24-7-2017 "News Letter" from Avvai Tamil Sangam Is this mail not displaying correctly? View it in your browser | ||||||||||
அவ்வைதமிழ்ச்சங்கம் ஆடி 8, (திங்கள்), திருவள்ளுவராண்டு 2047, Web: http://www.avvaitamilsangam.org/indexE.html Email: avvaitamilsangam@gmail.com Be a member of ATS| Friend on Facebook | Forward to a Friend | ||||||||||
அவ்வை தமிழ்ச் சங்கத்தின் கோடை விழா கொண்டாட்டம்! | ||||||||||
கொண்டாடத் தயாரா?
விவரங்கள் விரைவில்... | ||||||||||
அவ்வை தமிழ்ச் சங்கம் மின்னஞ்சல் சேவை – புதுப்பொலிவுடன் வாசிக்க தயாரா? தங்கள் மேலான எண்ணங்களை பகிருங்கள்! | ||||||||||
அவ்வை தமிழ்ச் சங்கத்தின் இந்த மின்னஞ்சல் சேவை பல ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே. அவ்வப்போது (சென்ற ஒரு மாதமாக ஏற்பட்டதைப்போல) இதில் தடங்கல் ஏற்பட்டாலும் இதை விடாமல் தொடர்ந்து செயல்படுத்திக்கொண்டிருக்கிறோம். அடுத்த கட்டமாக இந்த மின்னஞ்சல் சேவையை ஆகஸ்ட் 1 முதல் புதுப்பொலிவுடன் வாசகர்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளோம். வாசகர்கள் தங்களின் மேலான எண்ணங்களை avvaitamilsangam@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். | ||||||||||
நூல் அறிமுகம் - "சீதை பேசுகிறேன்" | ||||||||||
வெங்கட் கிருஷ்ணமாச்சாரி எழுதிய "சீதை பேசுகிறேன்" எனும் நூல் இப்போது விற்பனையில். நூல் பற்றி முன்னால் பேராசிரியர் H. பாலசுப்ரமணியம் அவர்கள் தனது அணிந்துரையில் கூறியது... ".....சிறையிலிருந்த செல்வி சீதையின் சொல்லாடலை, ஓராண்டுக் காலமாக அவள் பட்ட அவதிகளையும் துயரங்களையும் சீதாப் பிராட்டியின் வார்த்தைகளிலேயே பதிவு செய்த பெருமைக்குச் சொந்தக்காரராகி விட்டார் எனது நண்பர் கிருஷ்ணமாச்சாரி. இது ஒரு வித்தியாசமான நூல்"
இந்தியாவில் விலை: ரூ.65.00 + தபால் செலவு ரூ.35.00 . மொத்தம் ரூ. 100.00.
இந்நூலின் ஆசிரியர் அவ்வை தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் என்பதை சொல்வதில் பெருமை கொள்கிறோம். ஒவ்வொரு நூலின் விற்பனைத் தொகையிலிருந்தும் ரூ.13.00 அவ்வை தமிழ்ச் சங்கத்திற்கு நன்கொடையாக வழங்கப்படும். நன்னூல் படித்து சங்கத்திற்கும் உதவுங்கள். இந்நூலை வாங்க 9818092191 என்ற எண்ணுக்கு ரூ.100 PAYTM செய்து பின் குறுஞ்செய்தியில் 9818092191 என்ற எண்ணுக்கு உங்கள் முகவரியை அனுப்பவும். | ||||||||||
திரிகடுகம் பாடல் -88 | ||||||||||
பிணி தன்னைத் தின்னுங்கால் தான் வருந்துமாறும், தணிவு இல் பெருங் கூற்று உயிர் உண்ணுமாறும், பிணைச் செல்வம் மாண்பு இன்று இயங்கல், - இம் மூன்றும் புணை இல் நிலை கலக்குமாறு. விளக்கம் நோய் வந்து துன்பப்படுவதும், எமன் உயிரைக் கொண்டு போக வருத்தும் வகையும், செல்வம் இழந்த நிலையும், மன உறுதியைக் குலைப்பவையாகும். பொருள் (இ-ள்.) பிணி - நோயானது, தன்னை - , தின்னுங்கால் - வருத்தும்போது, தான் வருந்தும் ஆறும் - (ஒருவன்) தான் (அதற்கு) வருத்தப்படும் வகையும்; பெருங்கூற்று - பெரிய எமன் உயிர் உண்ணும் ஆறும் - உயிரைக் கொண்டுபோக வருத்தும் வகையும்; பிணை - (சுற்றத்தோர் முதலியோர்) வந்து சேர்வதற்குக் காரணமாகிய, செல்வம் - செல்வமானது, மாண்பு இன்று - நிலையில்லாமல், இயங்கல் ஆறும் - செல்லும் வகையும்; இவைமூன்றும் - ஆகிய இம் மூன்றும், புணையின் - (ஒருவனுக்குப் பிறவிப் பெருங்கடற்கு) மரக்கலமாயுள்ள மனத்தின், நிலை - நிலையை, கலக்கும் - கலக்குகின்ற, ஆறு - வழிகளாம்; (எ-று.)
(க-ரை.) நோயால் வருந்துவதும், உயிர்போக நோவதும் செல்வம் அழிவதும் மனவுறுதியைக் கலக்குவன என்பது.
பிணி : கருத்தாப் பொருள் உணர்த்தும் இகர விகுதி புணர்ந்து கெட்ட தொழிற்பெயர். மாண்பு - நிலைமை. இயங்கல் என்பதன் இறுதியில் உம் தொக்கது, ஆறு என்பதை இயங்கலோடும் கூட்டுக. | ||||||||||
வரலாற்றில் இன்று | ||||||||||
· 1911 – பெருவில் மச்சு பிச்சு என்ற 15ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டையை அமெரிக்க நாடுகாண் பயணி ஹிராம் பிங்கம் கண்டுபிடித்தார். இது பழைய இன்கா பேரரசின் தொலைந்த நகரம் எனக் கருதப்பட்டது. · 1923 - கிரேக்கம், பல்கேரியா மற்றும் முதலாம் உலகப் போரில் பங்குபற்றிய நாடுகள் சுவிட்சர்லாந்தில் கூடி புதிய துருக்கியின் எல்லைகளை நிர்ணயிக்கும் உடன்பாட்டில் கைச்சாத்திட்டனர். · 1924 - பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு (FIDE) பாரிசில் அமைக்கப்பட்டது. · 1969 - அப்பல்லோ 11 பாதுகாப்பாக பசிபிக் கடலில் இறங்கியது. · 1991 - இந்திய அரசு தனது புதிய பொருளாதாரக் கொள்கையை அறிவித்தது. | ||||||||||
செய்திகள் | ||||||||||
பிரிவுபசார விழாவில் பிரணாப் முகர்ஜி உருக்கமான பேச்சு ... - தினத் தந்தி தமிழகத்தின் நிரந்தர கவர்னர் ஆகிறாரா வித்யாசாகர் ராவ்? - விகடன் தமிழக டெல்டா மாவட்டங்களில் நிலம் உள்ளிறங்குகிறதா?.. ஹைட்ரோ ... - Oneindia Tamil தியாகி சுப்பிரமணிய சிவா நினைவு நாள்: மணிமண்டபத்தில் அஞ்சலி - தினமணி ஓ.பன்னீர் செல்வம் மற்றும் தமிழக அமைச்சர்கள் டெல்லி பயணம்! - விகடன் நூலகத்தில் வாசகர் வட்ட சிறப்புக் கூட்டம் - தினமணி மருந்து வணிகர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் - தினமலர் நீட் தேர்வுக்கான கேள்வித்தாள் அனைத்து மொழிகளிலும் ஒரே ... - மாலை மலர்
| ||||||||||
வீடு வாடகைக்கு |
| |||||||||
2 BHK (2 Bedroom,1 Big Drawing/Dinning Room), 2 Big Varandah, at C Block Sector 19 Noida Contact N K IYER, 9873711601 |
| |||||||||
REQUIRED SOUTH INDIAN ARTISTS FOR A FEATURE FILM CASTING IN DELHI A film production team is casting for a feature film in Delhi which requires the characters from South India. The specific age category in which the characters required are between 35 to 45 yrs old. Anyone interested can send their pictures with contact numbers at jogifilm19@gmail.com. If found suitable would be called for an audition. |
| |||||||||
நம்மை சுற்றி |
| |||||||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact |
| |||||
7th August, 2017, Monday | Sri Devi Kamakshi Mandir, A-11, Aruna Asaf Ali Marg, New Delhi | Aadi Paurnami | Sri Devi Kamakshi Mandir, Delhi Kamakoti Kamakshi Meditation & Cultural Centre | 011-26867240, 26520202, 41802507 |
| |||||
8th August, 2017, Tuesday | Sri Devi Kamakshi Mandir, A-11, Aruna Asaf Ali Marg, New Delhi | 83rd Jayanthi Celebrations of H.H. Sri Sri Jayendra Saraswathi Sankaracharya Swamigal | Sri Devi Kamakshi Mandir, Delhi Kamakoti Kamakshi Meditation & Cultural Centre | 011-26867240, 26520202, 41802507 |
| |||||
11th August, 2017, Friday | Sri Devi Kamakshi Mandir, A-11, Aruna Asaf Ali Marg, New Delhi | Maha Sankatahara Chaturthi | Sri Devi Kamakshi Mandir, Delhi Kamakoti Kamakshi Meditation & Cultural Centre | 011-26867240, 26520202, 41802507 |
| |||||
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
| |||||||||
|
| |||||||||
No comments:
Post a Comment