8-8-2017 "News Letter" from Avvai Tamil Sangam Is this mail not displaying correctly? View it in your browser | ||||||
அவ்வை தமிழ்ச் சங்கம் ஆடி 23, (செவ்வாய்), திருவள்ளுவராண்டு 2047, Web: http://www.avvaitamilsangam.org/indexE.html Email: avvaitamilsangam@gmail.com Be a member of ATS| Friend on Facebook | Forward to a Friend | ||||||
அவ்வை தமிழ்ச் சங்கம் வழங்கும் கோடை விழா 2017 | ||||||
இசை, நாட்டியம் & நாடகம் - முப்பெரும் விழா!
நாள்: 27.08.2017, ஞாயிற்றுக்கிழமை மாலை 5 - 8 மணி வரை இடம்: ஸ்ரீ அரபிந்தோ பவன், C-56/36, செக்டர் 62, நொய்டா Google location: https://goo.gl/maps/2E2t4RYU4NL2
மேலும் விவரங்கள் விரைவில்… தொடர்புக்கு: 9312309186, 8826655855, 9811018315 அனுமதி இலவசம்!
குறைந்த இடங்களே இருப்பதால், உடனே முன் பதிவு செய்ய இங்கே சொடுக்குங்கள். இரண்டு நிமிடத்தில் பதியுங்கள்! | ||||||
நூல் அறிமுகம் - "சீதை பேசுகிறேன்" | ||||||
வெங்கட் கிருஷ்ணமாச்சாரி எழுதிய "சீதை பேசுகிறேன்" எனும் நூல் இப்போது விற்பனையில். இந்தியாவில் விலை: ரூ.65.00 + தபால் செலவு ரூ.35.00 . மொத்தம் ரூ. 100.00. ஒவ்வொரு நூலின் விற்பனைத் தொகையிலிருந்தும் ரூ.13.00 அவ்வை தமிழ்ச் சங்கத்திற்கு நன்கொடையாக வழங்கப்படும். நன்னூல் படித்து சங்கத்திற்கும் உதவுங்கள். இந்நூலை வாங்க 9818092191 என்ற எண்ணுக்கு ரூ.100 PAYTM செய்து பின் குறுஞ்செய்தியில் 9818092191 என்ற எண்ணுக்கு உங்கள் முகவரியை அனுப்பவும். | ||||||
திரிகடுகம் பாடல் -98 | ||||||
செந் தீ முதல்வர் அறம் நினைந்து வாழ்தலும், வெஞ் சின வேந்தன் முறை நெறியால் சேர்தலும், பெண்பால் கொழுநன் வழிச் செலவும், - இம் மூன்றும் திங்கள் மும் மாரிக்கு வித்து. விளக்கம் அந்தணர்கள் தமக்குரிய அறத்தை மறவாது வாழ்தலும், அரசன் முறையாக ஆள்வதும், தன் கணவன் குறிப்பின் வழியில் நடத்தலும், மாதம் தோறும் பெய்ய வேண்டிய மழைக்குக் காரணங்களாகும். பொருள் (இ-ள்.) செந்தீ - வேள்விச் செந்தீயை, முதல்வர் - வளர்கின்ற அந்தணர்கள், அறம் - தமக்குரிய அறத்தை, நினைந்து வாழ்தலும் - மறவாது வாழ்தலும்; வெம் சின வேந்தன் - கொடுமையாகிய கோபத்தைக் காட்டுகின்ற அரசன், முறை நெறியில் - முறையாக ஆளும் வழியில்; சேர்தலும் - சேர்ந்து நடத்தலும்; பெண்பால் - பெண்ணுக்கு உரிய குணம் அமைந்தவள், கொழுநன்வழி - தன் கணவனுடைய குறிப்பின் வழியில், செலவும் - நடத்தலும்; இ மூன்றும் - ஆகிய இம் மூன்றும், திங்கள் - மாதந்தோறும் பெய்யவேண்டிய, மும்மாரிக்கு - மூன்று மழைக்கும், வித்து - காரணங்களாம்; (எ-று.)
(க-ரை.) அந்தணர் மறைவழி நடத்தலாலும், அரசன் செங்கோல் நெறி பிறழாததாலும், மனைவி கணவனுக்கு இசைந்து நடப்பதாலும் திங்கள் மும்மாரி பொழிந்து நாடு செழிக்கும் என்பது.
தீக்களில் வேள்வித்தீ சிறந்வதாதலால் வேள்வித்தீயைச் செந்நீ என்றார். செலவு : தொழிற்பெயர், முறை : தானியாகுபெயர். | ||||||
வரலாற்றில் இன்று | ||||||
· 1509 - கிருஷ்ணதேவராயன் விஜயநகரப் பேரரசின் மன்னனாக முடிசூடினான். இவனது ஆட்சிக் காலமே பேரரசின் மிக உயர்ந்த நிலை ஆகக் கருதப்படுகிறது. · 1768 - ஜேம்ஸ் குக் தனது கடற்பயணத்தை பிளைமவுத்தில் இருந்து ஆரம்பித்தான். · 1908 - வில்பர் ரைட் தனது முதலாவது வான்பயணத்தை பிரான்சில் "லெ மான்ஸ்" என்ற இடத்தில் மேற்கொண்டார். · 1942 - இந்திய காங்கிரஸ் பம்பாயில் கூட்டிய மாநாட்டில் வெள்ளையனே வெளியேறு என்னும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. · 1989 - ஓர் இரகசிய இராணுவ விண்வெளித் திட்டத்தை முன்னெடுத்து நாசா கொலம்பியா விண்ணோடத்தை விண்ணுக்கு அனுப்பியது. · 2000 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்பினரின் எச். எல். ஹன்லி என்ற நீர்மூழ்கிக் கப்பல் 136 ஆண்டுகளுக்குப் பின்னர் கடலினுள் இருந்து வெளியே எடுக்கப்பட்டது. · 2007 - நாசா விண்வெளி ஆய்வு மையம் என்டெவர் விண்ணோடத்தை கிறிஸ்டினா மெக்காலீப் என்ற ஆசிரியர் உட்பட ஏழு விண்வெளி வீரர்களுடன் அனைத்துலக விண்வெளி நிலையத்திற்கு கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாகச் செலுத்தியது. | ||||||
செய்திகள் | ||||||
ஏழைகளுக்கான சமையல் எரிவாயு மானியம் தொடரும்: தர்மேந்திர ... - தினமணி நெருக்கடியில் காங்கிரஸ்: ஜெய்ராம் ரமேஷ் - தினமணி தமிழக மீனவர்கள் 32 பேர் கைது; 50 பேர் சிறைபிடிப்பு - தினமலர் நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் 11 லட்சம் பான் கார்டுகள் நீக்கம்... - தி இந்து பிர்லா கோளரங்கத்தில் சிறப்பு ஏற்பாடு சென்னையில் தெரிந்த சந்திரகிரகணம் ... - தினகரன் சேமிப்பு கணக்கு வட்டி குறைப்பு: சமாளிக்க 3 மாற்று வழிகள் - தி இந்து | ||||||
வீடு வாடகைக்கு |
| |||||
2 BHK (2 Bedroom,1 Big Drawing/Dinning Room), 2 Big Varandah, at C Block Sector 19 Noida Contact N K IYER, 9873711601 |
| |||||
நம்மை சுற்றி |
| |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact |
| |
8th August, 2017, Tuesday | Sri Devi Kamakshi Mandir, A-11, Aruna Asaf Ali Marg, New Delhi | 83rd Jayanthi Celebrations of H.H. Sri Sri Jayendra Saraswathi Sankaracharya Swamigal | Sri Devi Kamakshi Mandir, Delhi Kamakoti Kamakshi Meditation & Cultural Centre | 011-26867240, 26520202, 41802507 |
| |
11th August, 2017, Friday | Sri Devi Kamakshi Mandir, A-11, Aruna Asaf Ali Marg, New Delhi | Maha Sankatahara Chaturthi | Sri Devi Kamakshi Mandir, Delhi Kamakoti Kamakshi Meditation & Cultural Centre | 011-26867240, 26520202, 41802507 |
| |
17 - 26 Aug'17 | Arulmigu Varasiddhi Vinayagar Thirukkoil, G-Block Park, Sector 22, Noida | SRI GANESH CHATHURTHI MAHOTSAVAM 2017 | VEDIC PRACHAR SANSTHAN (REGD). | 9711020528 |
| |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
| |||||
No comments:
Post a Comment