4-5--2017 "News Letter" from Avvai Tamil Sangam Is this 1mail not displaying correctly? View it in your browser | ||||||
அவ்வை தமிழ்ச் சங்கம், சித்திரை –21 (வியாழன்), திருவள்ளுவராண்டு 2047, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | ||||||
திரிகடுகம் பாடல் -62 | ||||||
நன்றிப் பயன் தூக்கா நாண் இலியும், சான்றார் முன் மன்றில் கொடும்பாடு உரைப்பானும், நன்று இன்றி வைத்த அடைக்கலம் கொள்வானும், - இம் மூவர் எச்சம் இழந்து வாழ்வார். விளக்கம் நன்றியறிதல் இல்லாதவனும், பொய் சாட்சி சொல்பவனும், தன்னிடம் அடைக்கலமாக வந்த பொருளை விரும்பியவனும், தம் மக்களை இழந்து வருந்துவார். பொருள் நன்றிப்பயன் - ஒருவன் தனக்குச் செய்த நன்றியின் பயனை, தூக்கா - அளந்தறியாத, நாண் இலியும் - நாணமில்லாதவனும்; சான்றோர் முன் - பெரியவர் முன்னே, மன்றில், அறநிலையத்தில், கொடும்பாடு - பொய்ச் சொல்லை, உரைப்பானும் - சொல்லுகின்றவனும்; நன்று இன்றி - நற்செய்கை இல்லாதவனாய், வைத்த - ஒருவன் வைத்த, அடைக்கலம் - அடைக்கலப் பொருளை, கொள்வானும் - கைப்பற்றிக் கொள்பவனும்; இ மூவர் - ஆகிய இந்த மூவரும், எச்சம் இழந்து - தம் மக்களை இழந்து வருந்தி, வாழ்வார் - உயிர் வாழ்வார்; | ||||||
தெரியமா உங்களுக்கு !.... | ||||||
அனைத்து நாடுகள் தீயணைக்கும் படையினர் நாள் · அனைத்து நாடுகள் தீயணைக்கும் படையினர் நாள் (International Firefighters' Day) மே 4ஆம் நாளன்று ஆண்டுதோறும் நினைவுகூரப்பட்டு வருகிறது · வழக்கமாக இந்நாளன்று ஐரோப்பிய நாடுகளில் தீயணைப்பும் படையினர் நாள் கொண்டாடப்பட்டு வந்தது. எனினும் 1999 ஆண்டு ஜனவரி 4 அன்று அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற பெரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் போராட்டத்தில் உயிரிழந்த ஐந்து தீயணைக்கும் படையினரை நினைவுகூருவதற்கு ஆதரவாக உலகெங்கும் மின்னஞ்சல் மூலமாக இடம்பெற்ற பரப்புரையினை அடுத்து மே 4ஆம் நாளை உலகெங்கும் நினைவுகூர முடிவுசெய்யப்பட்டது மேலும் படிக்க | ||||||
செய்திகள் | ||||||
டெல்லியில், தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா - தினத்தந்தி மதுக்கடைகளை அகற்றக் கோரி ஏராளமான கிராம சபைகள் தீர்மானம் - தி இந்து ரஜினியை வைத்து படம் இயக்குவேன்: இயக்குநர் ராஜமவுலி தகவல் - தி இந்து விவசாயிகள் தற்கொலை வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு - தி இந்து இந்திய வீரர்கள் தலை துண்டிப்பு: பாகிஸ்தானுக்கு எதிராக ஆதாரம் உள்ளது: இந்தியா - தினமணி குடியரசுத் தலைவர் தேர்தல்: ஸ்டாலின், மம்தா, மாயாவதியுடன் சோனியா விரைவில் ஆலோசனை - தினமணி தமிழகம் முழுவதும் 169 நீதிபதிகள் இடமாற்றம் - தினமலர் தமிழக மீனவர்களை அத்துமீறி தாக்கிய இலங்கை கடற்படை: நாகை மாவட்ட மீனவர்களை தாக்கி அட்டூழியம் - தினகரன் கத்திரி வெயில் இன்று துவங்குகிறது - தினமலர் | ||||||
தமிழ் பேராய விருதுகள் - 2017 SRM பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் தமிழ் பேராய விருதுகள் வழங்குகிறது. 22 லட்சம் மதிப்புள்ள விருதுகள் பல்வேறு துறைகளில் வழங்கப்படுகின்றன. 2017 இவ்வாண்டு விருதுகளுக்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது. விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி நாள் 15.05.2017. மேலும் விவரங்களுக்கு: |
| |||||
'கணினித்தமிழ் அடிப்படையும் பயன்பாடும்' ஒருமாதகாலச் சான்றிதழ்ப் படிப்பு Certificate Course in 'Fundamentals and Use of Tamil Computing' SRM பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயத்தில் கணினித்தமிழ் அடிப்படையும் பயன்பாடும் - Fundamentals & Use of Tamil Computing எனும் ஒருமாதகாலச் சான்றிதழ்ப் படிப்பு 08.05.2017 முதல் 31.05.2017 வரை நடைபெறவுள்ளது. கணினியின் அடிப்படைப் பயன்பாடுகளும் அதில் தமிழைப் பயன்படுத்துவதற்குரிய வழிமுறைகளும் பயிற்சியளிக்கப்படுகிறது.
இந்தப் பயிற்சியின் வாயிலாகத் தங்களது கணினிசார்ந்த பணிகளைத் தாங்களே செய்துகொள்ள முடியும். ஊடகத்துறையிலும் பிற கணினித்துறை சார்ந்த அலுவலகங்களிலும் பணிவாய்ப்புகளைப் பெறமுடியும்.
பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள், பணி ஓய்வு பெற்றவர்கள், இல்லத்தரசிகள் எனப் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
குறைந்தபட்சக் கல்வித் தகுதி: 10-ம் வகுப்பு. வயது வரம்பு இல்லை.
வகுப்புகள் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணிமுதல் மாலை 4 மணிவரை நடைபெறும்.
விண்ணப்பத்தை www.srmuniv.ac.in எனும் இணையதளத்திலும் தமிழ்ப்பேராய அலுவலகத்திலும் பெற்றுக்கொள்ளலாம்.
இந்தப் பயிற்சியில் சேர்வதற்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள் 05.05.2017.
வெளியூரிலிருந்து வருபவர்களுக்குத் தங்குமிடம், உணவு ஏற்பாடு செய்யப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு முனைவர் இல. சுந்தரம், தமிழ்ப்பேராயம், SRM பல்கலைக்கழகம், காட்டாங்குளத்தூர் - 603 203. தொலைபேசி: 2741 7379, செல்பேசி: 97 90 900 230.
இந்தப் படிப்பு குறித்து உங்கள் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் தெரிவித்துப் பயன்பெற வழிவகை செய்யுங்கள்... |
| |||||
நம்மை சுற்றி |
| |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact |
| |
3.5.2017 7.00 PM onwards | Sri Venkateswara Mandir, Sector 3, R.K. Puram, New Delhi | 250th Birth Anniversary of Saint Thyagaraja by singing Ghana Pancharatna kritis.
All those interested and associated with music including gurus, students of music and representatives of cultural associations are invited to join in this unique initiative. | Dwarkalaya
| Violin Sridhar @ 9968302176
|
| |
5.5.2017 to 7.5.2017
5th & 6th May – 6.30pm
7th May – 4pm | Delhi Tamil Sangam | வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் அவர்களின் பக்தி சொற்பொழிவு. | தில்லி முத்தமிழ் பேரவை | 9811937936, 9810271676, 9313006908 |
| |
Sunday, 7th May, 2017 @ 4pm to 5:30pm | Delhi Tamil Sangam | Production of Sri Godaagraja (Sri Andal Nachhiyar) - Affinity of Ramanujacharya towards Sri Gadha Devi and which became the Quintessence of Sri Vaishnavism to reach out to the masses with ease and warmth. Music for the production is based on the Azhwar's Divya Prabandhams. | HAMSINI - Center for Bharatanatyam & Karnatak Music | Dr Vasudevan Iyengar +91 9999441867 |
| |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
| |||||
No comments:
Post a Comment