Monday, March 13, 2017

14-3-2017 “News Letter” from Avvai Tamil Sangam

14-3-2017 "News Letter" from Avvai Tamil Sangam

Is this 1mail not displaying correctly? View it in your browser

 

 

  அவ்வை தமிழ்ச் சங்கம்,

பங்குனி  –1 (செவ்வாய்), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

திரிகடுகம் பாடல் -36

ஊன் உண்டு, 'உயிர்கட்கு அருளுடையெம்!' என்பானும்,

'தான் உடன்பாடு இன்றி வினை ஆக்கும்' என்பானும்,

காமுறு வேள்வியில் கொல்வானும், - இம் மூவர்

தாம் அறிவர், தாம் கண்டவாறு.

விளக்கம்

உயிரைக் கொன்று தின்று இரக்கமுடையவன் என்பானும், எல்லாம் விதி என்று சோம்பி இருப்பவனும், வேள்வியில் ஓருயிரைக் கொல்வானும், நூல்களின் உண்மையை அறியாதவன் ஆவான்.

பொருள்

ஊன் உண்டு - ஒன்றின் மாமிசத்தைத் தின்று, உயிர்கட்கு - உயிர்களிடத்தில், அருள் உடையேம் - தயவுடையோம், என்பானும் - என்று சொல்வானும்; தான் உடன்பாடு இன்றி - தான் (யாதொரு முயற்சிக்கும்) உடன்படாமல், வினை ஆக்கும் - ஊழ் (எல்லாம்) செய்யும், என்பானும் - என்கிறவனும்; காமுறு - (ஒரு பயனைப்பெற வேண்டிச் செய்ய) விரும்புகின்ற, வேள்வியில் - யாகத்தில், கொல்வானும் - (ஓருயிரைக்) கொலை செய்வானும்; இ மூவர் - ஆகிய இம் மூவரும், தாம் கண்ட ஆறு - தாங்கள் அறிந்தபடியே, தாம் அறிவர் - தாங்கள் அறிந்தவராவர்;

தெரியமா உங்களுக்கு  !....

இரோம் சானு சர்மிளா

·         இரோம் சானு சர்மிளா அல்லது ஐரோம் ஷர்மிளா (Irom Chanu Sharmila, பிறப்பு: மார்ச் 14, 1972) என்பவர் மணிப்பூரின் இரும்பு மங்கை என அழைக்கப்படுபவராவார்.

·         இவரை அவரது வட்டார மொழி மக்கள் மெங்ஙௌபி என அழைக்கின்றனர். மணிப்பூரில் நடந்த வன்முறைகளுக்கும் மற்றும் பிற வடகிழக்குப் பகுதிகளில் அதன் விளைவுகளுக்கும் காரணமான ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம், 1958ஐ [ASFPA] இந்திய அரசாங்கம் மீளப் பெறவேண்டும் என்று கூறி 2000ஆம் ஆண்டு நவம்பர் 2 அன்றிலிருந்து இவர் உண்ணாநிலைப் போராட்டம் இருந்துவந்தார்.

·          இது 500 வாரங்களுக்கும் மேல் தொடர்ந்து வருகிறது. இதுவே உலகின் நீண்ட உண்ணாப் போராட்டமாகும்.மேலும் படிக்க

 

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

·         ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் (Albert Einstein, மார்ச் 14, 1879 - ஏப்ரல் 18, 1955) குறிப்பிடத்தக்க பயன்பாட்டுக் கணிதத் திறமைகள் கொண்ட, ஒரு கோட்பாட்டு இயற்பியல் அறிஞர் ஆவார்.

·         இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான அறிவியலாளராகப் பொதுவாகக் கருதப்படுகிறார். இவர் புகழ்பெற்ற சார்புக் கோட்பாட்டை முன்வைத்ததுடன், குவாண்டம் எந்திரவியல், புள்ளியியற் எந்திரவியல் (statistical mechanics) மற்றும் அண்டவியல் ஆகிய துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார்.

·         ஒளி மின் விளைவைக் கண்டுபிடித்து விளக்கியமைக்காகவும், கோட்பாட்டு இயற்பியலில் (Theoretical physics) அவர் செய்த சேவைக்காகவும், 1921ல் இவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.மேலும் படிக்க

பை நாள்

·         பை நாள் மற்றும் பை அண்ணளவு நாள் என்பன π என்னும் புகழ்பெற்ற கணித மாறிலியைக் கொண்டாடும் நாளாகும். ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 14ம் நாள் பை நாளாக கொள்ளப்படுகின்றது. அமெரிக்க நாட்காட்டியின் படி 3/14 என்பது மார்ச் 14 ஐக் குறிக்கும். இந்த எண், அதாவது 3.14 என்பது அண்ணளவாக π  ஐயும் குறிக்கும். இது மார்ச் 14 1:59:26 என்ற குறிப்பிட்ட நேரத்திலும் கொண்டாடப்படுகிறது. (π = 3.1415926).

·         பை அண்ணளவு நாள் என்பது பல்வேறு நாட்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுவாக இது ஐரோப்பிய நாட்கணக்குகளில் ஜூலை 22 இல் ( π ) யின் பரவலாக அறிந்த அண்ணளவு 22/ 7. இது கொண்டாடப்பட்டு வருகின்றது. அல்பேர்ட் ஐன்ஸ்டீனின் பிறந்த நாளும் மார்ச் 14 இல் வருவது குறிப்பிடத்தக்கது.

·         π  நாள் முதன்முறையாக 1988இல் கலிபோர்னியாவில் உள்ள அறிவியல் நுட்பசாலையான எக்ஸ்புளோடோறியத்தில் கொண்டாடப்பட்டது. அந்நாளில் நுட்பசாலையைச் சுற்றி அலுவலர்களினதும் பொதுமக்களினதும் அணிவகுப்புடன் கொண்டாடப்பட்டது. அணிவகுப்பின் முடிவில் பை (Pye) எனப்படும் உணவுப்பண்டம் அனைவருக்கும் பரிமாறப்பட்டு அந்நாள் கொண்டாடப்பட்டது. லாறி ஷோ (Larry Shaw) என்பவர் இந்நாளை அறிமுகப்படுத்தினார். மேலும் படிக்க

செய்திகள் 

வங்கிக் கிளை, ஏடிஎம்களில் பணம் எடுக்க கட்டுப்பாடு நீக்கம் - தி இந்து

வங்கி அதிகாரிகளை ஏன் கைது செய்யவில்லை ரூ.114 கோடி ...தினகரன்

வங்கிகளில் ரூ.17750 கோடி மோசடி; எஸ்.பி.ஐ., வங்கி முதலிடம் -  தினமலர்

5 மாநில தேர்தல் முடிவு எதிரொலி : பங்கு சந்தைகள் புதிய உயர்வு ...- தினகரன்

 மீனவர் உடல் 7 நாட்களுக்கு பின் அடக்கம் : போராட்டம் ஒத்திவைப்பு - தினமலர்

டெஸ்ட் தரவரிசை: கோலிக்கு பின்னடைவு -  தினமணி

பிஎன்பி பரிபாஸ் ஓபன் டென்னிஸ்: 3-வது சுற்றில் ஜோகோவிச் - தி இந்து

நம்மை சுற்றி

 

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

 

18.3.2017

&

19.3.2017

India International Centre.

SANGAMAM 2017

Festival of Classic Music

SUNAAD

For Details

 

19.3.2017

11.30 AM to

3.00 PM

Ganapathi Pooja Park,  Pocket-6, sector 2, Rohini

Collection camp

Rohini Mahila Sewa samiti

Camp Co-ordination:Goonj

9868793733

7838223267

For Details

 

20.3.2017

to

26.3.2017

7.30 AM to 10.00 PM

Noida Shankar Mutt,  Sector 42, Noida.

SRI SAHASRA CHANDI MAHA YAGNAM consisting of Sri Durga Sapthasathi Japam & Homam

Sri Vishnu Sahasranama Satsangam

Sector 34, Noida

V Badrinarayanan                   9312590372

Suresh Sitaraman                    9811933299

K Rajasekar                             9868102051

V Jayaraman                           9871526767

S Muralidharan                       9811008805

 

8.4.2016

&9.4.2016

6.00 AM onwards

MAA AADHYA SAKTHI DHAM MANDIR,

Block E-5, [ Opp. District Park ]

Sector – 16, Rohini, Delhi - 89

16th ANNIVERSARY CELEBRATIONS Sri Radha Kalyana Mahotsavam

 

 

 

 

ROHINI SRI VISHNU SAHASRANAMA SATSANGAM

 

sahasranamam1516@gmail.com

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

No comments:

Post a Comment