Sunday, May 29, 2016

30-5-2016 “News Letter ” from Avvai Tamil Sangam



 

30-5-2016 "News Letter " from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

 

 

 

 

 

அவ்வை தமிழ்ச் சங்கம்,

வைகாசி -17(திங்கள்), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Blogs: http://naalorukalavalinarpathu.blogspot.in/

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

நாளை மிக முக்கியமான தினம்!!!

ஐந்திணை ஐம்பது- முன்னுரை

 இந்நூல் முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்ற ஐந்திணைக்கும் பத்துப் பாடல்களைப்(செய்யுள்)  பெற்றுள்ளமையால் 'ஐந்திணை ஐம்பது' எனப் பெயர் பெற்றது

சிறப்புப் பாயிரம்

பண்பு உள்ளி நின்ற பெரியார் பயன் தெரிய,
வண் புள்ளி மாறன் பொறையன் புணர்த்து யாத்த
ஐந்திணை ஐம்பதும் ஆர்வத்தின் ஓதாதார்,
செந்தமிழ் சேராதவர்

பதவுரை  :-

வண்மை - மெய்யம்மையான, புள்ளி - இலக்கப் புள்ளி யிடுவதாகிய கணக்கிற் றேர்ச்சியுள்ள, மாறன் பொறையன் - மாறன் பொறையன் என்ற சிறப்புப்பெயர் பெற்ற புலவர் பெருமான், பண்பு - மக்கட் பண்புகளை, உள்ளி நின்ற - ஆராய்ந்தறிய அவாவிக் கொண்டிருக்கும் படியான, பெரியார் - உயர்ந்தோராகிய உலகமக்கள், பயன் - நூற்பயனாகிய அகப் பொருள்களின் நுட்பங்களை, தெரிய - நன்குணரும்படியாக, புணர்த்து - அகப்பொருட்டுறைகள் பலவற்றை சேர்த்து, யாத்த - செய்யுள் வடிவமாக இயற்றிய, ஐந்திணை ஐம்பதும் - முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்ற ஐந்தொழுக்கங்களினையும் தம்முள் அமைத்துக் கொண்டுள்ள ஐம்பது செய்யுட்களையும், ஆர்வத்தின் - விருப்பத்துடன், ஓதாதார் - படித்து அறியாத மக்கள், செந்தமிழ் - செவ்வையான தமிழ் மொழியின் பெரும் பயனை, சேராதவர்

விரிவுரை.

 "ஆயிரமுகத்தான் அகன்றதாயினும், பாயிரமில்லது பனுவலன்றே," என்றாராகலின், முதற்கட் பாயிரங் கூறப்பட்டதென்க. "மாறன் பொறையன்," என்றதனால் ஆக்கியோன் பெயரும், "ஐந்திணை," என்றதனால் அகப்பொருணூலாகிய வழியும், அகமாகியநுதலியபொருளும், "செந்தமிழ்" என்றதனால் நூல்வழங்கவேண்டிய தமிழ்நாட்டெல்லையும், ''ஐந்திணையைம்பது'' என்றதனால் நூற்பெயரும், ''யாத்த'' என்றதனால் செய்யுள் வடிவமாகிய நூல் யாப்பும், ''பண்புள்ளிநின்ற பெரியார்,'' என்றதனால் கேட்போரும், ''பயன்,'' என்றதனால் நூற்பயனும் பெறப்பட்டமை காண்க. என்னை ''ஆக்கியோன் பெயரே வழியே யெல்லை, நூற் பெயர் யாப்பே நுதலிய பொருளே, கேட்போர் பயனோடாயெண் பொருளும், வாய்ப்பக் காட்டல் பாயிரத்தியல்பே,'' என்றா ராகலி னென்க. புள்ளியிடுதல் - ஐந்தொகை முதலிய பெருங்கணக்குகளிட்டுப் பார்த்தல். ''மாறன் பொறையன்'' என்பது இந்நூலாசிரியருக்குப் பாண்டிமன்னனா லளிக்கப்பட்ட பட்டப் பெயராம். ''வண்புள்ளி'' என்ற அடைமொழிகளால் இவர் பாண்டி நாட்டு அரசியலிற் பண வரவு செலவுக்குரிய பெருநிலையொன்றிற் பெரும் பெயர் பெற்ற பெரியாராவரெனக் கருதக் கிடக்கின்றது. புள்ளி - பணத்தொகை. செந்தமிழ் + சேராதவர் = செந்தமிழ் சேராதவர் ; இரண்டன் தொகை யாகலின், இயல்பாயிற்றென்க. புணர்த்து + யாத்த = புணர்த்தியாத்த : யகரம் வரக் குறள் உகரம் இகரமாகத் திரியலாயிற்று. இப் பாயிரம் மற்றச் செய்யுட்களைப் போல், பழைய பொழிப்புரையினைக் கொண்டிருக்கவில்லை.  

தெரியுமா உங்களுக்கு

1913 - முதலாம் பால்க்கன் போர்: லண்டன் உடன்பாடு, 1913 எட்டப்பட்டு போர் முடிவுக்கு வந்தது. அல்பேனியா தனி நாடாகியது.

1942 - இரண்டாம் உலகப் போர்: 1000 பிரித்தானிய போர் விமானங்கள் ஜெர்மனியின் கொலோன் நகரில் 90-நிமிடங்கள் குண்டுமாரி பொழிந்தன.

1966 - முன்னாள் கொங்கோ பிரதமர் எவரீஸ்டே கிம்பா மற்றும் பல அரசியல் தலைவர்கள் பகிரங்கமாகத் தூக்கிலிடப்பட்டார்கள்.

1971 - செவ்வாய்க் கோளின் 70 விழுக்காட்டைப் படம் பிடிப்பதற்காகவும் அதன் வளிமண்டலத்தை ஆராயவும் என மரைனர் 9 விண்ணுக்கு ஏவப்பட்டது.

1972 - இஸ்ரேலின் விமானநிலையத்தில் ஜப்பானிய செம்படையினர் தாக்குதல் மேற்கொண்டதில் 24 பேர் கொல்லப்பட்டனர்.

1981 - வங்காள தேசத்தில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியின் போது அதிபர் சியாவுர் ரகுமான் இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1987 - கோவா தனி மாநிலமாகியது.

1998 - வடக்கு ஆப்கானிஸ்தானில் 6.6 றிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 5,000 பேர் வரை கொல்லப்பட்டனர்.

2003 - எயார் பிரான்சின் கொன்கோர்ட் விமானம் தனது கடைசிப் பயணத்தை ஆரம்பித்தது.

செய்திகள்   

நேதாஜி தொடர்பில் ஆவணம்! மத்திய அரசு வெளியிட்டது---- கூகூல்

அமெரிக்க உயிரியல் பூங்காவில் பயங்கரம்:கூண்டுக்குள் விழுந்த ... தினமணி

700 அகதிகள் கடலில் மூழ்கி பலி --- தி இந்து

டெல்லியை 5 நிமிடத்தில் தாக்க முடியும்: பாகிஸ்தான் அணு விஞ்ஞானி தகவல் ---தி இந்து  

தேசிய விருதுக்கு ஆசிரியர்களை தேர்வு செய்ய கல்வித் துறை உத்தரவு-  தின்மணி

போலி ஓட்டுநர் உரிமம் வைத்திருந்தால் ஓராண்டு சிறை, ரூ.10,000 வரை அபராதம் -- தி இந்து

அடுத்த ஆண்டு முதல் மாநில வாரியாக வானிலை அறிவிப்பு--- தி இந்து

புகையிலை கட்டுப்பாடு விழிப்புணர்வு கருத்தரங்கம்: சென்னையில் நாளை நடக்கிறது--- தி இந்து

வீடு வாடகைக்கு

7 BHK Kothi / Bungalow at NRI City,  Near Pari Chowk Omaxe Mall (Opp. JP Green , 0 KM from proposed Pari Chowk Metro Station) Greater Noida, total 2.5 floors, gated community with  24 X 7 Security,  Gym, Food Court, Children Park, tennis play area, separate badminton open court and Individual Car  Parking, Drinking Water, Five bed room with wooden wardrobe, Modular Kitchen & 2 wooden wardrobe.  lowest maintenance cost in the locality. Interested TO LET it on lease for family, Corporate and Company Lease is preferred. For further details contact Surendra: mobile no.+91-98 99 89 82 69.

நம்மை சுற்றி   ---- கும்பாபிஷேகம் – ஒரு வேண்டுகோள்

அருள்மிகு சக்தி வினாயகர் திருக்கோயில், கேந்திரிய விஹார், செக்டார் 51- . நொய்டா  - வில் வரும் 2016- ஜூலை 10ந்  தேதி  மஹா கும்பாபிஷேகம்  மிக பிரமாண்டளவில் நடக்கவுள்ளது.

ஜூலை 6ந் தேதி  முதல்  விதிமுறைப்படி பூஜைகள் ஆரம்பித்து 10ந் தேதி காலை 10.15 – 11.15  மஹா கும்பாபிஷேகம் நடைபெரும்.

தாங்கள் எப்பொழுதும் போல் ஆதரவு தந்து மஹா கும்பாபிஷேத்தில் பங்கேற்று அருள்மிகு சக்தி வினாயகரின்  ஆசிகளை பெறவேண்டி கேட்டுக்கொள்கிறோம்.

பக்தகோடிகள்  மஹா கும்பாபிஷேகத்திற்க்கு  நிதி வழங்க  கீழ்கண்ட வங்கி கணக்கில் பணம் செலுத்தலாம்

Kendriya Aasthiga Samajam, A/C No.21054324426, Allahabad Bank, Sector 51, NOIDA Branch, IFSC CODE: ALLA0212345.

( Please send SMS to 8826655855  if you have donated for information.)

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 


 

No comments:

Post a Comment