23-5-2017 "News Letter" from Avvai Tamil Sangam Is this 1mail not displaying correctly? View it in your browser | ||||||||
| அவ்வைதமிழ்ச்சங்கம், வைகாசி 7 (செவ்வாய்), திருவள்ளுவராண்டு 2047, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com Be a member of ATS| Friend on Facebook | Forward to a Friend | |||||||
திரிகடுகம் பாடல் -67 | ||||||||
எதிர்நிற்கும் பெண்ணும், இயல்பு இல் தொழும்பும், செயிர் நிற்கும் சுற்றமும், ஆகி, மயிர் நரைப்ப, முந்தைப் பழ வினையாய்த் தின்னும்; - இவை மூன்றும் நொந்தார் செயக் கிடந்தது இல்.. விளக்கம் சினத்தால் எதிர்த்துப் பேசும் மனையாளும், ஒழுக்கமில்லாத வேலையாட்களும், பகையான சுற்றமும் முற்பிறப்பிற் செய்த வினைப்பயனாகும். இவை முதுமைப் பருவம் வரைக்கும் ஒருவரை வருத்தக் கூடியது ஆகும். பொருள் எதிர் நிற்கும் - (தாம் சினந்தால்) தம் எதிர்நின்று பேசும்; பெண்ணும் - மனையாளும்; இயல்பு இல் - ஒழுக்கமில்லாத, தொழும்பும் - ஏவலாளும்; செயிர் - பகை, நிற்கும் - கெடாது நிற்கும், சுற்றமும் - உறவினரும், ஆகி - ஆய் நின்று. முந்தை - முற்பிறப்பிற் செய்த, பழவினை - பழைய வினை, ஆய் - ஆகும்படி, மயிர்நரைப்ப - முதுமைப் பருவம் வரைக்கும், தின்னும் - மெலியச் செய்யும்; இவை மூன்றும் - இந்த மூன்றுக்கும், நொந்தார் - வருந்தினார், செயக் கிடந்தது - செய்யக்கூடியதாகிய, பரிகாரம் இல் – இல்லை. | ||||||||
தெரியமா உங்களுக்கு !.... | ||||||||
உலக ஆமைகள் பாதுகாப்பு தினம் மே 23 மெதுவாகச் செல்வதற்கு உதாரணமாக ஆமைகளைச் சொல்வார்கள். ஆமை நிலத்தில் ஒரு மணி நேரத்திற்கு 70 மீட்டர் தொலைவு வரைதான் செல்லும். ஆனால், நீரில் வேகமாக நீந்தும். ஆமைகளின் மூன்று வகைகள் 1. டர்ட்டில் (Turtle) - நிலத்திலும், நீரிலும் வாழும் கடல் ஆமைகள் 2. டார்ட்டாய்ஸ் (Tortoise) - காட்டின் நிலப்பரப்பில் மட்டும் வாழும் ஆமைகள் 3. டெராபின் (Terrapin) - ஆறு, குளம் போன்ற சுத்தமான நீர் நிலைகளில் வாழும் ஆமைகள்
நீரிலும், நிலத்திலும் வாழ்வதால் ஆமைகளை இரு வாழ்விகள் என்கிறார்கள். இவை முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் இனத்தைச் சேர்ந்தவை. ஆமையின் மேல் ஓடு பலமானது. இதன் விலா எலும்புகளும் முதுகு எலும்புகளும் ஒன்றாகி உடல் தசைகள் சுருங்கிக் காணப்படும். இதன் நுரையீரல் மேல் ஓட்டை ஒட்டியவாறு அமைந்திருக்கிறது. ஆமையின் கண் சிறியது. அனைத்து வண்ணங்களையும் ஆமையால் காண முடியும். ஆமைக்கு, பற்களுக்குப் பதிலாக கொம்பு போன்ற அசையாத அலகு இரு தாடைகளிலும் இருக்கிறது. முகரும் திறன் மிகவும் அதிகம். ஆமையின் கை, கால்கள் நீர், நிலத்தில் வாழ ஏற்றதாக உள்ளன. முன் கால்கள் துடுப்புகளைப் போல் இருப்பதால் மிக வேகமாக நீந்திச் செல்லும். பின்னங்கால்களில் உள்ள விரல்கள், சவ்வு போன்ற அமைப்பால் இணைக்கப்பட்டுள்ளன. கடல் ஆமைகளின் வாயிலும், கழிவுகளை வெளியேற்றும் பகுதியிலும் சிறப்பு ரத்த நாளங்கள் உள்ளன. நீரில் மூழ்கி இருக்கும் போது பிராண வாயுவை நீரிலிருந்து பிரித்தெடுத்துச் சுவாசிக்க இவை உதவுகிறது. நிலத்தில் வாழும் ஆமை தன் தலை, கால் ஆகியவற்றை ஆபத்து வரும்போது ஓட்டுக்குள் இழுத்துக்கொண்டு தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும். ஆனால், கடல் ஆமைகளால் இப்படிச் செய்ய முடியாது. வாழ்நாள் முழுவதும் பல நாட்டுக் கடல் பகுதிகளில் சுற்றும் கடல் ஆமை, இனப்பெருக்க காலத்தில் மட்டும், தான் பிறந்த கடற்கரைக்கு வந்துதான் முட்டையிடும்.
வரலாற்றில் இன்று · 1929 - மிக்கி மவுசின் முதலாவது பேசும் கார்ட்டூன் "கார்னிவல் கிட்" வெளி வந்தது. · 1430 - ஜோன் ஒஃப் ஆர்க் பிரான்சில் பேர்கண்டியரினால் கைது செய்யப்பட்டாள். · 1805 - நெப்போலியன் பொனபார்ட் இத்தாலியின் மன்னனாக முடி சூடினான்.. | ||||||||
செய்திகள் | ||||||||
குடியரசுத் தலைவர் பிரணாப் இன்று உதகை வருகை..- தினமணி லண்டன்: மான்செஸ்டர் பகுதியில் குண்டுவெடிப்பு - 19 பேர் பலி..- மாலை மலர் டெல்லி மேல்-சபை எம்.பி. தேர்தல் ரத்து - தேர்தல் கமிஷன் அறிவிப்பு..- மாலை மலர் பேஸ்புக் உங்கள் பதிவுகளை தணிக்கை செய்கிறதா?..- BBC தமிழ் ஐ.பி.எல்.லில் 3-வது முறையாக சாம்பியன்: மும்பை அணிக்கு ரூ.15 ...- மாலை மலர் கருணாநிதி சட்டப்பேரவை வைர விழா: ராகுல் காந்தி - சீதாராம் ... தினமணி | ||||||||
வீடு வாடகைக்கு : 3 BHK DDA flat is available for rent at Mayur Vihar Phase I. Close to Metro Station (pocket 4). Semi furnished flat. South Indians preferred. Rent 25 K. Flat ready for immediate occupation. For more details contact 9313848410. |
| |||||||
நம்மை சுற்றி |
| |||||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact |
| |||
27-05-17to 15-06-17 11am to 7pm | Plot #A3, Select CityWalk District Centre, Saket | EXHIBITION "The Drifting Canvas" a pioneering multimedia art exposition | Great Modernist | http://www.delhievents.com/2017/05/exhibition-drifting-canvas-pioneering.html |
| |||
27-05-17 6pm | Azad Bhawan, Indian Council for Cultural Relations | UMAK Festival - Festival of Music & Dance by Raja Radha Reddy | UMAK Center for Culture | Raja Radha Reddy and Kaushalya Reddy
Plot Nos. 49 & 52 Pushp Vihar, Sector 6 Saket, New Delhi - 110017 ☎ 011 - 29565540 / 2956524 http://www.rajaradhareddy.com/ |
| |||
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
| |||||||
No comments:
Post a Comment