17-5-2017 "News Letter" from Avvai Tamil Sangam Is this 1mail not displaying correctly? View it in your browser | ||||||
| அவ்வைதமிழ்ச்சங்கம், வைகாசி 3 (புதன்), திருவள்ளுவராண்டு 2047, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com Be a member of ATS| Friend on Facebook | Forward to a Friend | |||||
திரிகடுகம் பாடல் -63 | ||||||
நேர்வு அஞ்சாதாரோடு நட்பும், விருந்து அஞ்சும் ஈர்வளையை இல்லத்து இருத்தலும், சீர் பயவாத் தன்மையிலாளர் அயல் இருப்பும், - இம் மூன்றும் நன்மை பயத்தல் இல.
விளக்கம் துன்பத்துக்கு அஞ்சாதவர் நட்பும், விருந்தினர்க்கு உணவளிக்காத மனைவியும், நற்குணமில்லாதவர் அயலில் குடியிருத்தலும் பயனற்றவை ஆகும். பொருள் தமக்கு வரும் துன்பத்துக்கு, அஞ்சாதாரோடு - பயப்படாதவரிடத்து, நட்பும் - கொண்ட நட்பும்; விருந்து அஞ்சும் - விருந்தினர்க்கு உண்டி கொடுக்க அஞ்சுகின்ற, ஈர்வளையை - மனைவியை, இல்லத்து - மனையினிடத்தில், இருத்தலும் - இருக்கச் செய்தலும் : சீர்பயவா - சிறப்பைத் தராத, தன்மை - தன்மையையுடைய, இல் ஆளர் - இல்வாழ்வோருக்கு, அயல் இருப்பும் - அயலில் குடியிருத்தலும்; இ மூன்றும் - ஆகிய இம் மூன்றும், நன்மை - நன்மையை, பயத்தல் இல - தருதலில் லனவாம். | ||||||
தெரியமா உங்களுக்கு !.... | ||||||
உலக தகவல் சமூக நாள் · உலக தகவல் சமூக நாள் (World Information Society Day) என்று ஒவ்வொரு ஆண்டும் மே 17ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இது குறித்து அறிவிப்பு 2005ஆம் ஆண்டு தூனிசில் நடந்த தகவல் சமூகத்திற்கான உலக மாநாட்டை அடுத்து ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தீர்மானம் மூலம் அறிவிக்கப்பட்டது.[1] · இதற்கு முன்னதாக பன்னாட்டுத் தொலைத்தொடர்பு ஒன்றியம் 1865ஆம் ஆண்டு இந்த நாளன்று நிறுவப்பட்டதைக் கொண்டாடும் விதமாக உலகத் தொலைத்தகவல் தொடர்பு நாள் என அறியப்பட்டு வந்தது. [2] 1973ஆம் ஆண்டு இதற்கான தீர்மானம் மாலேகா-டொர்ரெமோலினோசில் நடந்த முழு அதிகாரம் கொண்ட மாநாட்டில் நிறைவேற்றப்பட்டிருந்தது. · உலக தகவல் சமூக நாளின் முகனையான நோக்கம் உலகளவில் புதிய தகவல் தொழில்நுட்பங்களாலும் இணையத்தாலும் ஏற்பட்டுள்ள சமுதாய மாற்றங்களைக் குறித்த விழிப்புணர்ச்சியை வளர்ப்பதாகும். மேலும் இது எண்ணிம இடைவெளியைக் குறைப்பதற்கு உதவிடும் இலக்கையும் கொண்டுள்ளது. மேலும் படிக்க | ||||||
செய்திகள் | ||||||
ப. சிதம்பரம் வீட்டில் சிபிஐ சோதனை: கார்த்தி உள்பட 7 பேர் மீது வழக்குப் பதிவு - தினமணி அமைச்சர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு: பஸ் ... - திஇந்து தமிழக வரலாற்றில் முதல்முறை: திருத்தணியில் அதிகபட்சமாக 114 ... - திஇந்து ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர்! - சோனியா, மம்தா ஆலோசனை - விகடன் தமிழில் வரும் பிழைகளை திருத்தும் புதிய மென்பொருள் அரசு ... - தினத் தந்தி | ||||||
|
| |||||
|
| |||||
நம்மை சுற்றி |
| |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact |
| |
17-05-17 6.30pm | Conference Room - 1, Main Building, India International Centre (IIC), 40 Max Mueller Marg, Lodhi Estate, New Delhi-110003 | TALK "Day & Night Body Rhythm – How it controls my health?" As part of 'Health and Environment' Series | Health Environment Foundation in association with Consumers India | http://www.delhievents.com/2017/05/talk-day-night-body-rhythm-how-it.html |
| |
27-05-17to 15-06-17 11am to 7pm | Plot #A3, Select CityWalk District Centre, Saket | EXHIBITION "The Drifting Canvas" a pioneering multimedia art exposition | Great Modernist | http://www.delhievents.com/2017/05/exhibition-drifting-canvas-pioneering.html |
| |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
| |||||
No comments:
Post a Comment