Thursday, March 2, 2017

3-3-2017 "News Letter" from Avvai Tamil Sangam

Is this 1mail not displaying correctly? View it in your browser

 

 

 அவ்வை தமிழ்ச் சங்கம்,

மாசி –19 (வெள்ளி), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

திரிகடுகம் பாடல் -30

தன் நச்சிச் சென்றாரை எள்ளா ஒருவனும்,

மன்னிய செல்வத்துப் பொச்சாப்பு நீத்தானும்,

என்றும் அழுக்காறு இகந்தானும், - இம் மூவர்

நின்ற புகழ் உடையார்.

விளக்கம்

தன்னை மதித்தவரை இகழாது இருத்தலும், செல்வம் வந்த போது நண்பர்களை மறவாமல் இருத்தலும், பகைவரின் செல்வம் கண்டு மகிழ்வதும் செய்தவர் அழியாப் புகழ் உடையார்.

பொருள்

தன் நச்சி - தன்னை விரும்பி, சென்றாரை - அடைந்தவரை, எள்ளா ஒருவனும் - இகழாத ஒருவனும், மன்னிய - மிகுந்த, செல்வத்து - செல்வம் வந்த காலத்தில், பொச்சாப்பு - மறதியை, நீத்தானும் - நீக்கினவனும்; என்றும் - பிறரிடத்துப் பகைமை யுண்டாகிய காலத்திலும், அழுக்காறு - அவரது செல்வங் கண்ட இடத்து மகிழாமையை, இகந்தானும் - (கடந்தவனும்) நீங்கினவனும்; இ மூவர் - ஆகிய இம் மூவரும்; நின்ற புகழ் உடையார் - அழியாப் புகழுடையார்;

தெரியமா உங்களுக்கு  !....

வெங்கடராமன் இராதாகிருட்டிணன்

·         வெங்கடராமன் இராதாகிருட்டிணன் (18 மே 1929 3 மார்ச்சு 2011) உலகளாவியப் புகழ்பெற்ற விண்வெளி அறிவியலாளர். இவர் சுவீடிய வேந்திய அறிவியல் மன்றத்தின் உறுப்பினராக இருந்தார்.

·         பெங்களூரில் உள்ள இராமன் ஆய்வுக் கழகத்தில் 1972 முதல் 1994 வரை இயக்குநராக இருந்து பின்னர் ஓய்வு பெற்றப் பேராசிரியராக இருந்தார்.

·         இராதாகிருட்டிணன் உலகளாவிய பல அறிவியல் மன்றங்களிலும், கழகங்களிலும் பெரிதும் மதிக்கப்பட்டவர்.

·         நெதர்லாந்தின் வானொலியலை வானியல் (ரேடியோ வானியல்) நிறுவனத்தின் வெளிநாட்டு அறிவுரையாளராகப் பணியாற்றினார், ஆத்திரேலிய நாட்டகத் தொலைநோக்கி அமைப்பின் (Australia Telescope National Facility) நெறிப்படுத்தும் குழு, அமெரிக்காவின் கிரீன் பாங்க்கு வானொலியலை தொலைநோக்கி (Green Bank Radio Telescope), தேசிய வானொலியலை வானியல் வானாய்வக அறிவுரையாளர் குழு என்று பற்பல குழுக்களில் பங்காற்றி இருக்கின்றார்.. மேலும் படிக்க

ஜாம்செட்ஜி நுசர்வாஞ்சி டாட்டா (ஜாம்செட்ஜி டாடா) (மார்ச் 13, 1839 - மே 19, 1904)

·         இந்தியாவின் நவீன தொழில்துறையின் முன்னோடிகளுள் ஒருவராவார். இவர் இந்திய தொழில்துறையின் தந்தை என்று அறியப்படுகிறார். இவர் பாரிஸ் நகரத்திலேயே நீண்ட காலம் வசித்தார்.

·         இவர் இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள நவசாரி என்னுமிடத்தில் பிறந்தார். எஃகு உற்பத்திக்குப் பெயர்பெற்ற ஜாம்ஷெட்பூர் நகரத்திற்கு இவருடைய நினைவாகவே பெயர்சூட்டப்பட்டது.

·         துணிவுமிக்க இளைஞனான டாடா பாரம்பரியத்தைத் தகர்த்து தன் குடும்பத்திலேயே வணிகத்தில் நுழைந்த முதல் மனிதனாகத் திகழ்ந்தார். அவர் தன் வியாபாரத்தை அன்றைய பம்பாயாக இருந்த இன்றைய மும்பையில் ஆரம்பித்தார்.

செய்திகள் 

முதல்வர் வேண்டுகோளை ஏற்க மறுப்பு: நிரந்தரமாக திட்டத்தை ரத்து செய்ய மக்கள் அழுத்தம் - தி இந்து

லிம்கா சாதனை புத்தகத்தில் டில்லி மெட்ரோ- தினமலர்

 ''ஜெயலலிதா மரணத்தில் குற்றவாளிகளை நெருங்கிவிட்டோம் ...தினத் தந்தி

ரூ.1800 கோடியில் எஃகு பாலம் கட்டும் திட்டம்: கைவிட்டது கர்நாடகா ...-  தினமலர்

தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று கூடுகிறது பட்ஜெட் பற்றி ... - தினத் தந்தி

தமிழ்நாட்டில் இன்று முதல் பெப்ஸி, கோக் விற்பனை நிறுத்தம் அமல்- பிபிசி

வீடு வாடகைக்கு 

LIG  flat at Mayur Vihar Phase - 3 avvailable for on Lease Rental basis from 1st of March'17.The interested family is requested to directly contact email: Bala - 9990209131 /  08527498136

Email id:  aruna_clt@yahoo.co.in

நம்மை சுற்றி

 

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

 

20.3.2017

to

26.3.2017

7.30 AM to 10.00 PM

Noida Shankar Mutt,  Sector 42, Noida.

SRI SAHASRA CHANDI MAHA YAGNAM consisting of Sri Durga Sapthasathi Japam & Homam

Sri Vishnu Sahasranama Satsangam

Sector 34, Noida

V Badrinarayanan                   9312590372

Suresh Sitaraman                    9811933299

K Rajasekar                             9868102051

V Jayaraman                           9871526767

S Muralidharan                       9811008805

 

8.4.2016

&9.4.2016

6.00 AM onwards

MAA AADHYA SAKTHI DHAM MANDIR,

Block E-5, [ Opp. District Park ]

Sector – 16, Rohini, Delhi - 89

16th ANNIVERSARY CELEBRATIONS Sri Radha Kalyana Mahotsavam

 

 

 

 

ROHINI SRI VISHNU SAHASRANAMA SATSANGAM

 

sahasranamam1516@gmail.com

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

No comments:

Post a Comment