22-08-2016 "News Letter" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | ||||||
| அவ்வை தமிழ்ச் சங்கம், ஆவணி –6(திங்கள்), திருவள்ளுவராண்டு 2047, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | |||||
ஐந்திணை ஐம்பது: 5 நெய்தல் 50 | ||||||
அல்லகுறிப்பட்டுப் பெயர்ந்தமை அறிய, தலைமகன் சிறைப்புறத்தானாக,தோழி சொல்லியது அணி கடல் தண் சேர்ப்பன் தேர்ப் பரிமாப் பூண்ட மணி அரவம் என்று, எழுந்து போந்தேன்; கனி விரும்பும் புள் அரவம் கேட்டுப் பெயர்ந்தேன், - ஒளியிழாய்! - உள் உருகு நெஞ்சினேன் ஆய். பதவுரை நிலத்தைச் சூழ்ந்த கடற்றண்சேர்ப்பன் தேர்பூண்ட பரிமா அணிந்த மணியரவம் என்று கருதிச் சென்றேன்; கனிகளை விரும்புகின்ற புள்ளரவங்களைக் கேட்டு மணியரவம் அன்று என்று போந்தேன்; ஒளியிழாய்! உள்ளுருகும் நெஞ்சினேனாகி. விளக்கம் பரி – குதிரை; அரவம் – ஒலி; "ஒளியோடு கூடிய அணிகலன்களை அணிந்த பெண்ணே! அழகிய கடலோடு கூடிய குளிர்ந்த நீர்த்துறையையுடைய தலைவனது தேரில் பூட்டப்பட்ட குதிரைகள் அணிந்திருக்கும் மணியோசை கேட்கின்றது என எண்ணி வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தேன். ஆனால் பழங்களை விரும்பி உண்ண வந்த பறவைகளின் ஒலியைக் கேட்டுத் தலைவனின் தேர் மணியோசை அன்று என்று வருந்தி அவ்வருத்தமுடைய நெஞ்சத்தோடு நான் திரும்பினேன்" என்று தோழி தலைவியிடம் கூறினாள். | ||||||
தெரியமா உங்கள்ளுக்கு? | ||||||
இன்று: சென்னை தினம் · சென்னை தினம் என்பது தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை தோற்றுவிக்கப்பட்டதாகக் கருதப்படும் கி.பி. 1639, ஆகஸ்ட் 22 ஆம் நாளை நினைவூட்டும் வகையில் அமைக்கப்பெற்ற ஒரு சிறப்பு நாள் ஆகும் இந்நாள் 2004 ஆம் ஆண்டில் இருந்து நினைவு கூரப்பட்டு வருகிறது.
· கிழக்கு இந்திய கம்பெனி தாமல் வெங்கடப்பா நாயக்கரிடம் இருந்து ஒரு சிறு நிலத்தை வாங்கி சென்னை நகரத்தை உருவாக்க காரணமாக இருந்த நாளை கொண்டாடுவதே சென்னை தினமாகும். வந்தவாசியை ஆண்ட தாமல் வெங்கடப்பா நாயக்கர், பூந்தமல்லியை ஆண்ட தாமல் அய்யப்ப நாயக்கர் ஆகிய சகோதரர்களின் தந்தை சென்னப்ப நாயக்கர் பெயரால் சென்னை அழைக்கப்படுகிறது.
· பத்திரிக்கையாளர்களான சசி நாயர், மயிலாப்பூர் டைம்ஸின் ஆசிரியரான வின்சண்ட் டி சொஸா, மெட்ராஸ் மியூசிங்ஸின் ஆசிரியரான முத்தையா ஆகிய மூவரும் இணைந்து உருவாக்கியதே இந்த சென்னை தினம்.
· முதன் முதலில் ஒரு சில கருப்பு வெள்ளைப் படங்களுடன் 2004ஆம் ஆண்டு தொடங்கிய இந்தக் கொண்டாட்டம் இன்று வளர்ச்சியடைந்து புகைப்படக் கண்காட்சி, உணவுத் திருவிழா, மாரத்தான் ஓட்டம் என பல பரிமாணங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் படிக்க | ||||||
செய்திகள் | ||||||
ஸ்டாலின் உள்ளிட்ட 60 திமுக எம்.எல்.ஏக்கள் மீது வழக்குப் பதிவு- தி இந்து காஷ்மீர்: வன்முறையாளர்களுடன் சமரசம் இல்லை: அருண் ஜேட்லி - தினமணி மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் நேரில் ...– தினமணி நிறைவடைந்தது ரியோ ஒலிம்பிக் திருவிழா: நிறைவு விழாவில் ...- தினத் தந்தி ஒத்துழைப்பு தராவிட்டால் புதுவையை விட்டு வெளியேறுவேன்: கிரண்பேடி - தி இந்து ஆடவர் 5,000 மீ. ஓட்டம்: தங்கத்தை தக்கவைத்தார் மோ ஃபாரா - தினமணி | ||||||
நம்மை சுற்றி | ||||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact | ||
29.08.16 to 3.09.16 | Sree Vinayaka Mandir Committe, Sarojini Nagar, New Delhi | Sree Vinayaka Chaturthi Brahmotsava Programme | Sree Vinayaka Mandir Committe | |||
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
|
Sunday, August 21, 2016
22-08-2016 “News Letter” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment