24-08-2016 "News Letter" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | ||||||
| அவ்வை தமிழ்ச் சங்கம், ஆவணி –8(புதன்), திருவள்ளுவராண்டு 2047, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | |||||
ஐந்திணை எழுபது : கடவுள் வாழ்த்து | ||||||
எண்ணும் பொருளினிதே யெல்லா முடித்தெமக்கு நண்ணுங் கலையனைத்து நல்குமால் - கண்ணுதலின் முண்டத்தா னண்டத்தான் மூலத்தா னாலஞ்சேர் கண்டத்தா னீன்ற களிறு. விளக்கம்: கண் நுதலின் - கண்ணை நெற்றியிலுடைய, முண்டத்தான் - தலையினையுடையவனும்., அண்டத்தான் - இவ்வுலகமாகிய அண்டத்தினைத் தனது வடிவமாகக் கொண்டவனும், மூலத்தான் - எல்லாவற்றிற்கும் முதற் காரணனாய் உள்ளவனும், ஆலம் சேர் - ஆலகால விஷமாகிய நஞ்சு பொருந்தியிருக்கும்படியான, கண்டத்தான் - கழுத்தையுடையவனுமான சிவபெருமான், ஈன்ற - பெற்றெடுத்த, களிறு - யானைமுகக் கடவுள், எண்ணும் - யாம் விரும்பும், பொருள் - பொருள்கள், எல்லாம் - எல்லாவற்றையும், இனிது - நன்றாக, முடித்து - முடிவுபெறச் செய்து, எமக்கு - எங்களுக்கு, நண்ணும் - (இவ்வுலகத்தே) பொருந்தியுள்ள, கலை - கல்விப்பொருள்கள், அனைத்தும் - எல்லாவற்றையும், நல்கும் - கொடுக்கும். | ||||||
தெரியமா உங்கள்ளுக்கு? | ||||||
இன்று: பாலாசாகிப் கங்காதர் கெர் (ஆகத்து 24, 1888 - மார்ச் 8, 1957 ) · பாலாசாகிப் கங்காதர் கெர் (Balasaheb Gangadhar Kher, பரவலாக B. G. Kher) இந்தியாவின் தற்போதைய மகாராட்டிரம் மற்றும் குசராத்தை உள்ளடக்கிய பம்பாய் மாகாணத்தின் முதல் பிரதம மந்திரியாக (அக்காலத்தில் மாநில முதல்வர்கள் அவ்வாறு அழைக்கப்பட்டனர்) இருந்தவர். · 1954ஆம் ஆண்டு இந்திய அரசு அவருக்கு பத்ம விபூசண் விருது வழங்கியது. வழக்கறிஞராகவும் சமூகசேவகராகவும் அரசியல்வாதியாகவும் விளங்கிய கெர் பழகுவதற்கு இனியவர் என்று பெயர் பெற்றவர். மேலும் படிக்க | ||||||
செய்திகள் | ||||||
காஷ்மீரில் துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் காயம்: உள்துறை அமைச்சர் ராஜ்நாத் காஷ்மீர் பயணம்- தி இந்து 4 ஆண்டு ஒருங்கிணைந்த பி.எட். படிப்பு: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு– தினமணி உலகின் பணக்கார நாடுகள் பட்டியலில் 7-வது இடத்தில் இந்தியா! - நியூஸ்7 தமிழ் தூய்மை இந்தியா திட்டத்தின் கழிப்பறைகளை யார் சுத்தம் செய்வார்கள்?- பெஸ்வாடா வில்சன் கேள்வி- தி இந்து லஞ்சம், சொத்துக்குவிப்பு வழக்குகளில் பிடிவாரண்டு; கோவை ... - தினத் தந்தி தடகள வீராங்கனை சுதா சிங் மருத்துவமனையில் அனுமதி: பன்றி ... - தினமணி | ||||||
பறவை நோக்குதலில் (Bird Watching 2) உங்களுக்கு ஆர்வம் இருக்கிறதா? | ||||||
கடந்த முறை சிறப்பாக நடைபெற்ற பறவை நோக்குதல் (Bird Watching) வருகிற 04 செப்டம்பர் (04-09-2016) ஞாயிறு அன்று " NCR-NEW DELHI-வைஷாலி வாசகர் வட்டம் வைசாலி திரு.வி.சுப்ரமண்யம், ஆராய்ச்சியாளர்-பறவை நோக்குதல் (Bird Watching & Research), மற்றும் புது தில்லி அதன் சுற்றுப்புற வட்டத்தின் "ஊர்ப்புற பறவைகள் கணக்கெடுப்பு குழு உறூப்பினர்"அவர்களின் தலைமை வழிகாட்டுதலின்படி, பறவைகள் நோக்குதல் மற்றும் கணக்கெடுப்பது பற்றிய இலவச விழிப்புணர்வு பயிற்சியில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்களில், தேர்ந்தெடுக்கப்படும் 25 நபர் கொண்ட ஒரு குழு மட்டும் 04-09-2016 அன்று புதுதில்லியின் "தில்லி-ஒக்லா பறவைகள் சரணாலயத்தில்- DELHI-'OKHLA' BIRDS SANCTUARY" விடியற்காலை 6 மணியிலிருந்து மதியம் -11 மணி வரை சிறப்பு பயிற்சியளிக்க இருப்பதால், தங்களது விருப்பத்தை கீழ் கண்ட தொலைப்பேசியின் வழியிலோ அல்லது மின் அஞ்சலிலோ 30-08-2016 முன்பாக தொடர்புகொண்டு தெரியப்படுத்தவேண்டும்.
பயிற்சி விதிமுறைகள்:- 1. பறவை நோக்குதலில் "அமைதி காப்பது" மற்றும் "பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுவது மிக மிக அவசியம் என்பதால் " மிக அதிக தூரம் கரடு முரடான காட்டுப் பாதையில் நடக்கவேண்டியிருப்பதால்" பல பாதுகாப்பு அம்சங்களை அவசியம் தெரிந்துகொண்டு அவற்றை பின்பற்றவேண்டும் என்பதால், முதல் 15நிமிடம் பாதுகாப்பு விதிமுறை பற்றிய பயிற்சியளிக்கப்படும்.
2. பயிற்சியில் கலந்துகொள்பவர்கள், உடல் முழுதும் பாதுகாப்பாக மூடியிருக்கும் வகையில், முழு கை சட்டையையும், முழு கால் மூடிய நிலையில் அணியும் உடையை அணியவேண்டும். 3. அணியும் உடைகள் மெல்லிய வெளிர் நிறத்திலான வண்ண உடைகளை அணியவேண்டும், (பறவைகள் பயந்து விரட்டும் அடர்ந்த நிற உடைகளை தவிர்க்கவேண்டும். மேலும் வெண்மை நிற உடையையும் தவிர்க்கவும்). 4. கரடு முரடான வனப்பகுதி என்பதால் கால்களில், பாதம் முழுதும் மூடும் வகையிலான காலணி அணியவேண்டும் (அதாவது பயிற்சி காலணி அல்லது விளையாட்டுக் காலணி (Can wash-sports-shoes) அணியவேண்டும்) 5. மூன்று மணி நேரம் வனப்பகுதியில் சுற்றுவதர்க்குத் தேவையான தண்ணீர் மற்றும் எளிய சக்திதரும் உணவுப்பொருள்களை கைப்பையில் உடன் எடுத்துவரவேண்டும். 6. விருப்பமுள்ளவர்கள் தொலைநோக்கி மற்றும் புகைப்பட கருவிகளை எடுத்துவரலாம். 7. சொந்த வாகனங்களில் வருபவர்கள், பறவைகள் சரணாலயத்தின் நுழைவாயிலில் வாகன நுழைவு சீட்டு மற்றும் நிறுத்துமிட கட்டணம் செலுத்தி, அதற்க்கான சீட்டை பெற்றுக்கொள்வது அவசியம். 8. சரணாலயத்தின் நுழைவாயிலுக்கு 6.15am நிமிடங்களுக்குப் பிறகு வருபவர்கள் பயிற்சியில் இடம்பெரமுடியாது என்பதை கருத்தில் கொள்ளவும்.
விருப்பமுள்ளவர்கள் தொடர்புகொள்ளவேண்டிய தொலைபேசி:- "கிழக்கு தில்லியின் எல்லைப்பகுதியில் அமைந்திருக்கும்":- 1. வைஷாலி மற்றும் வசுந்தரா பகுதியில் வசிப்பவர்கள் :- திரு.கோபால கிருஷ்ணன்(Mr. Gopalkrishnan) +91-9717236514. மற்றும் திரு வி. சுப்பிரமணியம்(Mr. V.Subramanyam) +91-9868216038. என்கிற தொலைபேசி என்னில் தொடர்புகொள்ளவேண்டும். 2. இந்திராபுரம் மற்றும் நொய்டா பகுதியில் வசிப்பவர்கள்:- நொய்டா(N.O.I.D.A) பகுதியில் வசிப்பவர்கள்:- அவ்வை தமிழ் சங்கம்:- மருத்துவர் ஆர். வளவன்(Dr.R.Valavan) +91-9312309186. என்கிற தொலைபேசி என்னில் தொடர்புகொள்ளவேண்டும். 3.தொடர்புகொள்ளவேண்டிய மின் அஞ்சல் /E_mail:- VAISHALIREADERSCIRCLE@GMAIL.COM பறவை நோக்குதலின் பயன்கள்:- · பறவைகளைப் பாதுகாப்பதற்கான ஆராய்ச்சிகள், மற்றும் திட்டங்களில், பறவைகள் கணக்கெடுப்பு சேவைப் பனி மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. · சர்வதேச அளவிலான இந்தக் கணக்கெடுப்புக்கு ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு (கிரேட் பேக்யார்டு பேர்டு கவுன்ட்) என்று பெயர். ஃபிப்ரவரி 14 முதல் 17 வரை (வெள்ளி முதல் திங்கள் வரை) இந்தக் கணக்கெடுப்பு நடைபெறுகிறது. · இந்தக் கணக்கெடுப்பில் ஈடுபடுவதற்கு நீங்கள் பெரிதாக மெனக்கெட வேண்டியது இல்லை. பறவை நோக்குதலில் ஆர்வம் இருந்தால் போதும். உங்கள் வீட்டு மாடி, புழக்கடை, முன்புறம் உள்ள தோட்டம், வீட்டுக்கு அருகில் உள்ள பூங்கா, ஏரி, நீர்நிலை போன்ற இயற்கை செழிக்கும் ஏதாவது ஒரு இடம் போதும். · குறைந்தபட்சம் 15 நிமிடங்கள், அதிகபட்சம் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பறவை களைக் கண்காணித்து, இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். நீங்கள் பார்த்த பறவை வகைகள், அவற்றின் எண்ணிக்கை போன்ற வற்றைக் குறித்துக்கொள்வது அவசியம். எல்லாப் பறவைகளையும் அடையாளம் காண முடியாவிட்டாலும் பரவாயில்லை, உங்களால் கண்டுபிடிக்க முடிந்த பறவை வகைகளைப் பதிவு செய்தால் போதும். · இந்தக் கணக்கெடுப்பு பல்வேறு முக்கியக் கேள்விகளுக்கு விடையளிக்க உதவும். இந்தியாவில் உள்ள பறவைகளின் நிலைமையை இந்தக் கணக்கெடுப்பு மூலம் புரிந்துகொள்ளலாம். வாழிட மாறுதல்களால் பறவைகள் எப்படிப் பாதிக்கப்படுகின்றன, தட்பவெப்பநிலை மாற்றங்கள், பறவைகளின் எண்ணிக்கையும் பரவலும் மாறுகின்றனவா என்பதையெல்லாம் தெரிந்துகொள்ளலாம். · இந்தத் திட்டம் மூலம் விஞ்ஞானிகளுக்கான ஆராய்ச்சித் தகவல்களை ஆர்வலர்களும் திரட்டித் தர முடிகிறது. இந்தக் கணக்கெடுப்பு உலகின் மிகப் பெரிய மக்கள் அறிவியல் திட்டங்களில் ஒன்றாக மதிக்கப்படுகிறது. · கடந்த ஆண்டு இந்தக் கணக்கெடுப்பில் 141 நாடுகள் பங்கேற்றன. 5.5 கோடி பறவை நோக்கர்கள் 5,000+ பறவை வகைகளைப் பதிவு செய்திருந்தார்கள். இந்தியாவில் 600க்கும் மேற்பட்ட பறவைகள் பற்றி 400க்கும் மேற்பட்ட பட்டியல்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. இதில் 89 பட்டியல்கள் தமிழகத்தைச் சேர்ந்தவை. அது நாட்டிலேயே இரண்டாவது அதிகப் பதிவு என்பது குறிப்பிடத்தக்கது. · உங்கள் பறவை பற்றிய பதிவுகளை www.BirdCount.org இல் பதிவு செய்ய வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு இந்த இணையப் பக்கத்தைப் பாருங்கள்: gbbc.birdcount.org. மேலும் அறிய தொடர்பு கொள்ளவும்: கோபாலகிருஷ்ணன். 91-9717236514 "வைஷாலி வாசகர் வட்டம்"(http://vaishalireaderscircle.blogspot.in/) "சுட்டீஸ்- குல்கந்து" வலைப்பதிவர் இதழ்.. http://gulkanthu.blogspot.in/ | ||||||
நம்மை சுற்றி | ||||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact | ||
29.08.16 to 3.09.16 | Sree Vinayaka Mandir Committe, Sarojini Nagar, New Delhi | Sree Vinayaka Chaturthi Brahmotsava Programme | Sree Vinayaka Mandir Committe | |||
25.08.16
| Chinmaya mission sector 37 Noida. | 9 pm to 10.15 pm Bhajans by Swaranjali Group. 10.30 pm to 11.45 pm – Vishnu Sahasranama Puja 11.45 pm to 12 midnight Nama Sankeertan 12 midnight Shri Krishna Janma Celebrations followed by Prasad. |
|
| ||
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
|
Tuesday, August 23, 2016
24-08-2016 “News Letter” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment