும் பிரச்சினைகளை அவர்களுக்கு விளக்கவும் சமூக வளர்ச்சியில் அருங்காட்சியகங்களின் பங்களிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வைக் கொண்டு வரவும் பன்னாட்டு அருங்காட்சியக நாள் உதவுகிறது. வரலாற்றில் இன்று · 1974 - சிரிக்கும் புத்தர் என்ற பெயரிடப்பட்ட திட்டத்தில் இந்தியா தனது முதலாவது அணுக்குண்டை வெற்றிகரமாக சோதித்தது.
· 2009 - ஈழப்போர் முடிவுக்கு வந்ததாக இலங்கை அரசு அதிகாரபூர்வமாக அறிவித்தது. இலங்கையும் அதன் நட்பு நாடுகளும் ஒருசேர 53,000 இற்கும் மேற்பட்ட பூர்வகுடி தமிழ் மக்களை கொன்ற நாள் என தமிழர்கள் குற்றம் சாட்டிய நாள். · 2010 - நாடு கடந்த தமிழீழ அரசு நிறுவப்பட்டது. | ||||||
செய்திகள் | ||||||
மேலும் 2 நாள்களுக்கு அனல் காற்று வீசும்: வானிலை ஆய்வு ... - தினமணி பிளஸ்-1 வகுப்புக்கு பொதுத்தேர்வு அமைச்சர் செங்கோட்டையன் ...- தினத் தந்தி துப்பாக்கி முனையில் மணமகன் கடத்தல்: இளம் பெண்ணுக்கு வலை - தினமலர் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர இணையம் மூலம் ... - தினமணி மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்: 6 ... - தினமணி எவரெஸ்ட்டில் 4வது முறையாக ஏறிய இந்திய பெண் அன்சு – தினமலர் கம்ப்யூட்டர்களை பாதிக்கும் வைரஸ் தடுக்க முடியும்: சிறுமி ... - தினமலர் குடியிருப்பு பகுதியில் தாக்குதல் பாக்., ராணுவம் மீண்டும் ... - தினமலர் டிரம்ப் - ரஷ்யா தொடர்பு பற்றி விசாரிக்க சிறப்பு அதிகாரி நியமனம் - தினத் தந்தி பெட்ரோல், டீசல் விலை குறைப்பு: நள்ளிரவு முதல் அமல் - தினமலர் | ||||||
நம்மை சுற்றி |
| |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact |
| |
17-05-17 6.30pm | Conference Room - 1, Main Building, India International Centre (IIC), 40 Max Mueller Marg, Lodhi Estate, New Delhi-110003 | TALK "Day & Night Body Rhythm – How it controls my health?" As part of 'Health and Environment' Series | Health Environment Foundation in association with Consumers India | http://www.delhievents.com/2017/05/talk-day-night-body-rhythm-how-it.html |
| |
27-05-17to 15-06-17 11am to 7pm | Plot #A3, Select CityWalk District Centre, Saket | EXHIBITION "The Drifting Canvas" a pioneering multimedia art exposition | Great Modernist | http://www.delhievents.com/2017/05/exhibition-drifting-canvas-pioneering.html |
| |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
| |||||
No comments:
Post a Comment