21-7-2017 "News Letter" from Avvai Tamil Sangam Is this mail not displaying correctly? View it in your browser | ||||||||||
அவ்வைதமிழ்ச்சங்கம் ஆடி 5, (வெள்ளி), திருவள்ளுவராண்டு 2047, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com Be a member of ATS| Friend on Facebook | Forward to a Friend | ||||||||||
அவ்வை தமிழ்ச் சங்கம் மின்னஞ்சல் சேவை – புதுப்பொலிவுடன் வாசிக்க தயாரா? தங்கள் மேலான எண்ணங்களை பகிருங்கள்! | ||||||||||
அவ்வை தமிழ்ச் சங்கத்தின் இந்த மின்னஞ்சல் சேவை பல ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே. அவ்வப்போது (சென்ற ஒரு மாதமாக ஏற்பட்டதைப்போல) இதில் தடங்கல் ஏற்பட்டாலும் இதை விடாமல் தொடர்ந்து செயல்படுத்திக்கொண்டிருக்கிறோம். அடுத்த கட்டமாக இந்த மின்னஞ்சல் சேவையை ஆகஸ்ட் 1 முதல் புதுப்பொலிவுடன் வாசகர்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளோம். வாசகர்கள் தங்களின் மேலான எண்ணங்களை avvaitamilsangam@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். | ||||||||||
நூல் அறிமுகம் - "சீதை பேசுகிறேன்" | ||||||||||
வெங்கட் கிருஷ்ணமாச்சாரி எழுதிய "சீதை பேசுகிறேன்" எனும் நூல் இப்போது விற்பனையில். நூல் பற்றி முன்னால் பேராசிரியர் H. பாலசுப்ரமணியம் அவர்கள் தனது அணிந்துரையில் கூறியது... ".....சிறையிலிருந்த செல்வி சீதையின் சொல்லாடலை, ஓராண்டுக் காலமாக அவள் பட்ட அவதிகளையும் துயரங்களையும் சீதாப் பிராட்டியின் வார்த்தைகளிலேயே பதிவு செய்த பெருமைக்குச் சொந்தக்காரராகி விட்டார் எனது நண்பர் கிருஷ்ணமாச்சாரி. இது ஒரு வித்தியாசமான நூல்"
இந்தியாவில் விலை: ரூ.65.00 + தபால் செலவு ரூ.35.00 . மொத்தம் ரூ. 100.00.
இந்நூலின் ஆசிரியர் அவ்வை தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் என்பதை சொல்வதில் பெருமை கொள்கிறோம். ஒவ்வொரு நூலின் விற்பனைத் தொகையிலிருந்தும் ரூ.13.00 அவ்வை தமிழ்ச் சங்கத்திற்கு நன்கொடையாக வழங்கப்படும். நன்னூல் படித்து சங்கத்திற்கும் உதவுங்கள். இந்நூலை வாங்க 9818092191 என்ற எண்ணுக்கு ரூ.100 PAYTM செய்து பின் குறுஞ்செய்தியில் 9818092191 என்ற எண்ணுக்கு உங்கள் முகவரியை அனுப்பவும். | ||||||||||
திரிகடுகம் பாடல் -87 | ||||||||||
கொல்வது தான அஞ்சான் வேண்டலும், கல்விக்கு அகன்ற இனம் புகுவானும், இருந்து விழு நிதி குன்று விப்பானும், - இம் மூவர் முழு மக்கள் ஆகற்பாலார். விளக்கம் ஓருயிரைக் கொல்வதற்கு அஞ்சாதவனும், கல்லாதவர் கூட்டத்தோடு சேர்வதும், ஒரு முயற்சியும் செய்யாமல் இருக்கின்ற செல்வத்தை அழிப்பவனும், மூடர்கள் ஆவார். பொருள் (இ-ள்.) கொல்வது - (ஒருயிரைக்) கொல்வதற்கு, தான் அஞ்சான் - தான் அஞ்சாதவனாகி, வேண்டலும் - அதனைச் செய்ய விரும்புதலும்; கல்விக்கு -; அகன்ற - நீக்கமாகிய, இனம் - கூட்டத்திலே, புகுவானும் - நுழைகின்றவனும்; இருந்து - (ஒரு முயற்சியும்) செய்யாதவனா யிருந்து, விழு நிதி - (முன்னுள்ள) பெருஞ் செல்வத்தை, குன்றுவிப்பானும் - (செலவு செய்து) குறைவிப்பவனும்; இ மூவர் - ஆகிய இம் மூவரும், முழுமக்கள் - மூடர்கள், ஆகல்பாலர் - ஆகுதலாகிய தன்மையை யுடையார்; (ஏ-று.)
(க-ரை.) அஞ்சாது ஓருயிரைக் கொலை புரியக் கருதுவதும், படிப்பிற் பற்றற்றவரோடு சேர்வதும், முன்னோர் பொருளைப் பெருக்காமல் செலவழிப்பதும் மூடர் செய்கை என்பதாம்.
கொல்வது : தொழிற்பெயர். அஞ்சான் : முற்றெச்சம். கல்விக்கு : கு உருபு நீக்கப் பொருளில் வந்தது. அறிவின்மையால் மக்கட்டன்மையில் குறைந்தவரை முழுமக்கள் என்றது மங்கல வழக்கு. இதை இலக்கணமுடையதாகக் கொண்டு அறிவு நுழையப் புரையில்லாத மக்கள் எனப் பொருள் கூறுவாருமுண்டு. பாலார் : பண்படியாகப் பிறந்த பெயர். | ||||||||||
வரலாற்றில் இன்று | ||||||||||
· 1961 - நாசாவின் மனிதரை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தில் இரண்டாவது பயணம் மேர்க்குரி-ரெட்ஸ்டோன் 4. கஸ் கிரிசம் என்பவர் விண்வெளிக்குப் பயணித்தார். · 1969 - நீல் ஆம்ஸ்ட்ராங், எட்வின் ஆல்ட்றின் ஆகியோர் அப்பல்லோ 11 விண்கலத்தில் சென்று சந்திரனில் நடந்த முதல் மனிதர் என்ற புகழைப் பெற்றனர். · 2007 - ஹரி பொட்டர் தொடர் நாவலின் கடைசிப் பாகம் வெளிவந்தது. | ||||||||||
செய்திகள் | ||||||||||
14-ஆவது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் - தினமணி ராகு - கேது பெயர்ச்சி பொதுப்பலன்கள் (27.07.2017 முதல் 13.02.2019 வரை) - தி இந்து சிறையில் சசியை சந்திக்க தினகரனுக்கு அனுமதி மறுப்பு - தினமலர் பிரதமர் மோடி, மத்திய மந்திரிகளுடன் தமிழக அமைச்சர்கள் சந்திப்பு - மாலை மலர் கால்நடை மருத்துவ கலந்தாய்வில் பரபரப்பு: அமைச்சரை ... - தினத் தந்தி தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு மீண்டும் ... - விகடன் சின்னமலை - தேனாம்பேட்டை இடையே மெட்ரோ ரயில் சோதனை ... - தினமணி தஞ்சாவூரில் தீ விபத்து... குடிசைகள் எரிந்து நாசம்!? - விகடன் போக்குவரத்துக்கழக ஊழியர் பிரச்னைக்கு தீர்வுகாண வைகோ ... - தினமணி வேகத்தடையால் தினமும் 9 பேர் பலி: கட்கரி - தினமலர் கடலில் மூழ்கிய சரக்குக் கப்பல்..! 11 ஊழியர்கள் தவிப்பு - விகடன் இலங்கை:அந்த 3 நாள் அவஸ்தை... பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் லீவ் ... - Oneindia Tamil
| ||||||||||
REQUIRED SOUTH INDIAN ARTISTS FOR A FEATURE FILM CASTING IN DELHI A film production team is casting for a feature film in Delhi which requires the characters from South India. The specific age category in which the characters required are between 35 to 45 yrs old. Anyone interested can send their pictures with contact numbers at jogifilm19@gmail.com. If found suitable would be called for an audition. |
| |||||||||
நம்மை சுற்றி |
| |||||||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact |
| |||||
21-7-2017 | உலகத்தமிழ் சங்க பெருந்திட்ட வளாகம், மதுரை | தமிழ் நிலாக் கவியரங்கம் | உலகத்தமிழ் சங்கம் மற்றும் சங்கத் தமிழ் கவிதை பூங்கா முகநூல் குழுமம் | உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை, தொலைபேசி : 0452-2530766 |
| |||||
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
| |||||||||
|
| |||||||||
No comments:
Post a Comment