15-12-2016 "News Letter" from Avvai Tamil Sangam Is this mail not displaying correctly? View it in your browser | ||||||
| அவ்வை தமிழ்ச் சங்கம், கார்த்திகை – 30 (வியாழன்), திருவள்ளுவராண்டு 2047, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com Blogspot:http://dinam-oru-thirikadukam.blogspot.in/ Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | |||||
திரிகடுகம் பாடல் -3 | ||||||
கல்லார்க்கு இன்னா ஒழுகலும், காழ்க் கொண்ட இல்லாளைக் கோலால் புடைத்தலும், இல்லம் சிறியாரைக் கொண்டு புகலும், - இம் மூன்றும் அறியாமையான் வரும் கேடு. விளக்கம் கற்றறியாதவருடன் நட்பாய் இருப்பதும், கற்புடை மனைவியை அடித்தலும், சிற்றறிவினரை தம் வீட்டுள் சேர்ப்பதும் அறியாமையினால் விளைகின்ற கேடுகளாகும். பொருள் கல்லார்க்கு - கற்றறியாதவர்க்கு, இனன் ஆய் - உறவினனாகி, ஒழுகலும் - நடத்தலும், காழ் கொண்ட - மனவுறுதிகொண்ட, இல்லாளை - மனைவியை, கோலால் புடைத்தலும் - கோலினால் அடித்தலும், இல்லம் - தம் வீட்டுள், சிறியாரை - சிற்றறிவினரை, கொண்டு - உடன் கொண்டு, புகலும் - புகுதலும், இம் மூன்றும் - ஆகியஇம் மூன்று செயல்களும், அறியாமையான் - தன் அறியாமையினாலே, வரும் கேடு - விளைகின்ற கேடுகளாம்;. | ||||||
தெரியமா உங்களுக்கு !.... | ||||||
பன்னாட்டுத் தேயிலை நாள் · பன்னாட்டுத் தேயிலை நாள் (International Tea Day) 2005 ஆம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் டிசம்பர் 15 ஆம் நாள் தேயிலை உற்பத்தி செய்யப்படும் வங்காளதேசம், இலங்கை, நேபாளம், வியட்நாம், இந்தோனேசியா, கென்யா, மலாவி, மலேசியா, உகாண்டா, இந்தியா, மற்றும் தன்சானியா உட்படப் பல நாடுகளில் நினைவு கூரப்பட்டு வருகிறது. · தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், தேயிலை உற்பத்தி செய்வோர், மற்றும் தேயிலையைப் பயன்படுத்துபவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அரசாங்கக்களுக்கும், குடிமக்களுக்கும் கொண்டு செல்வதே இந்நாளின் முக்கிய நோக்கம் ஆகும். முதலாவது பன்னாட்டுத் தேயிலை நாள் 2005 டிசம்பர் 15 இல் புது தில்லி நடைபெற்றது. இரண்டாவது பன்னாட்டு நாள் 2006 இடிசம்பர் 15 இல் இலங்கையில் கண்டி நகரில் நடைபெற்றது. · பன்னாட்டுத் தேயிலை நாள் கொண்டாட்டங்கள் ஊடாக நடைபெறும் பன்னாட்டு மாநாடுகள் தேயிலைத் தொழிற்சங்க இயக்கங்கள் முன்னெடுக்கின்றன.. மேலும் படிக்க சோ. ந. கந்தசாமி · சோ. ந. கந்தசாமி (பிறப்பு: திசம்பர் 15, 1936) சிறந்த தமிழறிஞர். தமிழ், ஆங்கிலம், வடமொழி, இந்தி உள்ளிட்ட பன்மொழிகளில் புலமை பெற்றவர். · இவர் 2013-2014 ஆம் ஆண்டுக்கான இந்தியக் குடியரசுத்தலைவர் வழங்கும் தொல்காப்பியர் விருதை வென்றவர். · இவர்தம் தமிழ்ப்பணியறிந்த பல்வேறு நிறுவனங்கள் இவருக்குப் பல சிறப்புகளைச் செய்துள்ளன. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு ஆராய்ச்சிப் பரிசுகள் இவருக்குக் கிடைத்துள்ளன. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வெள்ளிவிழாக் கவிதைக்கு முதற்பரிசாகத் தங்கப் பதக்கம் பெற்றவர். · திருக்குறள் கூறும் உறுதிப்பொருள்கள் என்னும் இவரது நூலுக்கும், இந்தியத் தத்துவக்களஞ்சியம் என்ற நூலுக்கும் தமிழக அரசு சிறந்த நூலுக்கான பரிசு வழங்கிச் சிறப்பித்துள்ளது. மேலும் படிக்க | ||||||
செய்திகள் | ||||||
'வார்தா' புயல் நிவாரணப் பணிகளுக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு: முதல்வர் அறிவிப்பு- தி இந்து தமிழகத்துக்கு நீர் திறக்க இயலாது: உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு ...தினமணி சேகர் ரெட்டி வழக்கில் திடீர் திருப்பம் : வங்கி அதிகாரிகள் ...- தினமலர் ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கைக்கு பின்னர் 36 இடங்களில் நடந்த ...- தினத் தந்தி பணமற்ற பொருளாதாரம்: பிரதமரின் மாறும் பிரச்சார உத்தியும் பின்னணியும் - தி இந்து முந்தைய ஆட்சிகளில் பாதுகாப்பு ஒப்பந்தங்களில் ஊழல்: ராஜ்நாத் ...- தினமணி நைஜீரியாவில் 80 ஆயிரம் குழந்தைகள் பட்டினியால் இறக்கும் ...- தினமணி உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்: பி.வி.சிந்து போராடி வெற்றி- தினத் தந்தி ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் மோதும் பகல்-இரவு டெஸ்ட் ...- தினத் தந்தி | ||||||
வீடு வாடகைக்கு /வாங்க / விற்க | ||||||
1BHK - DDA Flat in 1st floor, sector 14 Dwarka available for Sale. Immediate Possession and Full White Transaction. - No Hassle of cash handling. For further details contact: K.P. Sai, Mobile - 08056039285 , kpsai2311@gmail.com
A Builder's Flat ( 2 bed room, dining-drawimg room, kitchen, 2 balconies, 2 bathrooms(one attached) ). 2nd Floor, Shaktikhand - III, Indirapuram. (Walking distance from JKG international school and Suvarana Jayanthy park) is available for rent. Please contact for more details – Manikandan - +919871896072 | ||||||
நம்மை சுற்றி | ||||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact |
| |
17.12.16 10.00am onwards
| Ganesh Temple, Keshav Puram, Delhi | Ayyappa Bhajans by Hamsadhwani Bhajana Group, Vasundhara Enclave, Delhi-96 | Ganesh Temple Management | 8826655855 R.K. Vasan |
| |
18.12.16 6.30 PM onwards | Sriniketan Apartments, Vasundhara Enclave, East Delhi Opp. Agrasen College | Ayyappa Bhajans by Hamsadhwani Bhajana Group, Vasundhara Enclave, Delhi-96 | Sriniketan Apartments, Management | 8826655855 R.K. Vasan |
| |
18.12.16 6.30 PM onwards | Shri Ram Mandir, Dwarka, New Delhi | Sarva Devarpanam | Sri Ram Mandir Dwarka |
| ||
18.12.16 11.00 AM to 3.00PM | Outside Modern Apartment, near Manav Chowk, Sec-15, Rohini | Collection Camp ( Wollens, blankets, quilts & shawls) | Rohini Mahila Sewa Samiti | SMT. SHANTI KRISHNAN, : 9868793733 & SMT.UMA GUPTA,: 9312255831 |
| |
24.12.16 7.00 AM onwards | Sri Ram Residency basement hall (adjacent to Shanthi Gopal Hospital), Indirapuram, Ghaziabad | 15th Annual Day function
| Sri Vishnu Sahasranama satsangam | K.Srinivasan 09810169772. |
| |
25.12.16 6.30 PM onwards
| Ganesh Temple, Mayur Vihar, Phase 3, East Delhi | Ayyappa Bhajans by Hamsadhwani Bhajana Group, Vasundhara Enclave, Delhi-96 | Ganesh Temple Management | 8826655855 R.K. Vasan |
| |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
|
---
You received this message because you are subscribed to the Google Groups "Dinamorukural" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to dinamorukural+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
No comments:
Post a Comment